Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ம‌னச் சோர்வினால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்க‍ப்படும் ஆண்கள் – அதிர்ச்சி தகவல்

பெரும்பாலான ஆண்கள் தங்கள் உணர்வுக் கொந்தளிப்பை வேறு யாரிடமும் வெளிப்படுத்தத் தயங்குவா ர்கள். சமீபத்தில் நடந்த சில ஆராய்ச்சி கள் மனச்சோர்வி னால், ஆண்களைப் போல இருமடங்கு பெண்கள் பாதிக்கப் படுகின்றனர் என்கிறது. ஆனால் இதனா ல் பாதிக்கப்படும் ஆண்கள் குறித்த விவ ரங்கள் வெளிப்படையாகத் தெரியவில் லை என்பதும் உண்மை.

என்ன காரணம்? மனச்சோர்வு இருப்பவ ர்கள் எப்படி அதை வெளிப்படுத்துவார்க ள் என்று நமக்கு ஒரு ஐடியா இருக்கும் இல்லையா? ஆனால் மன ச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஆண்களில் பலரும் இந்த விதங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிக்கூறுவது அயோவா பல்கலைக்கழகத்தின் மன நல மருத்துவர்களான ராபி னோ மற்றும் கோச்ரன் ஆகியோர் கள்தான். இவர்கள் இருவரும் ஆண்களின் மனவியல் சிக்கல்க ள் குறித்து பல முக்கிய நூல்க ளை எழுதியுள்ளனர்.

இரு வருடங்களுக்கு முன் ‘அமெ ரிக்கன் ஜானல் ஆஃப் மெடிகல் ஜெனெடிக்ஸ்’ என்ற இதழில் ஒரு முக்கியமான கட்டுரை வெளி யாகி இருந்தது. இதில் ஆண்களின் மனச்சோர்வுக்கும் பெண்களின் மனச்சோர்வுக்கும் இடையே மர பணு ரீதியாகவே வேறுபாடுகள் உண்டு என்று குறிப்பிடப்பட்டி ருந்தது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கள் ஒரு மிகப்பெரும் மனச் சோர்வு சிக்கல் தொடர்பான 19 குரோ மொசோம் பகுதிகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண் டனர். இவற்றில் மூன்றுதான் சம்பந்தப்பட்ட ஆண் , பெண் இருவருக்கும் ஒரே மாதிரி இரு ந்தது. மற்றவை ஆண்களிடம் ஒருவகை பாதிப்பையும், பெ ண்களிடம் ஒருவகை பாதிப் பையும் உணர்த்தியது.

ஆண்கள் பொதுவாக அழுவதில்லை.அழுவது மட்டுமல்ல, வருத் தத்தை வெளிக்காட்டுவதையே ஆண்கள் கௌரவக் குறைவாக கருதுகிறார்கள். இதனால், மனச்சோர்வு கொண்ட ஆண்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம்தான்.

பின் ஆண்களின் மன இறுக்கம் எப்படித் தான் வெளிப்படும்? பெரும் பாலும் உட ல்நலக் கோளாறுகளின் மூலம்தான் இது வெளிப்படுகி றது. தலைவலி அதில் முக்கியமானது. வயிற்றுக் கோளாறு இன்னொரு வெளிப்பாடு. இல்லற உற வில் நாட்டம் குறைந்து போவது வேறு ஒருவகை.

மனச்சோர்வு எனும் மனநோயால் பாதி க்கப்படும் ஆண், அடிக்கடி கோபம் கொ ள்ளலாம். தொட்டதெற்கெல்லாம் எரிந் து விழலாம். அலுவலகத்தில் திடீரென் று வேலை செய்யமுடியாமல் மனம் மர த்துப்போனது போல் இருக்கும். சீரான தூக்கம் இருக்காது. உள்ள தை வெளிப்படுத்தாமல் இருப்பதும், சிகிச்சைக்கு மறு ப்பதும் சில சமயம் உயிருக்கே ஆபத்தாக இருக்கலாம். தீவிர மனச்சோர்வு கொண்ட ஆண்கள் பெண்களை விட அதிகளவில் தற் கொலை செய்து கொள்கிறார்கள் எனும் நிலை அமெரிக்காவில் நிலவுகிறது (ஆனால் தற்கொலை முயற் சியில் ஈடுபடுபவர்கள் அதிக ம் பெண் கள்தான். ‘வெற்றி’ வாய்ப்பில் ஆண்கள் ஸ்கோ ர் செய் கிறார்கள்.

