Sunday, July 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பொதுவாக இரவானால் ஏன் தூக்கம் வருகிறது? என்றைக்காவது இதை யோசித்தது உண்டா?

இயற்கையாகவே இரவு நேரத்தில் உடலில் ஏற்படும் ரசாயன மாற்ற ங்கள்தான் இதற்குக் காரணம். அதாவது, மனித உடலில் உறக்க – விழிப்புச் சுழற்சியைக் கட்டுப் படுத்தும் ‘மெலட்டோனின்’   என ப்படும் ஹார்மோன் இருள் கவி ழும் இரவு நேரத்தில்தான் அதிக மாகச் சுரக்க ஆரம்பிக்கிறது.

காலையில் சூரிய வெளிச்சம் பர வ ஆரம்பித்ததும், இந்த ‘மெலட் டோனின்’ சுரக்கும் அளவும் தானாகவே குறைய ஆரம்பித்து விடுவ தால், பகற்பொழுதில் நல்ல விழிப்பு நிலையுடன் கூடிய புத்துணர்வு தொடர்கிறது. ஆனால், இதைத் தவிர்த்து ம் பகல் வேளையில் தூக்கம் வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. உட ல் களைப்பாக இருக்கும் சமயத்திலோ அல்லது நன்றாகச் சாப்பிட்டு முடித்த பிற கோ, சுகமான தூக்க உணர்வு ஏற்படும். ஆரோக்கியமான உடல்வா கு கொண்ட அனைவருக்கும் ஏற்படும் இயல்பான நிலைதான் இது.

செரிமானத்தின்போது உணவில் உள்ள கொழுப்புச் சத்தானது ‘கை லோமைக் ரான்’ (Chylomicrons) என்ற நுண் கொழு ப்பாக உருமாற்றம் அடைந்து ரத்தத்தில் கலக்கும். அப்போது ஒருவிதக்கிறக்க நிலை எல்லோருக்கும் உண்டாகும். இதைத்தான் ‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என்கிறார்கள். எல்லோருக்கும் பொதுவான – இயல்பான இந்த நிலையை த்தான் ‘குட்டித் தூக்க ம்’ என்கிறா ர் கள்.

அதிகப்படியாக 30 நிமிடங்கள் தான் குட்டித் தூக்கத்தின் ஆயுட் காலம். இதனால், உங்களது அன்றாட வேலைகளில் எந்த விதப் பாதிப்பும் இல்லை என்றா ல், இந்தக் குட்டித் தூக்கம் வரவேற்கத்தக்கதே.

”இரவுத் தூக்கத்தில்கூடக் கிடைக்காத புத்துணர்வும் உற்சாகமும் இந்தக் குட்டித் தூக்கத்தில் கிடைக்கிறது என்றெல்லாம் கூட சிலர் பரவசப்படுவார்கள். இன்னும் சிலரோ, ‘பகலில் எந்நேரமும் தூக்கம் வருகிறது; தூங்கி எழுந்தாலோ இரவு நேரத்தில் தூக்கம் வரமாட்டேன் என்கிற து’ எனக் குறைபட்டுக் கொள்வார்கள். இரவில் ஆழ்ந்த தூக்கம் இல்லாததே, இது போன்ற தொல்லைகளுக்கான முக்கியக் காரணம்.

அதிகாலையிலேயே எழுந்து பாடம் படிக்கும் மாணவர்கள் அல்லது வேலைக்குச் செல் லும் இளம் வயதினர் சிலர் ‘கிளாஸ் ரூமிலேயே தூங்கி வழிகிறேன்; அலுவலக நேர த்தில் கம்ப்யூட்டரிலேயே தலை யைச் சாய்த்துக்கூடத் தூங்கிவிடுகிறேன். என்னால் கட்டுப்படுத்தவே முடியவில் லை’ என்று அலுத்துக்கொள்வார்கள். இது ‘நார்கோ லெப்சி’ (Narco lepsy) என்னும் பாதிப்பாகக்கூட இருக்கலாம். மூளையில் சரிவர அமிலச் சுரப்பு இல்லாதபோது இக் குறைபாடு ஏற்படும். நார்கோ லிப்சியால் பாதிக்கப்பட்டவர்களு க்கு அதீதத் தூக்கம் வருவதோடு, வேறு சில பிரச்னைகளும் இருக் கும். சந்தோஷம், துக்கம் போன்ற எந்த உணர்ச்சியையும் இவர்கள் மிக அதிகமாக அனுபவிக்கும் சூழ் நிலைகளில், திடீரெனக் கை கால்கள் துவண்டு கீழே விழுந்துவிடு வார்கள். ஆனால், அடுத்த சில நொடி களிலேயே பாதிப் பில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு த் திரும்பிவிட இவர்க ளால் முடியும். மனம்வி ட்டுச் சிரிப்பதற்கும் அழு வதற்கும்கூட முடியாம ல் சிரமப்படுவார்கள். இந் நிலையை ‘கேட்டப் ளெக்ஸி’ (Cataplexy)  என்கிறோ ம்.

அடுத்ததாக, ‘ஹிப்னாகாஜிக் ஹாலுசினேஷன்’ (Hypnagogic hallu cination) என்னும் நிலை. இதில், கண் முன்னே ஏதேதோ உருவங் கள் தோன்றி மறைவது போன்ற மாயத் தோற்றங்கள் உண் டாகும். இந்த அறிகுறிகள் எல் லாமே ‘நார்கோலெப்ஸி’யைச் சார்ந்தவை தான். இன்னும் சில ருக்கு இந்த அறிகுறிகள் எதுவு ம் தோன்றாமல், வெறுமனே அதீதமான தூக்கப் பிரச்னை மட் டுமே தொடர்ந்து நீடிக்கலாம்.

இது ‘நார்கோலெப்ஸி’ வகை யைச் சேர்ந்த பாதிப்புதானா என்பதைப் பரிசோதித்துப் பார்க்க ‘எம். எஸ்.எல்.டி. டெஸ்ட்’ (Multiple Sleep Latency Test)  என்ற பரிசோத னை ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி அடுத்த இதழில் விரிவாகப் பார்க்கலாம்.

– ஆராரோ ஆரிராரோ

ஸ்பெயின் வழக்கம்!

ஸ்பெயின் நாட்டில் உள்ள பெரும்பாலா ன அலுவலகங்களில் தங்களது ஊழியர் கள் குட்டித் தூக்கம் தூங்கி எழுவதற்குத் தேவையான தனியறை வசதிகளையே செய்து கொ டுத்து இருக்கிறார்கள். காரணம்… இப்படித்தூங்கி எழுந்தவர்கள் இரட்டிப்புப்புத்துணர்வுடன் அலுவலகப் பணிகளை விரைந்து முடிப் பதால், உற்பத்தியும் இரண்டு மடங்கு அதிகரிக்கிறதாம். ஸ்பானிஷ் கலாசாரத்தில், இதனை ‘சியஸ்டா’ (Siesta  பிற்பகலில் எடுத்துக்கொள் ளும் சிறு துயில்) என்று அழைக்கி றார்கள். எனவே, மதிய சாப்பாட்டுக்குப் பின்ன ர் தூக்கம் வருகிறது என்று குறைப்பட்டுக் கொள்ளாதீர் கள். தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!

 இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply