எந்த மொழியாக இருந்தாலும் சரி, எந்த பாடமாக இருந்தாலும் சரி, பேசினாலோ அல்லது படித்தா லோ அதன் உண்மையான அர்த் தம் என்ன வென்று தெரிந்து கொண்டு பேச அல்லது படிக்க வேண்டும் என்பதை உணர்த்து ம் விதமாகவும் அப்படி அர்த்தம் தெரியாமல் பேசினாலோ படித் தாலோ ஏற்படும் விபரீதத்தையும் பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் அவர்கள் நண்பன் படம் மூலமாக, நண்பன் திரைப்படத்தில் ஒரு காட்சியில்
நகைச்சுவை நடிகர் சத்திய னை பேச வைத்து எடுத்துக் காட்டிய விதம் அருமையாக உள்ளது. (நண்பன் திரைப் படத்தில் சத்தியன் அவர்களது கதா பாத்திரம், தமிழின் இனிமையும், அதன் அர்த்தங்களும் தெரியாமல் மேடையில் பேசியிருப்பார். அக் காட்சியை நீங்களும் காணுங்கள் சகோதர சகோதரிகளே!
இத்திரைப்படத்தில் இளைய தளபதி விஜய், ராம் புகழ் ஜீவா, ரோஜாக் கூட்டம் ஜீவா, புரட்சித் தமிழன் சத்தியராஜ், நகைச்சுவை வேந்தன் சத்தியன், அழகு பதுமை நடிகை இலியானா உட்பட மற்றும் பலர் நடித்து வெளிவந்த நண்பன் திரைப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடி, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.
-விதை2விருட்சம்