Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாப்பிள்ளை இல்லாமலேயே நடைபெற்ற‍ விநோத திருமணம்

 

துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க் கெட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்துவரும் கேரள மா நிலம் காயங்குளம் பகுதியை சேர்ந் த கமலேஷ். கடந்த 8 மாதங்களுக்கு முன் தனது சொந்த ஊருக்கு திரும் பிய‌ அவருக்கு, திருமணத்திற்கு பெண்பார்த்து கொண்டிருந்த நேரத் தில் சாரி கிரிஷா என்ற பெண்ணை ப் பார்த்து அவருக்கு நிச்ச‍யதார்த்த‍மும் செய்தனர். த‌னது திரும ணம் நடைபெற இருப்ப‍தால் அதற்கு விடுமுறை கேட்டுள்ளார் கமலேஷ். ஆனால்,  கம லேஷின் கடை உரிமையாளரோ, கமலேஷ் தனது திருமணத்திற் குச்செல்ல அவ ருக்கு விடுமுறை அளிக்க மறுத்தார். இதனால் அவர் அந்நாட்டில் உள்ள‍ தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மூலம் பேச்சு வார்த்தை நடத்தியும், குறிப்பிட்ட நேரத்தில் கமலேஷின் பாஸ்போர்ட்டை அவர்  ஒப்படைக்க அவர் மறுத்துவிட்டதால், விமான நிலையத்தில் காத்திருந்த மாப்பிள் ளை கமலேஷ், முகூர்த்த‍ நேரத்தில் தனது திருமணத்திற்கு வர முடிய வில்லை. என்றாலும், சுபமுகூர்த்த நேரத்தை பெண் வீட்டாரும் சரி பிள் ளை வீட்டாரும் சரி தவறவிட விரும் பாத அவர்கள் துணிந்து ஒரு முடி வை எடுத்த‍னர். அதன்படி, மாப்பிள்ளை இல்லையென்றால், என்ன‍ மாப்பிள்ளையின் சகோதரி தகவிதா இருக்கிறாரே! என்று கூறி மாப்பிள்ளை கமலேஷ் சார்பில் அவரது சகோதரியே மணப்பெண் ணுக்கு தாலி கட்டினார். திருமண விருந்து முடிந்ததும், புதுப்பெண் சாரி கிரிஷா, புகுந்த‌ வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மாப்பிள்ளை இல்லாமலே நடந்த இந்த விநோத திருமணத்தை பற்றி பார்த்தோர் கேட்டோர் என்று அனைவரும் வியந்து வருகின் றனர்.

Leave a Reply