Wednesday, June 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தங்கத்தைவிட அதிக மதிப்பு கொண்ட பிளாட்டின நகைகள்

தங்கத்தைவிட அதிக மதிப்பு கொண்டவை வைரமும், பிளாட்டின மும் தான். இதில் வைரத்தின் விலை மிக அதிகம். ஆனால், பிளாட்டினத்தின் விலை இன் றைக்கு தங்கத்தைவிட குறை வாக உள்ளது. இதனாலேயே பலரும் பிளாட்டினம் நகைக ளை வாங்கத் தொடங்கி இருப் பது ஆச்சரியம் தரும் வளர்ச்சி. கடந்த அட்சய திருதியை அன்று பிளாட்டினம் நகைக ளின் விற்பனை 25% அதிகரித் துள்ளதே இதற்கு ஒரு சான்று.

திடீரென பிளாட்டினத்துக்கு மவுசு வர என்ன காரணம், தங்கம் போல பிளாட்டினமும் முதலீடு செய்வதற்கு ஏற்றதுதானா என்கிற கேள்விகளுக்கு பதில் காணும்முன், பிளாட்டினத்தின் வரலாற்றை சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

பிளாட்டினத்தின் கதை!

கி.மு. 700-ம் ஆண்டிலேயே வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது இந்த பிளாட்டினம். பதினாறாம் நூற்றா ண்டில் ஸ்பானிஷ் நாட்டில் பிளாட்டினத் தின் பயன்பாடு பெரிய அளவில் உருவா னது. ஸ்பானிஷ் மக்கள் அதை பிளாட் டினா என்று அழைத்தனர். சிறிய வெள்ளி என இதற்கு அர்த்தம். முதல் உலகப் போ ரின்போது, உலக அளவில் மிகச் சிறந்த பிளாட்டினத்தை உற்பத்தி செய்யும் நாடாக திகழ்ந்தது கனடா. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பல துறைகளில் பிளாட்டினம் பயன்படுத்துவது அதிகரித் தது. குறிப்பாக, பெட்ரோலியம் சுத்திக ரிப்பு, பிளாஸ்ட்டிக் துறைகளில் பிளாட்டி னத்தின் தேவை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

ஆபரணத் தேவை!

ஜப்பானில் 1960-ல் பிளாட்டினத்தை நகையாக அணிய விரும்பி னார்கள் மக்கள். பிளாட்டினத்தின் சுத்தத் தன்மை, அதன் வெண் மையான நிறம் மற்றும் சமுதாயத்தில் மதிப்பு போன்ற காரணங்களால் பிளா ட்டினத்தை வாங்க விரும்பினார்கள் மக் கள். அதன் பிறகு சுவிட்சர்லாந்து, இத்தாலி, லண்டன், அமெரிக்கா மற்றும் சீனாவில் பிளாட்டின ஆபரணங்களை மக்கள் விரும்பத் தொடங்கினார்கள். 1980-களில் இதன் விலை அதிகரித்த போது பார், காயின்கள் மற்றும் ஆபரண ங்கள் என பிஸிக்கல் பிளாட்டினத்தி ற்கு தேவை ஏற்பட்டது. உலகளவில் கடந்த வருடத்தில் 45-50% ஆபரணத் தேவையில் பிளாட்டினம் அதிகரித்துள்ளது. இந்தியா வில் பிளாட்டினத்திற்கான தேவை ஆண்டுக்கு 20% அதிகரித்து வருகி றது.

தொழிற்சாலை பயன்பாடுகள்!

மருத்துவத் துறையில் பிளாட்டினத் தின் பயன்பாடு 1990-ம் ஆண்டு களில் அதிகரிக்க துவங்கியது. புற்றுநோய், கார்டியாக் நோய்களை குணப்படுத்த வும் மற்றும் செயற்கை பற்கள் தயாரி க்கவும் பிளாட் டினம் பயன்படுத்தப் பட்டது. கணினிகளில் அதிகளவு தகவல்களை பதிந்து வைக்க ஹார்டு டிஸ்க்குகளில் காந்த அடுக்காகப் பய ன்படுகிறது. எலெக்ட்ரானிக் பொருட் கள், செராமிக் சிப்கள், சர்க்யூட்டுகள், மோல்டிங் கண்ணாடிகள், சிந்தெட்டிக் ரப்பர், கார் இன்ஜின் கன்ட்ரோல் சிஸ்டம், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல துறைகளில் பயன்படுகிறது பிளாட்டினம் மற்றும் அதன் துணை உலோகங்கள். எல்.இ.டி. டி.வி. மற்றும் இதர புதிய தொழில்நுட்ப வளர்ச்சியால் தொழிற்சாலை தேவையில் 48% பிளாட்டினத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.


ஏன் பிளாட்டினம் எடுபடவில்லை?

தங்கத்தைவிட அதிக மதிப்பு கொண்டதாக இருந்தாலும், பிளாட்டி னம் நகைகள் நம் மக்களிடம் பெரிய அளவில் எடுபடவில்லை. இதற்கு பல காரணங்கள். முதல் காரணம், பண நெருக்கடி வந்தா ல் தங்கம் மாதிரி இதை அடகு வைக்க முடியாது. உடனடியாக விற்க வும் முடியாது. இரண்டா வது காரணம், கடந்த பல ஆண் டு கால மாக தங்க நகைகளை பார்த்துப் பார்த்து, அதையே அழ கானதாக நினைக்கும் மக்கள் வெள்ளை நிற பிளாட்டினத்தை ஏற்றுக் கொள்ள இன்னும் நாளா கும். மூன்றாவதாக, பெண்கள் மட்டுமே அணி ந்து கொள்ளும் நகை யாக மட்டுமே இருக்கிறது பிளாட்டினம்.

மக்கள் கருத்து!

பிளாட்டினம் நகைகள் பற்றி என்ன நினைக்கிறார்கள் என சில பெண்களிடம் கருத்து கேட்டோம். நாம் முதலில் கேட்டது கோபி செட்டி பாளையம் காயத்ரியி டம்.

”எனக்கு பிளாட்டினம் நகை ரொம்பப் பிடிக்கும். காரணம், அதுல நிறைய டிசைன் இருக் கும். முதலில் ஃபேஷனுக் காக மட்டும் பிளாட்டினம் வாங்கி னேன். இப்ப முதலீட்டு அடிப்ப டையிலும் வாங்கப் போறேன்” என்றார்.

கடலூர் ஜெயந்தியோ, ”என்னிடம் மோதிரம், செயின், தோடு என ஒரு செட் பிளாட்டினம் நகை இருக்கு. மீட்டிங், அலுவலக நிகழ்ச் சிகள் போன்றவற்றுக்கு பிளாட்டினம் போடும்போது ரிச் லுக் கிடை க்குது. பலபேரு பிளாட்டினம் நகை கறுத்துடு மோன்னு பயப் படறாங்க. உண்மையில பிளா ட்டினம் நகை கறுக்காது. ஆனா, முதலீட்டு அடிப்படை யில என் சாய்ஸ் தங்கம்தான்” என்றார்.

சென்னையைச் சேர்ந்த ஷன்ம தி, ”தங்கம் வாங்கினா அவசர த்து க்குப் பணம் தேவைன்னா அடகு வைக்கலாம். ஆனா, பிளாட்டினம் அப்படி பண்ண முடியா தே! தங்கத்தை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது நிறைய சலுகைகள் தர்றாங்க. பிளாட்டினத்துல அதெல்லாம் கிடை யாது. என் சாய்ஸ் தங்கம்தான்” என்றார்.

செல்வாக்கின் வெளிப்பாடு தான் பிளாட்டினம். நாம் பாரம்பரியமாக வே தங்கத்திற்கு தான் முக்கியத் துவம் கொடுத்து வர்றோம். பிளாட் டினத்தை நம்ம மக்களும் விரும்புற தில்லை. நானும் விரும்புறதில் லை” என்றார் மதுரை சுகன்யா.

மக்கள் ஆதரவு பிளாட்டினத்திற்கு பெரிய அளவில் இல்லை என்ற போ தும், பல முன்னணி நகைக் கடைக ள் பிளாட்டினத்திற்கு தனி செக்ஷன் அமைத்து விற்பனை செய்து வருகி ன்றன.  இந்தியாவில் பிளாட்டினத்திற்கான வரவேற்பு எப்படி உள் ளது? மக்கள் பிளாட்டி னத்தை அதிகளவில் வாங்குகிறார்களா? என பிளாட்டினம் கில்ட் இன்டெர்நேஷனல் நிறுவனத்தின் வர்த்தக மேலாளர் ராஜேஷ் ராஜேந்திர னிடம் கேட்டோம்.

”கடந்த இரண்டு, மூன்று வருட ங்களாக 160 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது பிளாட்டினம். பிளா ட்டினத் தின் மீது நம் மக்களுக்கு ஈர்ப்பு அதிகமாகி உள்ளது. பதினைந்து வயது முதல் நாற்பது வயதுள்ளவர் கள் பிளாட்டினம் வாங்க ஆவ லாக இருக்கிறார்கள். கல்லூரி செல்லும் பெண்கள், பி.பி.ஓ. மற்று ம் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பிளாட்டினம் நகைகளை அணிவதைப் புது ஃபேஷனாக நினைக் கிறார்கள். நிச்சயதார்த்தங்கள், திரு மணங்களில் பிளாட்டினம் மோதிரம் அணிவதை இளைஞர்கள் விரும்புகி றார்கள்.

ஆண்டுக்கு 2,400 டன் தங்கம் கிடைக் கிறது. ஆனால், பிளாட்டினமோ வெ றும் 80 டன் மட்டுமே கிடைக்கிறது. இதனால் அண்மைக்காலம் வரை தங் கத்தைவிட விலை அதிகமாக இருந்தது பிளாட் டினம். ஆனால், இன்றைக்கோ அதன் விலை தங்கத்தைவிட சற்று குறைந்து காண ப்படுகிறது. பிளாட்டினத்திற்கான சந்தை நன்றாக இருப்பதால் இப் போது வாங்க துவங்கலாம்” என்றா ர்.  

பிளாட்டினம் நகைகளை வாங்க விரும் பாதவர்கள், ஆனால் முத லீடு அடிப்படை யில் அதை வாங்கி வைக்க விரும்புகிற வர்களுக்குச் சிறந்தது இ-பிளாட்டின ம்.  இ-கோல்டு, இ-சில்வர் மாதிரி இப் போ து இ-பிளாட்டினத்தையும் அறிமுகம் செ ய்துள்ளது நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சே ஞ்ச்.

இதன் மூலம் ஒரு கிராம் பிளாட்டினத் தைகூட வாங்கலாம். தற் போது ஒரு கிராம் இ-கோல்டு 2,880 ரூபாய்க்கும், பிளாட்டினம் 2,850 ரூபாய்க்கும் வர்த்தக மாகி வருகிறது. இதனால் பிளாட்டின த்தை தற்போது வாங்கும் நேரமாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: