இருபெரும் திரைநட்சத்திரங்களான சினேகாவும் பிரசன்னாவும் கட ந்த சில மாதங்களுக்கு முன் பத்திரிகை யாளர்களை சந்தித்து, நாங்கள் காதல் திரு மணம் செய்து கொள்ளப் போகிறோம். எங் களது இரு வீட்டாருடைய சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடைபெறும் என்று இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.
மேலும் நடிகர் பிரசன்னா பிராம்மண வகு ப்பைச் சார்ந்தவர் ஆவார். நடிகை சினேகா நாயுடு வகுப்பை சார்ந்தவர் ஆவார். இத் திருமணம் கலப்புத் திருமணமாக இருப்ப தால், நடிகர் பிரசன்ன பிராம்மண முறைப் படி ஒரு தாலியும், நடிகை சினேகா குடும்ப வழக்கப்படி இன்னொரு தாலியும் ஆக மொத்தம் இரண்டு தாலி கட் டினார்.
இந்த திருமணத்திற்கு, பெரிய திரை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய் , சூர்யா, அஜித், விக்ரம் போன்ற நடிகர்களை தவிர ஏனைய நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு, தங்க ளது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.