நம் எல்லோருக்குமே ஆசைதான் வாரணம் ஆயிரம் சூர்யா போல நமக்கும் ஒரு சிக்ஸ்
பேக் இருந்தால் நன்றாக இரு க்குமே என்று! ஆனால் என்ன செய்ய, சூர்யா போல நம்மால் மாதக் கணக்கில் ஜிம்முக்கு போகவும் முடியாது. உணவு க் கட்டுப்பாட்டிலும் இருக்க முடியாது!
‘இவை இரண்டையுமே செய்யாமல் கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டும். இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா சொல்லுங்கள்’ என்று யாராவது கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும்.
ஆனால், அமெரிக்க ஆய்வாளர் ப்ரூஸ் ஸ்பீகெல்மேனோ, ‘அவ்வ ளவுதானே கவலையை விடு ங்க. இந்த உடற்பயிற்சி மாத்தி ரையை சாப்பிடுங்க. நீங்க ஜிம்முக்கும் போக வேண்டா ம் உணவுக் கட்டுப் பாட்டிலும் இருக்க வேண்டாம். ஆனால் கட்டுமஸ்தான உடலமைப்புக் கு நாங்க கியாரண்டி’ என்று சொல்லாமல் சொல்கிறார்.
ப்ரூஸ் ஸ்பீகெல்மேன் தலை மையிலான ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கும் இயற்கை ஹார் மோன் ஒன்று உடற்பயிற்சி போலவே செயல்பட்டு கெட்ட கொழுப்பி னை நல்ல கொழுப்பாக மாற்றுகிறது என்பதுதான் ஆய்வுலகின் சமீபத்திய ஹாட் செய்தி.
இந்த ஹார்மோனுக்கு ‘ஐரிசின்’ என்று பெயரிட்டிருக்கிறார் ஸ்பீகெ ல்மேன். மனிதர்கள் கடவுளுடன் தொடர்புகொள்ள அனுமதி கொடுத் த கிரேக்க பெண் தெய்வத்தின் பெயர் ஐரிஸ். அதுபோல உடற் பயிற்சியான து உடலின் பல திசுக்களுடன் தொ டர்புகொள்ள இந்த ஹார்மோன் உத வுவதால் இதற்கு ஐரிசின் என்று பெயர் வைக்கப்பட்டது என்கிறார்.
ஐரிசின், எலிகள் மற்றும் மனிதர்களி ன் உடலில் இயற்கையாகவே உற்பத் தி ஆகிறது. இது, உடலின் செலவிட ப்படாத சக்தியை சேமிக்கும், சிறு உருண்டைகளால் ஆன வெள்ளை கொழுப்பினை, வெப்பத்தை உண் டாக்கும் காப்பி கொழுப்பாக (பிரவுன் ஃபாட்) மாற்றுமாறு உயிரணுக் களை தூண்டுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
உடற்பயிற்சியினால் தசை திசு க்களில் ஏற்படும் மாற்றங்க ளான கலோரிகள் எரிக்கப்படு வது, மேம்படுத்தப்பட்ட இன்சு லின் உற்பத்தி மற்றும் உடல் உறுதி பெறுவது ஆகிய பல மாற்றங்கள் ஐரிசின் செயல் பாட்டினாலும் ஏற்படுகின்றன.
ஐரிசின் கொடுக்கப்பட்ட எலிக ள் சிகிச்சைக்கு பின்னான பத் து நாட்களில் சில கிராம்கள் அளவு எடை குறைந்தன. உயி ரணுக்களின் செயல்பாட்டுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் மரபணுக்கள் தூண்டப் பட்டது. மேலும், அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளால் உட லுக்கு ஏற்படும் சேதமும் ஐரிசினால் குறைக்கப்பட்டது. இதனால் உணவுகளால் ஏற்படும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஆகிய நோய் களிலிருந்து உடலும் பாதுகாக்கப்படுகிறது.
இது தவிர, உடற்பயிற்சியானது நரம்பு தசை பகுதிகளுக்கு பலன ளிக் கக்கூடியது. அது போல ஐரி சினும் பலனளிக்கும் பட்சத்தில், தசை நோய்களான மஸ்குல ர் டிஸ்ட்ரஃபி மற்றும் தசை விரய மாதல் ஆகி யவற்றுக்கும் ஐரிசின் கொண்டு சிகிச்சை அளிக்க முடி யும் என்கி றார் ஸ்பீகெல்மேன்.
அமெரிக்காவின் ஹார்வர்டு மரு த்துவ பள்ளியின் மூத்த ஆய்வாள ர் ஜெஃப்ரி ஃப்லையர் ஐரிசின் பற்றி கூறுகையில், ஐரிசினுடைய வரு கை உடற்பயிற்சி, உடல் எடை மற்றும் நீரிழிவு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை புரிந்துகொள்ள ஒரு புது அணுகுமுறை யை அறிமுகப்படுத்தி இருக்கிறது என்கிறார்.
ஐரிசினை உடற்பயிற்சி மாத்திரை யாக உற்பத்தி செய்யவும், பிரவுன் ஃபாட் தொடர்பான மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ளவும் ‘எம் பர் தெரபியூடிக்ஸ்’ என்னும் ஒரு நிறுவனத்தை தொடங்கியிருக்கி றார் ஸ்பீகெல்மேன். இந்த நிறுவன த்துக்காக சுமார் 34 மில்லியன் டாலர் கடனுதவியும் பெற்றிருக்கி றார்.
ஆனால், ஸ்பீகெல்மேன் நினைப்ப து போல இந்த ஐரிசினை உடற்பயிற்சி மாத்திரையாக மாற்றுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்கிறார் அமெரிக்காவின் எம். ஐ.டி ஆய்வு மையத்தின் உயிரி யல் துறை பேராசிரியர் ஹார் வீ லோடிஷ். ஏனென்றால், கட ந்த 1990-களில் தான் கண்டு பிடித்த ‘அடிப் போனெக்டின்’ என்னும் ஹார்மோனை மாத் திரையாக தயாரிக்க முயன்று இறுதியில் தோல்வியையே சந்தித்ததாக கூறுகிறார் லோ டிஷ். அடிப்போனெக்டினும் ஐரிசினை போன்ற ஹார்மோன் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஐரிசினும், அடிப்போனெக்டினும் ரத்தத்தில் அதிக அளவு களில் இருக்கின்றன. அதைவிட அதிக அளவுகளில் இவை இரண் டையும் மாத்திரையாக உட்கொ ண்டால் மட்டுமே இந்த ஹார் மோன்களின் பலன் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். இந்த காரணத்தாலேயே இவை இரண் டையும் மாத்திரைகளாக உற்பத் தி செய்வது மிகவும் கடினமான ஒன்று என்கிறார் லோடிஷ்!
அதேசமயம், ஐரிசினை உற்பத்தி செய்வது மிகவும் சுலபம். அதனால் ஜீன் தெரபி போன்ற முறைகள் மூலமாக ஐரிசினை கொண்டு சிகிச் சை அளிக்க முடியும் என்கிறார் பேராசிரியர் லோடிஷ்.
மொத்தத்தில் உடல் பருமன், நீரிழி வு மற்றும் நரம் புதசை நோய்களான மஸ்குலர் டிஸ்ட்ரஃபி மற்றும் தசை விரயமாதல் உள்ளிட்ட பல நோய்க ளுக்கு ஐரிசின் கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறார் ஸ்பீகெல்மேன்!
எது எப்படியோ, ஜிம்முக்கும் போகா மல், உணவுக் கட்டுப்பாட்டிலும் இரு க்காமல் கட்டுமஸ்தான ஒரு உடல மைப்பு நமக்கு கிடைத்தால் கசக்கு மா என்ன? அதனால் ஐரிசின் சீக்கிர ம் உடற்பயிற்சி மாத்திரையாக மாறு வதற்கு ஆய்வாளர்
ஸ்பீகெல்மேனின் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துவோம்.
– பத்மா ஹரி