Wednesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வ‌ரப்போகுது! வீட்டுக்கு வீடு சோலார்!

சூரியனைப் பார்த்து டைம் சொன்னது அந்தக் காலம்: கரன்ட் கட்டா வதைப் பார்த்து டைம் சொல் வது இந்தக் காலம் – இது சமீப த்தில் எஸ்.எம்.எஸ். மூலம் மொபைல் போனில் பரவிய ஜோக்
நிமிஷத்திற்கு நிமிஷம் கர ன்ட் கட்டாவதால் இன்றைக்கு த் தமிழக மே இருளில் சிக்கித் தவிக்கிறது. இருளை விரட்டி யடிக்க பல ஆயிரம் ரூபாயை செலவழித்து இன்வெர்ட்டரை வாங் கித் தள்ளுகிறார்கள் மக்கள். ஆனால், அந்த இன்வெர்ட்டர் இயங்கத் தேவையான மின்சாரம் இல்லாமல், பல வீடுகளில் அது வீணாகக் கிடக்கிறது.
 
இந்நிலையில் அண்மைக் காலமாக எல்லோர் கவனமும் சூரிய ஒளி மின்சாரம் மீது குவிய ஆரம்பித்திருக் கிறது. பலரும் சூரிய ஒளி மின்சாரத்தைநோ க்கி செல்லத் தொடங்கி இருப்பது ஆச்சரிய மூட் டும் வளர்ச்சி. சூரியஒளி மின்சார உற்பத்தியில் தமிழக அரசாங்கமும் விரைவில் இறங்கப் போவது ஆரோக்கியமா ன விஷயம். 

மின் தட்டுப்பாடு அதிகரித்து வரும் இந்நேரத்தில் நமக்கான மின் சாரத்தை நம் வீடுகளிலேயே தயாரித்துக் கொள்ள வாய்ப்பு உரு வாகி இருக்கிறது. மின் தட்டுப்பா ட்டிற்கான நிரந்தரத் தீர்வாக சோ லார் பவர் நிச்சயமாக இருக்கும்” என்கிறார் மாற்று எரிசக்தி குறித் து ஆய்வு செய்துவரும் பேராசிரி யர் பாலசுப்ரமணியம்.

சோலார் பவர் மூலம் நமது அன் றாட மின் தேவைகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் உண் டா? என்கிற கேள்வியை ஏ அண்ட் டி சோலார்ஸ் இயக்குநர் டி.விஜ யேந்திரனிடம் கேட்டோம். ஏன் இல்லை என்று ஆரம்பித்தவர், அதுபற்றிய பல்வேறு விஷயங் களை எடுத்துச் சொன்னார்.

”சோலார் பவர் மூலம் தொழிற்சாலைகளுக்கான மின் தேவைக ளை மட்டுமல்ல, வீடுகளுக்கா ன மின் தேவைகளையும் தீர் க்க முடியும். இதற்கான ஆரம் பச் செலவு கொஞ்சம் அதிக மாக இருக்கும் என்பது உண் மைதான். ஆனால், ஒரு முறை செலவு செய்தால் அது இருபது, இருபத்தைந்து ஆண் டுகள் வரை வரும். சில சின்ன ச் சின்ன பராமரிப்புச் செலவு கள் தவிர வேறு பெரிய செலவு எதுவும் கிடையாது. வீடு கட்டும் போதே இதற்கான செலவையும் செய்து விட் டால், ஆயுசு முழுக்க மின் தட்டுப்பாடும் இருக்காது. மின் கட்டணம் கட்ட வேண்டிய அவ சியமும் இருக்காது.

நாளன்றுக்கு மூன்று முதல் நான்கு யூனிட்கள் வரை மின் சாரத் தைச் செலவழிக்கிற வீடுக ளுக்கு ஒரு கிலோவாட் திறன் கொண்ட ஒரு யூனிட் சோலார் பேனல் போதும். அதைவிட அதிக மாகப் பயன் படுத்தும் வீடுகளில் இரண்டு கிலோவாட் அல்லது அத ற்கு மேலும் யூனிட்களை அமை த்துக் கொள்ளலாம். ஐந்து கிலோ வாட் வரை யூனிட் அமைத்துக் கொண்டால், மோட்டார்கள், ஏசி, மிக் ஸி, கிரைண்டர் என அனைத்து சாதனங்களையும் இயக்க முடியும்.

சூரியஒளி மின்சாரத்தை இரண்டு விதங்களில் பயன்படுத்தலாம். ஒன்று, சோலார் பேனலிலிருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து பயன் படுத்துவது. மற்றொன்று, பேட்டரியில் சேமித்து பயன்படுத் துவது. பகல் நேரங்களில் நேரடி யாகவே பயன்படுத்திக்கொண்டு, இரவு நேரங்களில் பேட்டரி மூல ம் பயன்படுத்திக் கொள்வது நல் லது. சோலார் பவரை இன்னும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் போது அதற்கான செலவு கணிச மாக குறைய வாய்ப்புண்டு” என் றார் அவர்.

இதில் முக்கியமான விஷயம், சூரியஒளி மின்சாரம் மூலம் தயாரி க்கப்படும் மின்சாரத்திற்கு மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தி துறை மானியம் அளிக்கிறது. வீடு கள், தனிநபர்கள், தனியார் நிறுவ னங்கள், மற்றும் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு ஒரு கிலோ வாட் யூனிட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கி றது. அதிகபட்சமாக 200 கிலோவாட் வரை அனுமதிக்கப்படுகிறது.

கர்நாடக மாநில அரசாங்கம் தற் போது சூரியஒளி மின்சாரத்தைக் கிட்டத்தட்ட கட்டாயமாக்கி வரு கிறது. அங்கு புதிதாக வீடு கட்ட பிளான் அப்ரூவல் கேட்டுப் போ னால், சூரியஒளி மூலம் மின்சாரம் பெறுவதற்கான வசதி இரு ந்தால் மட்டுமே அனுமதி தருகிறார்க ளாம்.

உதயா எனர்ஜி போட்டோவோல்டைக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உதயகுமாரிடம் பேசி னோம்.

”மின் தட்டுப்பாடு பிரச்னையை சமாளிக்க எல்லோரும் இன்வெ ர்ட்டர் வாங்குகிறார்கள்.   இன்வெ ர்ட்டர் என்பது ஒரு மின் கடத்தி தான். மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாற்று எரிசக்தி கிடை யாது. மின்சாரம் இருக்கும் போது சார்ஜ் ஏற்றிக் கொண்டு பவர்கட் ஆனதும் அந்த சார்ஜ் மூலம் இய ங்குகிறது. ஆனால், சோலார் சிஸ்டம் என்பது மின்சா ரத்தை உற் பத்தி செய்யும் சாதனம். இந்த தொழில்நுட்பம் 25 வருடமாக இருக்கிறது. இதற்கான உற்பத்தி செலவு முன்பு அதிகமாக இருந் தது.

இப்போது இரண்டு மடங்கு குறைந்துவிட்டது. இதைவி ட விலை குறைவு என்ப தாலேயே இன்வெர்ட்டரை வாங்கித் தள்ளுகிறார்கள் மக்கள். வாங்கிய பிறகு பிர யோஜனம் இல்லையே என் று அவதிப் படுகிறார்கள்.

மழைக் காலத்தில் சூரிய வெளிச்சம் இல்லாதபோது எப்படி மின்சா ரம் தயாரிப்பது என்கிற சந்தேகம் மக்களிடம் இருக்கிறது. வெயில் அடித்தால் தான் சோ லார் கருவி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது தவறு. மைனஸ் 35 டிகிரியிலும் மின் சாரம் பெற முடியும். இந்த பேனல் மீது மழைத் தண்ணீர் விழுந்தாலும் எந்த வித பாதிப் பும் இருக்காது.

500 வாட்ஸ் மூலம் இரண்ட ரை யூனிட் மின்சாரம் பெற முடியும். இதன் மூலம் அத்தி யாவசிய வீட்டுத் தேவைகளை எளிதில் சமாளி க்க முடியும். இதற்கு 50,000 ரூபாய் செலவாகும்” என்றார் அவர்.

மின்சாரப் பிரச்னைக்கு அரசாங்கம் தீர்வு காணும் வரை காத்திரு க்காமல் நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயார் செய்து கொள்ள பெஸ்ட் வழி, சோலார் பவர்தான்!

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

3 Comments

  • super nanba naan irandu varudamai en veetil vaikka parthu kondu ullean ithai engu vanguvathu ena theriyamal ullean.naanum malai kalathil eppadi power kidaikum ena santheakam thearthu vittathu…

  • vaduvurkumar

    lawforus போய் பாருங்கள் இன்னும் பல விபரங்கள் கிடைக்ககூடும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: