Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சோதனையும் வேதனையும் . . .

மே 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்

தமிழகத்தில் ஆட்சி மாற்ற‍ம் ஏற்பட்டு ஓராண்டாகிவிட்ட‍து. இந்த ஓராண்டில் தமிழக ஆட்சியில் பெரிதாக சாதனை ஏதும் இல்லை. ஆனால் இந்த ஆட்சி சந்தித்த‍ சோத னைகளும், ஆட்சியால் மக்க‍ள் சந்தித்த‍ வேதனைகளும் நிறையவே உண்டு.

கூடங்குளம் மின்சாரம் பெறுவதில் ஏற் பட்டுள்ள‍ போராட்ட‍ம், தானே புயலால் கடலூர் மாவட்ட‍த்தில் ஏற்பட்ட‍ இயற் கை சீரழிவு அதனால் ஏற்பட்ட‍ பொரு ளாதாரச் சறுக்கல்கள், மின்சாரப் பற்றா க் குறையால் ஏற்பட்டுள்ள‍ தொழில் முடக்க‍ம், அதன் தொடர்ச்சியாய் ஏற் பட்ட‍ பொருளாதார இழப்பு, மத்திய அர சின் பாராமுகம், உடன் பிறவா தோழியி ன் பிரிவு மற்றும் சேர்க்கையால் ஏற்பட்டுள்ள‍ சல சலப்பு இப்ப‍டி பல்வேறு சோதனைகளை தமிழக முதல்வர் தனியா கவே என்  வழி தனி வழி என்று சந்தித்து வரு கிறார்.

இந்த சோதனைகளிலிருந்து மீள்வதற்காக தமிழக முதல் வர் எடுத்த‍ பிரம்மாஸ்த்திரம் தான் கட்ட‍ண உயர்வு, பேரூந் து கட்ட‍ணம், மின் கட்ட‍ணம், பால் கட்ட‍ணம், முத்திரைத் தாள் கட்ட‍ணம் ஏன் சரக்கு உட்பட எல்லாவற்றிலும் கட் ட‍ண உயர்வை ஒரேயடியாய் ஏற்படுத்தியதால், சராசரி மனிதன் முழி பிதுங்கி நிற்கிறான். கடுமையான கோடையில் உடல் மட்டுமல்ல‍ மனமும் புழுங்கி, ஏன் இந்த சோதனை? எவ்வ‍ளவு நாள் இந்த வேத னை என்று மக்க‍ள் செய்வதறி யாது நிற்கிறார்கள்.

ஆட்சிக்கு சோதனையும், மக்க ளுக்கு, வேதனையும் இருந்தா லும் கூட, அம்மாவின் மேல் மக்க‍ள் நம்பிக்கையும், நல்ல‍து நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் வைத்திருப்ப‍து முதல்வருக்கு கிடைத்துள்ள‍ வெற்றி எனலாம்.

அதுமட்டுமல்லாமல், அரசு விழாக் க‍ள், தனக்கு பாராட்டு விழாக்க‍ள், தேவையற்ற‍ செலவினங்களைத் தவிர்த்தல் போன்றவற்றிற்காக ஜெ க்கு ஜே! போடலாம். இரண்டா ம் ஆண்டில் நுழையும் தமிழக அரசுக்கு இரண்டு கோரிக்கைகள்.

சட்ட‍சபையை, எதிர்க்க‍ட்சிகளை எள்ளி நகையாடும் இடமாக அல்லாமல் அவர்களும் மக்க‍ள் பிரதி நிதிகளே! என்ற மனப்பான்மையோடு உரிய அங்கீகாரத்தைத் தர வேண்டும்.

மாவட்ட‍ந்தோறும் மக்க‍ள் மன்றம் அமைத்து, மாதந்தோறும் அங்கே அதிகாரிகள், அமைச்ச‍ர் கள், மக்க‍ள் பங்கேற்கும் கருத்துப் பரிமாற்ற‍ நிகழ்ச்சிகளை வைத்து, மக்க‍ள் மனதை அறிந் து கொள்ள‍ உரத்து சிந்தித்தால், தமிழகம் தலை நிமிரும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: