Wednesday, June 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கேமரா மொபைலில் தனக்குத் தானே தனது அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்கான “எச்ச‍ரிக்கை” பதிவு

செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத் தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..

”நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தர ங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்… வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக் கொண்டி ருக்கலாம்.

“அது எப்படி… என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களா… வெயிட்… உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

அடையாறில் வசிக்கிறா ர்கள் மதுமிதா- ராம். புது மணத் தம்பதிகளான இவ ர்கள் ஐ.டி. துறையில் வே லை செய்கிறார்கள். ஒரு நாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்ப ட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்க ப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மது மிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட் ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனி ல் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல் போனிலிருந்து அப்போதே அதை அழித்து ம் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிரு க்கிறது. ‘செல் போனில் இருந்து டெலிட் செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர் நெட் டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங் கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந் துகொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச் சிச் சம்பவங்களையும் பார்த்து விடுவோம்.

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணி ன் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித்தி ரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கி றாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவ ரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத் தார்.

ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாம ல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய் தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னு டைய அந்த வீடியோவை ரசித்து ப் பார்த்துவிட்டு டெலிட் செய்து விட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டி ருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர் ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல் போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை டெலிட் செய்து விட்ட னர். ஆனால் அந்த போன் ஒருநாள் தொலைந்து போனது. புது செல் போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட் டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரி ன் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டி ருக்கிறது.

இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மா ணவிகளின் வீடியோ, ஹாஸ்ட ல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொ ண்டாட்டத்தில் குத்தாட்டம் போ டும் மாணவிகளின் வீடியோ… என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில் டெலிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத் துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.

அந்த புதிருக்கான விடையின் பெயர் ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery software)

மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமரா க்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்து தான் அவர்களின் மானம் இணைய தளத்தில் பறக்கவிடப்பட்டது.

இதுபோன்ற வில்லங்கச் சம்பவங்க ளின் பின்னணி என்ன? அண்ணா நக ரில் செல்போன் கடை வைத்திருக் கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.

”செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அது குறி த்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல் போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் டெலி ட் செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.

அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்க ளின் படுக்கை அறைக் காட்சிக ளை செல்போனிலும், டிஜிட்டல் கேமரா விலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் டெலிட் டும் செய்து விடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொரு ட்கள் என்றாவது ஒரு நாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக் க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன டெலிட் செய்யப்பட் டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தக வல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல ‘ரெக்கவரி சாஃப்ட் வேர்கள் இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்க ளில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவி டுவார்கள். இந்த மாதிரியான ‘ஹோம் மேட் செக்ஸ் வீடியோ க்கள் எனப்படும் சம்பந்தப்பட்ட வர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக் கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.

இதைத் தவிர்க்க என்ன செய்வது?

முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவை யோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வ ளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக் கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண் டும்.

இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நா ளை சூழ்நிலைகாரணமாக பிரிந்து வேறொ ருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்… ஏமாற்றப்பட்ட தாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகி றார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் ‘வெப் கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்ப தற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள் . கம்ப்யூட்டரில் அது பதிவு செ ய்யப்படலாம். அந்த கம்ப்யூட்ட ர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கி ருந்து அது இணைய த்துக்கு பர வக்கூடும். ஜாக்கிரதை!

ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போ தும்… உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப் பட்டு தற்கொலை செய்து கொண்டவர்க ளும் உண்டு.

இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங் களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமா க கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக் கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.

தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக் கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற் றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்ட மிடுங்கள் உஷாருப்பா.. உஷாரு..

 – பாலா, குமுதம் சிநேகிதி

One Comment

  • jafer

    இது மட்டும் இல்ல நெட்வொர்க் சம்பத பட்ட எந்த எலக்ட்ரோனிக் அகேச்சச்சொரீஸ் (Electronics Accessories)லும்(like Mobile,Iphone,ipad,PDA,wifi Bluetooth digital camera,internet using pc`s) உங்க இரகசியங்கள வைக்க ௬டாது ஏன்னா? இப்போ 3G டெக்னாலஜி உங்க நம்பர் இல்லனா எதாவது ஒரு நம்பர் or Computer IP சும்மா கிடச்சாலும் சாப்ட்வேர் வச்சு தேடினால் போதும் எல்லாம் வந்துடும் ஏன் சொல்லுறேன ? அது மாதிரி என்கிட்ட ஒரு chines சாப்ட்வேர் இருக்கு.so care be full

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: