Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்” – Google எச்சரிக்கை

ஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக் கப்பட் டிருப்பதாக, கூகுள் நிறு வனம் எச்சரித்துள்ளது. இந்த தளங்களில் உள்ள சில பக்கங் களை மட்டும் இந்த வைரஸ் தாக்கியிருக்கவும் வாய்ப்புள் ளதாக கூகுள் அறிவித்துள்ள து.
 
எனவே, இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் “eval (function (p,a,c,k,e,r)” என்று வரி கொ ண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று சோதனை செய்திட வே ண்டும். இது எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பி.எச்.பி. பைல்களில் இருக்கலாம். இந்த தளங் கள் இருந்து இயங்கும் சர்வர் கம்ப்யூட்டர்களில், சர்வர்களை வடி வமைக்கும் கான்பிகரேஷன் பைல்களிலும் இவை இருக்க வாய்ப் புள்ளது. இதனால், இந்த தளங்களில் ஒரு சில பக்கங்க ளைப் பார் வையிடும்போது மட்டும் இந்த வைரஸ் தன் வே லையைக் காட்டும்.
 
இந்த மால்வேர் புரோகிராம் பதிந்திருக்கும் குறியீட்டு வரிக ளை நீக்கி, தளத்தைப் பார்வை யிடுவோரின் கம்ப்யூட்டர்கள் பாதிக்காமல் இருப்பதைத் தள நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தளங்களைப் பதிந் து இயக்க ஒத்துக் கொண்டு இடம் தந்துள்ள சர்வர் உரிமையாளர்க ளும் இந்த பாதுகாப்பு நடவடி க்கையினை எடுக்க வேண்டு ம். இவ்வாறு கூகுள் அனை வரையும் எச்சரித்துள்ளது. இது போல பல முறை கூகுள் இத்தகைய எச்சரிக் கைகளை விடுத்துள்ளது. ஸ்பேம் மெயி ல்கள் மற்றும் அவை வழி யாக மால்வேர் புரோ கிராம்க ள் பரவாமல் காப்பது தன் கடமை எனவும் கூகுள் அறிவித்துள்ளது.
 
இதற்கெனவே பல முறை எச்சரிக்கை செய்திகளைக் கூகுள் தந்து வருகிறது. இந்த முயற்சிகளை ரகசி யமாக மேற்கொள்ளாமல், அனைத் து இணைய தள நிர்வாகிகளும் அறி ந்து கொள்ளும் வகையிலேயே இவை வெளியிடப்பட்டு வருகின் றன.
 
கூகுள் எச்சரிக்கைகள் நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற் படுத்தும். சென்ற ஆண்டில், கூகுள் “co.cc” என்ற டொமைன் பிரிவிலி ருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட தளங்களை விலக்கி வைத்தது. இவற்றை இணைய வெளியில் வைரஸைப் பரப்பும் கிரிமினல்கள் பயன்படுத்தி வந்ததால், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்தது.
 
மொத்தமாக இணைய தளங்களுக்கு தங்கள் சர்வர்களை வாடகைக்கு விடு பவர், கூகுள் எச்சரிக்கையை சிரமேற் கொண்டு நடவடிக்கை எடுக்காவிட் டால், அந்த நிறுவனத்தின் சர்வர்கள் அனைத்திலும் மால்வேர் புரோ கிராம் கள் நுழைய வாய்ப்புண்டு. எனவே தா ன் தன்னுடைய எச்சரிக்கைகள் அனைத்தையும் வெளிப் படையாக வே அனைவரும் அறியும் வண்ணம் கூகுள் வெளியிட்டு வருகிறது.
thanks to therinjiko

One Comment

Leave a Reply