கார்த்தியிடம், உன்னுடன் விளையாடுவது எனக்கு ஒரு புதுமை யான அனுபவம் என்று சூர்யாவும், சூர்யாவிடம், ஏய்! நீ எப்படிப்பா இந்தளவு பேசுறே (வீட்டில் சூர்யா அதிகமாக யாருடனும் பேச மாட்டாராம்) என்று கார்த்தியும், ஒருவருக்கொருவர் பேசிக் கொண் ட அல்லது புகழ்ந்து கொண்ட காட்சி இது. ஆம்! விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியில் கேள்விகளை சூர்யா கேட்க, பதில்களை கார்த்தி சொல்ல, இடையிடையே இருவரும் தங்களது சினிமா மற்றும் சொ ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டது பார்வையாளர்களை மட்டு மின்றி அனைவரையும் ரசிக்க வைத்தது. இந்த வீடியோவை நீங்க ளும் பாருங்கள்.