சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்
தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள்.
சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள அன்னை பாரதமாதா ஆதரவற்றோர் இல்லத்தில் அஜீத் ரசிகர்கள் திரண்டனர்.
அங்குள்ள குழந்தைகள் 300 பேருக்கு இலவச பிரியாணி பொட்டலங்களை வழங்கினார் கள்.
மேலும் சென்னை ஆவடியில் இலவச மருத்துவ முகாம் ஒன் றை ஏற்பாடு செய்த ரசிகர்கள் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க உதவினர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தண் ணீர் பந்தல் திறந்தனர்.
இந்நிநிகழ்ச்சியில் அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகள் புரசை அஜீத் சரவணன், இ.சச்சின் மணி, பி.ஜி. முரளிதரன், என்.வேலு, டி. கிரு ஷ்ணன், பி.ஆனந்தன், டி.ரவி, பி. ஏழுமலை, பி.குமார், மோகன், பத்ம நாபன், சிரஞ்சீவி, சசிகு மார், பாபு, ஜான், புரசை பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அஜித்குமார் ரசிகர் மன்றங்களை கலைத்தும் கூட அவருக்காக பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளது திரை த்துறையில் அஜித்துக்கு தனி மதிப்பீட்டை மேலும் அதிகரித்துள் ளது.