இன்றைய தேதியில் ஆன்லைன் மூலம் பல வேலைகளைச் சுலப மாகச் செய்வது அதிகரித்து வருகிறது. இருந்த இடத்தில் இருந்த படி இ.பி. பில் கட்டுவது முதல் ரயில் டிக்கெட், செல்போன் வாங்கு வது வரை எல்லா வேலைகளையும் செய்து கொள்ள முடிகிறது. ஆனா லும், ஆன்லைன் வசதியை பயன்ப டுத்த பலரும் தயங்கவே செய்கிறார் கள். காரணம், நம் அக்கவுன்ட் களவு போய்விடுமோ என்கிற அச்சம்தா ன்.
நம்மில் பெரும்பாலோர் ஆன்லைன் பாஸ்வேர்டு அமைத்துக் கொள்ளும் போது 123456 அல்லது abcde அல் லது நம் பெயர் என்கிற ரீதியிலேயே அமைத்துக் கொள்கிறோம். இதனால் நம் பாஸ்வேர் டுகளை எளிதில் உடைத்து, நம் ஆன் லை ன் அக்கவுன்டுக்குள் புகுந்து, பணத்தைச் சுருட்டி எடுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள் ‘நெட்’ கொள்ளையர்கள்.
பலவீனமான பாஸ்வேர்டுகள் மோசடிக்கான கதவை எளிதில் திறந்துவிடுகிறது. அமெரிக்க தொலைக்காட்சி சேனல் வெரிச ன் நடத்திய ஆராய்ச்சி ஒன்றில், ‘சுலபமாக ஊகிக்கக்கூடிய பாஸ் வேர்டுகளை வைத்திருப்பதே ஆன்லைன் மோசடி பிரச்னைக் கு மூல காரணம் என்கிறது.
”பாஸ்வேர்டு என்பது நினைவி ல் நிற்பதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.
நம்மவர்கள் நினைவில் நிற்பது போல் சுலபமான பாஸ்வேர்டை தேர்வு செய்கிறார்கள். ஆனால், அது பாதுகாப்பானதாக இல்லை என்பதே பெரிய குறைபாடு.
ஆன்லைன் செக்யூரிட்டியை பலப்படு த்த என்ன செய்யலாம் என செக்யூரி ட்டி ஆராய்ச்சியாளர்கள் மூளையை ப் போட்டு குழப்பியதன் விளைவு, நம் பாஸ்வேர்டு வலிமையாக இருக் க வேண் டும் என்று கண்டுபிடித்தார் கள்.
வலிமையான பாஸ்வேர்டு என்றால்..? ஒன்றுக் கு ஒன்று தொடர்பு இல்லாத எழுத்துக்கள் மற் றும் எண் களாக இருப்பதுதான் வலிமையான பாஸ்வேர்டு. இந்த பாஸ்வேர்ட்டை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தால், எந்த கொம்ப னாலும் உங்கள் பாஸ்வேர்ட்டை உடைக்க முடி யாது” என்கிறார்கள் அவர்கள்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.