Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தூதுவிடும் இலியானா

கேடியில் அறிமுகமாகி, ரசிகர்களின் ஓரளவு பாராட்டுப் பெற்ற‍ இலியானாவுக்கு ஏனோ தமிழ் சினிமா பாராமுகம் காட்டியது.  இதன் காரணமாக சோர்ந்து போன இலியானா ஆந்திராவிற்கு சென்று, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து  பல வெற்றிகளை குவித்து முன்னணி நடிகை யாக பிரகாசித்தார். தெலுங்கில் புகழின் உச்சி யில் இருந்த இலியானா தமிழ் சினிமாவின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல், உதாசீனம் செய்து வந்தார். அவர், விஜய், ஜீவா, ஸ்ரீகார்ந் த் போன்ற முன்ன‍ணி கதாநாயகர்களுடன் சே ர்ந்து நடித்து, நூறு நாட்களை கடந்து வெற்றி விழா கொண்டாடிய நண்பன் திரைப்படத்தில் மிக‌ நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழில் நடி த்தார். தெலுங்கில் தமன்னா, த்‌ரிஷா, அஞ்சலி, அனுஷ்கா, தாப்ஸி, நயன்தாரா போன் றவர்கள் முன்னணி ஹீரோக்களுடன் அதிகமாக ஜோடி சேர்வதால் இலியானா வின் இடம் காலியாகி வருகிறது. இதனா ல் தமிழ்த் திரை இயக்குனர்களுக்கு‌த் தூதுவிட்டு வருகிறார். அதன் முதல் கட்ட மாகவே லிங்குசாமி, இந்தியில் ‌ ரீமேக் செய்யும் வேட்டையில் ஷாகித் கபூர் ஜோடியாக நடிப்பதாக தகவல். இன்னு மொரு தகவலாய் விரைவில் கார்த்தி , ‌ஜீவா போன்ற இருவருடன் ஜோடி போட வாய்ப்புள்ளதாகவும கசிகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: