Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (06/05): மன்னிக்க முடியாத சில தவறுகளை செய்த நீயும், உன் கணவனும்,

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த, 40 வயது பெண். சின்ன வயதில், என் அப்பா வின் நடவடிக்கைகளால், அம்மாபட்ட கஷ்டத்தை பார் த்து பார்த்து, அன்பிற்கு ஏங்கி வளர்ந்தேன். பட்டப்படிப்பு படி க்க ஆசைப்பட்டேன். ஆனால் , வீட்டுச் சூழ்நிலையால், திடீரென்று வந்த மாப்பிள் ளைக்கு, என்னை திருமணம் செய்து வைத்தனர்.

அம்மா… நான் ஒருவரை காதலித்தேன். ஆனால், என் அம்மா தற் கொலை செய்து விடுவார் என பயந்து, என் தாய் சொன்ன மாப்பிள்ளையை, கரம் பிடித்தேன். எனக்கு திருமணமாகி, 23 வருடங்களாகின்றன. வயது வந்த மகன் கள் இருவர் உள்ளனர். என் கணவருக்கு, ஆரம்ப காலத்திலிருந்தே, என்மீது எந்தவிதமான அன்போ, பிடிப்போ, பாசமோ, மனைவி என்ற எண்ணமோ துளியும் இல்லை.

இடையில், என் கணவரின் இந்த பாராமுக நடவடிக்கையால் மனம் வெறுத்து, மன்னிக்க முடியாத சில தவறுகளைச் செய்தேன். என் கணவரும், பதிலுக்கு, எனக்கு மேல் தவறுகளைச் செய்தார். இருவ ருக்கும், இருவர் செய்த தவறுகளும், நன்றாகத் தெரியும். போராட்ட காலமாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. என் மகன்கள் இருவரும், எங்கள் பிரச்னைகளைப் பார்த்து, வளர்ந்து, வாழ்க்கை யில் விரக்தியின் எல்லையில் உள்ளனர்.

ஆரம்பக் காலங்களில், நான் செய்த தவறுகளின் விளைவுகளை உணர்ந்து, என் செயல்களின் விபரீதங்களை எண்ணி, மனம் திருந் தி, என் கணவரே எனக்கு எல்லாம் என்று, அவர் மேல் அளவற்ற அன்பைக் காட்டி, வாழ்ந்து வருகிறேன்.

ஆனால், என் கணவரோ, என்னை மிகவும் தரக்குறைவான வார்த் தைகளால், குழந்தைகள் எதிரே திட்டியும், என்னைத் தனிமைச் சிறையில் அடைத்தும், என் பிறந்த வீட்டாரிடமிருந்தும், என் உறவுக் காரர்களிடயிருந்தும் தனிமைப்படுத்தி, அடிமையிலும் அடிமையாக வைத்திருக்கிறார்.

அவர் நல்ல மனநிலையில் இருக்கும் போது, அவரிடம் என் மன வேதனைகளைக் கூறி அழுதேன். அவரது தவறுகளை எடுத்துக் கூறி, அதனால் ஏற்படப் போகும் பின் விளைவுகளையும் கூறி, “என் னுடன் வாழப் பிடிக்காவிட்டால், இருவரும் சேர்ந்து, ஒரு நிரந்தர முடிவு எடுத்து விடலாம்…’ என்று கூறினேன்.

அப்போது, கண்ணீர் விட்டு அழுது, “இனிமேல் இப்படி நடக்காது…’ என்று கூறினார். சமூகத்திற்காகவும், குழந்தைகளின் எதிர்காலம், படிப்பு கருதியும், மவுனமாக இருந்தேன். ஆனால், தற்போது எனக்கு வாழ இஷ்டமில்லாமல், தற்கொலை செய்து கொள்வதையே சிந்தி த்துக் கொண்டிருக்கிறேன் அம்மா. என்னை, தன்னுடைய தேவைக ள் தீரும் வரை உபயோகப்படுத்தி விட்டு, இப்போது, “நீ வீட்டை விட்டு போய்விடு…’ என்று நாக்கூசாமல் கூறுகிறார்.

