Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லாபத்தைக் கூட்டும் ரகசியம்!

காஸ்ட்கோ (Costco) ஹோல்சேல் கார்ப்பரேஷன் அமெரிக்காவின் பிரம்மாண்ட சூப்பர் மார்க்கெட் கடை. 66 நாடுகளில் 598 கிளை கள் உள்ளன. வருட விற் பனை 4,35,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். 1976-ல் தொடங்கப்பட் ட காஸ்ட்கோவின் வளர்ச்சிக் கு முக்கிய காரணம் அவர்களு டைய நியாயமான விலை.

ஒரு உதாரணம். பிற கடைகளி ல் 50 டாலருக்கு விற்கும் ஷூ வை தயாரிப்பாளரிடம் காஸ்ட்கோ 25 டாலருக்குப் பேரம் பேசி வாங்கியது. அதனை 3 டாலர் லாபம் வைத்து 28 டாலருக்கு விற்ற து காஸ்ட்கோ. வாடிக்கையாளர்கள் அள்ளிக் கொண்டு போனார்க ள். இதனால், காஸ்ட்கோ தயாரிப்பாளரிடம் இன்னும் பேரம் பேசி, 18 டாலராக விலையைக் குறைத்தார்கள்.

பிற கம்பெனிகளாக இருந்தால், ஏற்கெனவே விற்ற 28 டாலர் விலையை குறைக்காமல், லாபத் தை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், காஸ்ட்கோ வழக்கம் போல லாபத்தை 3 டாலராகவே வைத்துக் கொண்டு, ஷூவின் வி லையை 21 டாலராக குறைத்து விற் றது.

வாடிக்கையாளர்களின் நன்மை யையும் மனதில் கொண்டு செயல் பட்டால், வெற்றிதான்.

– நாணயம் விகடன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: