(கருத்து – கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீகாந்த், நம் உரத்த சிந்தனை மாத இதழுக்காக)
மொத்தமுள்ள 9 அணிகளின் டாப் வீரர்களைப் பற்றிய குறிப்பு
1. பெயர் – மம்தா பானர்ஜி
அணி – கல்கத்தா சார்ஜர்ஸ்
இவரைப்பற்றி – வேகப்பந்து வீச்சாளர், கொல்கத்தாவில் நடைபெற் ற போட்டியில் இடது மற்றும் வலது பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தவர். டில்லிக்கு எதிரே தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, வருகிறார். இவ ரது பந்து வீச்சுக்கு வீழ்ந்தவர்க ளில் மன்மோகன், பிரணாப் போன்றவர்கள்.
இந்த அதிரடி வீரரை எந்த அணியும் விலை கொடுத்து வாங்க முடியவில்லை. இவரை எதிர்த்தாலோ அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
2. பெயர் – மன்மோகன் சிங்
அணி – டெல்லி “கை” டெவில்ஸ்
இவரைப்பற்றி – அமைதியான ஆட்டக் காரர். சக வீரர்கள் தவறு செய்தாலும், கண்டுகொள்ள மாட்டார். அதே சமயம் ராஜா போன்றவர்கள் அதிக அளவு ஆடி ஸ்கோர் செய்தால் முதுகில் தட்டிக் கொடுப்பார்.
அணியின் பயிற்சியாளர் சோனியாவை கலந்து ஆலோசிக்காமல் எந்த முடி வையும் எடுக்க மாட்டார்.
3. பெயர் – எல்.கே. அத்வானி
அணி – தாமரை XI பஞ்சாப்
இவரைப்பற்றி – அணியிலுள்ள மற்ற வீரர் களும் தங்களை கேப்டன்களாக பாவித்து செயல்படுவதால், இவருக்கு அடிக்கடி சிக் கல்.
இவர் ஆடினால் ரதம் போவது போன்று இரு க்கும். அணியிலுள்ள சக வீரர்கள் ஒத்து ழைத்தால் அணி நிச்சயம் வெற்றி பெறும்.
இந்த அணிக்கு பயிற்சியாளர் – ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ ஹிந்து பர்ஷத்
4. பெயர் – கருணாநிதி
அணி
இவரைப்பற்றி – ஐ.பி.எல் தொடரில் மூத்த விளையாட்டு வீரர் இவர். இவர் விளையாடாத ஆடுகளமே இல்லை எனலாம். பல அணிகள் அதிக விலை கொடுத்து இவரை வாங்கி இருக்கி ன்றன• அதற்கான விலையையும் கொ டுத்து வருகின்றன•
ஆரியர்களுக்கு எதிராக சூப்பர் ஆட்டம் கொடுத்தவர் இவர். தனது குடும்பத்தி ல் உள்ள மற்றவர்களையும் ஊக்குவி த்து ஆட உதவி வருகின்றார்.
பலமுறை ஆட்ட நாயகன் பட்டம் பெற்றவர் இவர். பல வெற்றி விழா க்களை கண்டு ரசித்தவர் இவர்!
5. பெயர் – ஜெயலலிதா
அணி – சேலன்ஞர்ஸ்
இவரைப் பற்றி – அணியின் கேப்டன் ஆல்-இன்-ஆல், ஆல்ரவுண்டர். அணி க்கு எல்லாமே இவர்தான். தனது தனிப்பட்ட திறமையால் பல வெற்றி களைச் சந்தித்தவர் இவர் வீழ்த்தாத வீரர்களே இல்லை எனலாம். கருணாநிதி, சோனியா, வைகோ, விஜய காந்த், பாண்டியன் என்று பல ரையும் திக்குமுக்காடச் செய்தவர்.
அணியை மட்டும் உயர்த்தாது, பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம் என்று எல்லாவற்றையும், உயர்த்திய பெருமை இவருக்கு உண்டு. இந்த அணியில் இவரைத் தவிர யாருமே நிரந்தரமில்லை.
6. பெயர் – விஜயகாந்த்
அணி – மதுரை
இவரைப்பற்றி – வேகப் பந்துவீச்சாளர், அதிரடி பேட்ஸ்மேனும் கூட, இவர் நாக் கை மடக்கி, கையை உயர்த்தி, பந்து வீசினால், எதிரிகள் பயந்து ஓடுவர். தலை மீது அடிப்பதில் வல்லவர்.
சமீபத்தில் ஆடிய ஆட்டத்தின்போது நடு வரையே முறைத்ததால், ஆட்ட விதிக ளை மீறிய குற்றத்திற்காக தள்ளி வைக் கப்பட்டுள்ளார்.
7. பெயர் – ராமதாஸ்
அணி – தைலாபுரம் வாரியர்ஸ்
இவரைப்பற்றி – சக வீரர்கள் இவ ரை அய்யா என்றே அழைப்பர். முன் கோபக்காரர். அவசரமாக ஆடக்கூடியவர். நிறையமுறை பாதியிலேயே ரன் அவுட் ஆகியி ருக்கிறார். வேறு எந்த அணியும் இவரையும் இவரது மகன் அன்பு மனியையும் விலைக்கு வாங்க முன்வராததால், சொந்தத்திலே யே தனது அணியை துவக்கி ஆடி வருகிறார்.
இதுவரை தனியாக ஆடி இவரது அணி எந்த வெற்றியையும் பெற வில்லை.
8. பெயர் – தா. பாண்டியன்
அணி – ரெட் நைட்ரைடர்ஸ்
இவரைப்பற்றி – நல்ல எண்ணத்துட ன் ஜோடி சேர்ந்து ஆடும்போது, இவ ர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்து வார். எதிர் அணிகள் இவர்களது பார்ட்னர்ஷிப்பை முறிக்க முயன்று தோற்பர்.
ஸ்டிரைக்ரேட், அதிகமாக உள்ள வீரர்கள் இவரும், நல்ல கண்ணுவு ம்.
9. பெயர் – வைகோ
அணி – இலங்கை இந்தியன்ஸ்
இவரைப்பற்றி – தோனி போல அதிரடி ஆட்டக்காரர். இவரை கள்ளத் தோணி என்றழைப்பர்.
போயஸ் அணிக்கு சிலகாலம் ஆடி வந்தவ ர் அதிரடியாய் நீக்கப்பட்டதால், தற்போது இலங்கை இந்தியன்ஸ்காக மட்டுமே விளையாடி வருகிறார்.
பலமுறை இவரது முன்னாள் கேப்டன் பிரபாகரனிடம் பாராட்டுகள் வாங்கியிருக் கிறார்.