ஆண்களே, உங்களுக்கு மன இறுக்கம் தோன்றி, தொடர்ந் தால் என்ன செய்ய வேண்டு ம் தெரியுமா?

முதலில் இது அவமானப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த தவறும் செய்துவிடவில்லை. மரபணு, சுற்றுப்புற சூழல் (அதாவது உங்களால் கட்டுப்படுத்த இய லாதவை) உங்கள் மனச்சோர்வுக்குக் காரணமாக அமைந்தி ருக்கக் கூடும்.

உடனே மனநல மருத்துவரிடம் ஓட வேண்டும் என்பதில்லை. மன திற்கு உற்சாகம் அளிக்கும் வகை யில் ஏதாவது மாற்றங்களை கொ ண்டு வரமுடியுமா என்று பாருங் கள். ஒரு சின்னச் சுற்றுலா, இடம் மாறுதல், மொட்டை மாடியில் உணவு, அலுவலகத்தில் வேறு தி சையில் உங்கள் இறுக்கையை மாற்றிக்கொள்வது போன்ற விஷ யங்கள்கூட இதில் உதவலாம்.

மனச்சோர்வு தொடர்ந்தால், உங்கள் குடும்ப டாக்டரை அணுகலா ம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் போன்ற காரணங்கள் கூட மனச் சோர்வுக்கு வழி வகுக்கலாம். காரணங்களை கட்டுக்குள் கொண்டு வந்தாலே மனச்சோர்வு மறைந்து விடும்.

அப்படியும் மனச்சோர்வு தொடரு கிறது என்றால் தயங்காமல் மன நல மருத்துவரையோ, மனவிய ல் மருத்துவரையோ அணுகுங்க ள். அவர்களின் சிகிச்சைக்கு உட ன்படுங்கள்.

கூடியமட்டிலும் சில பயிற்சிக ளை நாள்தோறும் கடைப்பிடித்து வந்தால் சைக்கோடிக் மனச்சோ ர்வு நோய் நம்மை அண்டாது பாதுகாக்க முடியும். அவற்றுள் சில:

அறிகுறிகள்:

நம்பிக்கைக்குரியவர்களே கை விட்டது போன்ற உணர்வு அடி க்கடி எழுதல், மனதை ஒரு முக ப்படுத்த முடியாமை, சின்னச் சின்ன விஷயங்களில் கூட தீர்மானம் எடுக்க முடியா மை, சுற்றியிருப்பவர்களுடன் சகஜ மாகப் பேசிப்பழக முடியாத நிலை, பொழுது போக்குகளில் ஆர்வமின்மை, யாரோடும் ஒத்துப் போகாமல் எதையும் எதிர்க்கும் மனப்பான்மை, அமைதியின்மை, எரிந்து விழுதல், பசி யின்மை, பாலியலில் ஈடுபாடின்மை, அடிக்கடி தலையில் பாரம், என்று இந்த நோய்க்கு பல அறிகுறிகள் இருக்கின்றன.

மூளையில் உள்ள செரட்டோனின் என்ற இரசாயனப் பொருளின் மாற்றத்திற்குத் தக்கவாறுதான் மனச்சோர்வு மனிதனைத் தாக்கு கிறது. அந்த இரசாயனத்தை சமநிலையில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள், சிகிச்சைகள் இப் போது எல்லா நாடுகளிலும் மே ற்கொ ள்ளப்படுகின்ற

1. உடற் பயிற்சிகள்:

காலையில் எழுந்ததும். பூனை தன் உடலை நீட்டி சோம்பல் முறிப்பதைப் பார்த்திருக்கி றோம். இதேபோல் நாமும் உட லை நீட்டி பயிற்சி செய்தால் மூட்டுக்களிலும் தசைகளிலும் உள்ள விரைப்புகள் நீங்கி, மூளை க்கு நிறைய ரத்தம் பாயும். சுறுசுறுப்புத் தானாக வரும்.

இது தவிர, ஸ்கிப்பிங், ஓடுதல், அதிகாலை நடைப்பயிற்சி ஆகிய வை அவசியம்.

2. யோகா, தியானம்:

ஒருவருக்குப் போதிய நேரமும் விரு ப்பமும் இருந்து யோகா செய்தால் போதும், உளச்சோர்வு நோய் அருகில் வரவே வராது. ஏனென்றால் உள்ளத் தையும் உடலையும் ஒருங்கே இணை யச் செய்வது யோகா பயிற்சி மட்டு மே.

அதேபோல், குளித்து முடித்தவுடன், கண்களை மூடிக்கொண்டு, மனதில் வரும் எந்தப் பொருளின் மீதும் மன தைச் செலுத்தி ஒரு முகப்படுத்த வே ண்டும். இவ்வாறு சில நிமிடங்கள் தியானம் செய்வதால் மனதிற்குப் புத் துணர்ச்சியும், சிந்தனைத் தெளிவும் கிட்டும்.

3. உணவில் கட்டுப்பாடு:

எடை அதிகரிப்பும், உடல் பருமனும்தான் சைக்கோடிக் மனச்சோ ர்வு நோய்க்கு ஆரம்பகால நுழைவாயில்கள் (நோய் தா க்கிய பின்னர் உடல் இளைத் துவிடும் என்பது வேறு விஷ யம்). அதற்குக் கட்டுப்பாடா ன உணவுதான் சிறந்த சிகிச் சை. காய்கறிகள், பழங்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அரிசியில் செய்ய ப்பட்ட உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நெய், பாலாடைகள் ஆகியவற்றை த் தவிர்க்க வேண்டும்.

4. புகை, மது கூடாது:

புகை பிடிப்பதால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படும். அதனால் சைக்கோடிக் மனச் சோர்வு நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். இந் நோய் தாக்கப்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி பல விபரீத முடி வுகளை எடுப்பது வாடிக்கையாகி விட்ட து. அதனால் இரண்டுமே முற்றிலும் தவிர் க்கப்பட வேண்டும்.

5. நிம்மதியான தூக்கம்:

ஒருநாளைக்கு 6 மணி நேரமாவது நல்ல தூக்கத்தில் இருக்க வேண்டிய து அவசியம். களைத்துப்போன உட லுக்கும் மனதிற்கும் நல்ல தூக்கத் தால்தான் புத்துணர்ச்சி தர முடியும் . குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு ப்போவதை வழக்கமாக்கிக் கொள் ள வேண்டும்.

6. வேலையில் அக்கறை:

செய்யும் வேலையில் அதிக அக்கறை எடு த்து ஒருமனத்துடன் செயல்பட்டால் மனச் சோர்வுக்கு இடமே இருக்காது. வேலை நேர த்தைத் திட்டமிடத் தெரியாதது, அளவுக்கு அதிகமான வேலைப் பளுவை இழுத்துப் போட்டுக்கொள்வது, மனச்சோர்வை தூண் டக் கூடியவை. இவற்றைக் கட்டாயம் தவி ர்க்க வேண்டும்.

7. போட்டி மனப்பான்மையைத் தவிர்த்தல்:

தேவையற்ற, முறையற்ற பேராசையையும் போட்டியையும் தவி ர்க்க வேண்டும். போட்டி மனப்பான்மை வளர வளர, மனம் பலவீனப்படுவதோடு, எப்போதும் எதிர்ப்புகளையும் போராட்ட ங்களையும் சச்சரவுகளையுமே சந்திக்க வேண்டிவரும். இவைதான் பலருக்கு மன ச்சோர்வு நோய் வரக் காரணம்.

8. சமுதாயத்தோடு ஒத்துப்போதல்:

நல்ல சமூக உறவை வளர்த்து க்கொள்ள வேண்டும். அதுதான் இரு தரப்பிலும் நல்ல துணை யை, தோழமையை உருவாக்கு ம். உறவுகளுடன் சேர்ந்து பொழு துபோக்கு அம்சங்களில் கலந்து கொள்வது, இசை, பாட்டு என்று கேட்பதும், கற்றுக்கொள்வதும் சமூக உறவோடு கலப்பதற்கு உதவும்.

சைக்கோடிக் மனச்சோர்வு அளவிற்கு அதிகமாக இருக்கும்போது, நரம்பு மண்டலம் சிதைந்து விடும். அச்சம், சோர்வு, உணர்ச்சியை க் கட்டுப்படுத்த முடியாமை என்று தோன்றி பல விபரீத செயல்க ளுக்கு இட்டுச் செல்லும். அதனால், மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டவு டன், ஒரு நல்ல மருத்துவரிடம் சென் று, உடலையும் மனதையும் முழு செ க்கப் செய்துகொள்வது பல வழிகளி லும் உதவக்கூடும்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: