Friday, May 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனிதர்கள் மட்டுமல்ல‍ தெய்வங்களும் கூட காதல் வசப்பட்டிருக்கின்றன‌ – புராணங்கள்

காதல் தெய்வமாகப் போற்றப்படும் மன்மதனின் மலர் அம்புகளால் மனிதர்கள் மட்டுமல்ல; தெய்வங்களும் காதல் வசப் பட்டிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

பார்வதி தேவியானவள் ஒரு சமயம் தட்சனுக்கு மகளாகப் பிறந்தாள். அதனால் தாட் சாயிணி எனப் பெயர் பெற் றாள். பின்னர் தவம் செய்து ஈச னை மணந்தாள். தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். அதற்கு தேவர்கள் அனைவரையும் அழை த்தான். ஆனால் தன் மாப்பி ள்ளையான சிவபெருமானை அழைக்கவில்லை. அதனால் கோப ம் கொண்ட தாட்சாயிணி, தன் தந்தை யாகம் நடத்தும் இடத்திற் குச் சென்று நியாயம் கேட்டாள். தட்சன் சிவ பெருமானை அவ மரியாதையாகப் பேசியதால், அந்த யாகத் தீயில் விழுந்து மா ண்டாள்.

அதற்குப்பின் பல நிகழ்வுகள் நட ந்தன.

சிவபெருமானின் அருளால்மலை யரசனான பர்வதராஜனின் மகளா கப் பார்வதி என்ற பெயரில் மீண் டும் பிறந்து, ஐந்தாவது வயதில் சிவ பெருமானை நோக்கித் தவம் செய்தாள் பார்வதி.

காலம் கடந்தது…

தன் மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் சிவபெருமான் தியானத்தில் அமர்ந்திருந்தார். அதனால் உலகில் உயிர்களின் பிறப்பு இல்லாமல்போனது. இதனால் தேவர்கள் பிரம்மாவின் தலை மையில் திருமாலிடம் சென்று, உலகின் உயிர்

களின் நிலை பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்ட திருமால், “சிவ பெருமா னின் தியானத்தைக் கலைக்கத் தகுந்த வன் காமன் எனப்படும் மன்மதனே’ என்று ணர்ந்து, அவனை அழைத்து சிவ பெருமானின் தியானத்தைக் கலைக்கும் படி கூறினார்.

திருமாலின் கட்டளைப்படி மன்மதன் தன் மனைவி ரதியுடன் சிவபெருமான் தியானம் செய்யும் இடம் நோக்கிச் சென்றான். காதல் நினைவாக இருத்தல், அதனை எண் ணிப் புலம்பல், சோகம், மோகம், மரணம் ஆகியவற்றைக் குறிக்கும் தாமரை, அசோ கு, முல்லை, மா, நீலம் எனும் ஐந்து மலர் களையும் அம் பாகக் கொண்டு, கரும்பை வில்லாக வளைத்து சிவபெருமான்மீது தொடுத்தான் மன்மதன். மலர் அம்பால் தாக்கப்பட்ட சிவபெருமானின் தியானம் கலைந்தது. “தன் தியானத்தைக் கலைத்த து யார்?’ என்று கோபத்துடன் சிவ பெருமா ன் நெற்றிக் கண்ணைத் திறக்கவே, மன் மதன் எரிந்து சாம்பலானான். அருகிலிருந்த ரதி, அதனைக் கண்டு துடி துடித்தாள். சிவபெருமானிடம் சென் று தன் கணவனை மீண்டும் உயிர் பெறச் செய்யும்படி மன்றாடினாள். ரதியின் நிலை அறிந்து, மனமிரங்கிய சிவபெருமா ன், “நான் பார்வதியைத் திருமணம் செய்து கொண் டபின் உன் கணவன் உயிர் பெற்று எழுவான். ஆனா ல், உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்; மற்றவர் களுக்குத் தெரிய மாட்டான்’ என்று வரம் அருளி னார்.

இவ்வாறு சிவபெருமான் காமதகனம் செய்த இடம் தமிழ் நாட்டிலுள்ள அஷ்ட வீரட்டான தலங்களில் ஒன்றான திருக்குறுங்கை ஆகும். மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள இத்திருத்தலத் தில் உள்ள காமன் கோவிலில், காமதகன விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறு கிறது. இங்குள்ள குளத்தின் அடிப்பகுதியில் சாம்பல் மயமாக இருப் பதை இன்றும் காணலாம்.

திருக்குறுங்கை கிராமத்தைச் சுற்றி சில கிராமங்கள் இந்த வரலாற்றின் அடிப் படையில் பெயர்களைக் கொண்டுள்ள ன. சிவபெருமான் மீது மலர் அம்பினை ஏவ மன்மதன் கங்கணம் செய்துகொ ண்ட இடம் கங்கணநல்லூர், தன் கால்க ளை வளைத்து குறி பார்த்த இடம் கால் விளை, வில் ஏந்திய இடம் வில்லிய நல்லூர் எனப்படுகின்றன.

வடநாட்டில் இந்தக் காமன் பண்டிகையை வசந்தகால விழாவாக வும் தெய்வீக விழாவாகவும் கொண்டாடுகிறார்கள். சில இடங்களி ல் விவசாயிகளுக்குரிய அறுவடை த் திருநாளாகவும், புத்தாண்டின் துவக்க நாளாகவும் கொண்டாடுகி றார்கள்.

ஹோலிப் பண்டிகையும் இத்தரு ணத்தில் கொண்டாடப்படுவது தான். அதற்கும் ஒரு புராண வர லாறு உண்டு. பிரகலாதன் எப்பொ ழுதும் “நாராயணா… நாராயணா’ என்று சொல்லிக் கொண்டிருப்ப தைக் கண்ட அவனது தந்தை இரண்ய கசிபு, பிரகலாதனைப் பல விதங்க ளிலும் மிரட்டிப் பார்த் தான். ஆனால் சிறுவன் பிரகலாதன் தன் நிலையில் உறுதிப் பாட்டு டன் இருந்தான். இறுதியாக தன் தங்கை ஹோலி காவை அழைத்தான் இரண் யகசிபு. நெருப்பாலும் சாகா வரம் பெற் ற அவளிடம், பிரகலாதனை நெருப்பு வளையத்திற்குள் அழைத்துச் சென்று தீயிட்டுக் கொல்ல உத்தரவிட்டான். நெருப்பு வளையத் திற்குள் பிரகலாத னுடன் நுழைந்தாள் ஹோலிகா. ஆனா ல் தீய எண்ணத்துடன் அவள் நுழை ந்ததால் தீயில் அவளே சாம்பலானாள். ஆனால் “நாராயணா… நாராயணா’ என்று சொல்லிக் கொண்டிருந்த பிரக லாதன், நெருப்பு வளையத்திலிருந்து நலமுடன் வெளி வந்தான். ஹோலிகா எரிந்து போன நாளைக் குறிப்பிட்டும், “நாராயணா’ என் னும் மந்திரத்தின் மகிமையைப் போற் றும் வகையிலும் ஹோலிப் பண்டிகை கொ ண்டாடப்படுவதாகப் புராணங்கள் சொல்கின்றன.

சில இடங்களில் ஹோலிப் பண்டிகை க்கு முதல் நாள் மரத்துண்டு கள், பழைய பொருட்கள் ஆகியவற்றைக் கொளுத்தி சுற்றிலும் நின்று ஆடிப்பாடி மகிழ்வார் கள்.

சிவபெருமான் பார்வதியைத் திருமண ம் செய்து கொண்ட நாளாக வும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

அன்று, தாங்கள் சந்திக்கும் எல்லாருக்கும் இனிப்புகள் வழங்குவது ம் ஏழை- எளியவர் களுக்கு ஆடைகள் அன்பளிப்பாக வழங்குவதும் வடநாட்டில் வழக்கம்.

மதுராவிலும் பிருந்தாவனத்திலும் கண்ணன் நிகழ்த்திய தெய்வீ கக் காதலை வெளிப்படுத்தும் விதமாக ஹோலிப் பண்டிகை கொ ண்டாடப்படுகிறது. இந்த விழா வடநாட்டில் மட்டுமல்ல; தமிழக த்திலும், வடநாட்டினர் வாழும் பகுதிகளில் மிகச் சிறப்பாகக் கொண் டாடப் படுகிறது.

நன்றி – நக்கீரன்

Leave a Reply