நான், பிளஸ் 2 வரை படித்திருக்கிறேன். எனக்கு சிறிது உடல் ஊனம் உள்ளது. என்னால், வேலை செய்து பிழைக்க முடியுமா என்று தெரியவில்லை. குழந்தைகள், யார் பக்கமும் இல்லாமல், திரி சங்கு சொர்க்கத்தில் இருப்பதைப் பார்த்து, என் மனம் வெடித்து விடும்போ ல் உள்ளது. அவர் செய்யும் பிரச்னைகளை சகித்துக் கொண்டு வாழ் ந்தாலும், வாழ முடியவில்லை. இன்னமும், எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், எனக்கென்று எதுவுமே இல்லை. என் மேல் யாருக்கு ம், பாசமும் இல்லை.

என் குழந்தைகளுக்கு, ஒரு நல்ல தாயாக நான் இருக்க வேண்டும் என ஏங்குகிறேன். என் கணவரை திருத்துவது இயலாதக் காரியம். அவருடைய குடும்பமே, (அவருடைய அண்ணன், அம்மா, அப்பா) நன்றாக வாழவில்லை. அவருக்குத் தாயும் இல்லை. நான் அவரு க்கு, ஒரு நல்ல தாயாக இருக்க வேண்டும் என நினைத்து, வாழ்ந்து வருகிறேன். அவர் என்னை, செருப்பை விட கேவலமாக நடத்தி வரு கிறார்.

அம்மா… என் வாழ்க்கையில் எனக்கென்று எதுவும் வேண்டாம். என் குழந்தைகளுக்காக, ஒரு நல்ல வழி கூறுங்கள்.
— இப்படிக்கு, அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —

உன் கடிதத்தை ஏழெட்டு முறை, வரி விடாமல் வாசித்தேன். பதி னெழாம் வயதில் உனக்கு திருமணமாகி இருக்கிறது. உன் காதலை யும், மேற்படிப்பு ஆசையையும், இத்திருமணம் மூலம் இடைமுறித் திருக்கிறார் உன் அம்மா. உன் ஆசைகளை நிராசையாக்கிய அம்மா வையும், திருமணபந்தம் மூலம், அழையா விருந்தாளியாய் வந்து சேர்ந்த கணவனையும், பழிவாங்கும் விதமாக, நீ திருமணபந்தம் தாண்டிய உறவுகளில் ஈடுபட்டிருக்கிறாய். உன் கணவனோ, உன் னை தண்டிப்பதாய் நினைத்து, அவனும் திருமணபந்தம் தாண்டிய உறவுகளில் ஈடுபட்டு வந்திருக்கிறான். உன் பெற்றோரும் சரி, உன் கணவனின் பெற்றோரும் சரி, திருமண வாழ்க்கையில் தோற்றவ ர்களே. அவர்களின் தோல்வி, உன்னையும், உன் கணவனையும் வெகுவாய் பாதித்திருக்கிறது. கீரியும் – பாம்பையும் போல சண்டை யிடும் உன்னையும், உன் கண வனையும் பார்த்து, நாளை அவர்களது திருமண வாழ்க்கையில் நிச்சயம் பாதிக்கப்பட போகின்றனர் உன் மகன்கள். இந்த தோல்விகளின் தொடர் தலைமுறை ஓட்டத்தை, எப்படி தடுத்து நிறுத்துவது?

உன் கடிதத்தில், உன் கணவனின் வயது, கல்வித் தகுதி, பணி பற்றி, நீ எதுவும் குறிப்பிடவில்லை. உன் கடிதம் முழுக்க, சுயபச்சாதாபம் தெரிவிக்கிறது. ஆரம்ப காலத்திலிருந்தே, உன் கணவருக்கு, உன் மேல் அன்போ, பாசமோ, பிடிப்போ, மனைவி என்ற எண்ணமோ இல் லை என, நீ குற்றஞ்சாட்டுவது வடிகட்டின பொய். நீ தான் கணவரின் மேல் அன்போ, பாசமோ, பிடிப்போ, கணவன் என்ற எண்ணமோ இல் லாமல் இருந்திருக்கிறாய். உன் பாராமுகமே, உங்களின் திருமண வாழ்வில், முதல் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. மன்னிக்க முடியாத சில தவறுகளை செய்த நீயும், உன் கணவனும், உங்களது குழந்தைகளுக்கு எப்படி நல்ல பெற்றோராய் திகழ முடியும்?

அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது, நீ மனம் விட்டு பேசியி ருக்கிறாய். வாழ பிடிக்காவிட்டால், விவாகரத்து செய்து கொள்ள லாம் என யோசனை கூறியிருக்கிறாய். அதற்கு அவர், கண்ணீர் விட்டு அழுது, இனி எந்த, பிரச்னையும் இராது என வாக்கு றுதி தந்தி ருக்கிறார். அப்படியென்றால் கல்லுக்குள் ஈரமிருக்கிறது என்று தானே அர்த்தம்? திருமணமாகி, 23 வருடங்கள் ஆகின்றன. இரு பத்திமூன்று வருடங்களும், வீட்டுக்குள் போராட்டம் போராட்ட ம். முதுகலை பட்டப்படிப்பு முடித்து விட்ட மூத்த மகன், இளங்கலை இரண்டா மாண்டு படிக்கும் இளைய மகன், இவர்களின் மனநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை கணவன் – மனைவி இரு வரும் சிறிதளவாவது யோசித்து பார்த்தீர்களா? உங்களிரு வருக்கும், உங்களது சுயநலங்களே பிரதானம் இல்லையா?

மகன்களுக்கு தாய் மீதோ, தந்தை மீதோ எவ்வித பாசப்பிணைப்பும் இல்லை என்றே, உன் கடிதம் மூலம் தெரிகிறது. வாழ்க்கையில் பாதியை சுயநலத்திற்காகவும், தாம்பத்ய போராட்டத் திற்காகவும் செலவழித்து விட்டாய். இன்னொரு பாதியிலும் முதல்பாதியின் அவ லத்தையா தொடர்வது? தற்கொலை எண்ணம், உன் மகன்களின் வாழ்க்கையை படுசிக்கலாக்கும். மாற்றுத் திறனாளியான, பிளஸ் 2 படித்த பேரிளம் பெண்ணான உனக்கு, என்ன வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறாய்.

விவாகரத்து உங்களுக்குள் நல்ல தீர்வல்ல.

நீ, உன் கணவனுக்கும், உன் மகன்களுக்கும் தனித்தனி கடிதம் எழு து. கடிதத்தில் யாரையும் குற்றம் சாட்டாதே. கடிதம் முழுக்க, அன்பு இதயத்தை திறந்து காட்டு. உனக்கென்று எதுவும் இல்லை என நினைக்காதே. உன் மேல் யாருக்கும் பாசமில்லை என எண்ணாதே. நம் அனைவரையும் அரவணைக்க, அன்பே உருவான இறைவன் இருக்கிறான் என நம்பு.

பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை கிரிமினல் வேஸ்ட். பிரச்னைகள் கண்டு தயங்காது, மயங்காது அவைகளை வென்றெடுக்க பழகு.

அடுத்த நான்கு வருடங்களுக்கு மகன்களின் எதிர்காலத்தை, கண் ணும் கருத்துமாய் பேணு, மகன்களுக்கு நல்ல வேலையும், வாழ்க் கைத் துணையும் அமைய பாடுபடு. கணவனை உன் அர்த்தமுள்ள நடவடிக்கையால் சாந்தப்படுத்து. எவ்வித சமாதான உடன்படிக்கை யும் ஒத்துவரவில்லை என்றால், கணவனிடமிருந்து ஒதுங்கு. பிற ந்த வீட்டாரிடமும், உறவுக்காரர் களிடமுமான தொடர்புகளை ஜீவ நதி ஓட்டமாய் தொடர். மிக விரைவில் பேரக் குழந்தைகளை கொஞ்சுவாய் மகளே… அதுவரை அமைதி பெறு!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: