Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (13/05):மீண்டும் நான் மறுத்தால், தற்கொலை செய்வேன்

அன்புள்ள அம்மாவுக்கு—

மிகுந்த மனகுழப்பத்தில் தவிக்கும் எனக்கு, உங்கள் பதில், நல்ல தீர்வு தரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். நான் அரசு ஊழியன். வயது, 29. உடன் பிறந்தவர்கள், நான்கு பேர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கு ம் போது, உடன்படித்தவளை உயிராக நேசித்தேன்; அவளு ம் தான்.

திடீரென சாலை விபத்தில், அவள் இறந்து விட, அவளை மறக்க முடி யாமல், இதுவரை திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முன், நண்பனின் தங்கை மூலமாக, அவளி ன் தோழி அறிமுகமானாள். அவள் படிப்பில் முதல் மாணவி. அவள் தந்தை, மத்திய அரசில் உயர் பதவியில் இருக்கிறார். அறிமுகம் ஆகும் போது, அவள் பத்தாம் வகுப்பு படித்தாள். நல்ல நண்பர்களாக பழகினோம்.

தினமும் குறுந்தகவல் அனுப்புவாள். சில சமயங்களில் வீட்டில் போ ரடித்தால், என்னுடன், எஸ்.எம்.எஸ்., மூலமாக சாட் செய்வாள். நான் எல்லாரிடமும் மிகவும் எளிமையாக, இனிமையாக, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து பழகுவேன். எனவே, என் நட்பு வட்ட ம் மிகப்பெரியது.

தினசரி சாப்பிட்டது, உடல் நலம், உலக விஷயம், பொது விஷயம் பற்றி எல்லாம், நானும், அவளும் விவாதிப்போம். அவள் என் குடும்ப த்தில் ஒருத்தி போல, எல்லா விஷயத்திலும் அக்கறை எடுத்துக் கொண்டாள். எனக்கு ஒரு பழக்கம் அம்மா…

நண்பர்களிடம் எதையும் மறைத்து, போலியாக பழக மாட்டேன். அது போலவே, அவளிடம் என் பழைய காதல், அதனால், திருமணம் செய் யாமல் இருப்பது, சிறு வயதில் சைட் அடித்தது, நண்பர்களுடன் மாதம், ஒரு முறை மது அருந்துவது என, எல்லாமும் சொன்னேன்.

திடீரென என்னை, ஒரு நாள் காதலிப்பதாக சொன்னாள். அப்போது, அவள் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். நான் மிக வும் பொறுமையாக, அவளிடம் எங்கள் வயது வித்தியாசம், குடும்ப சூழல், அவள் ஒரு மாணவி உட்பட எல்லாவற்றையும் விளக்கி கூறி, மறுத்து விட்டேன். அதன் பின், எஸ்.எம்.எஸ்., பண்ணுவதை நிறுத்தி விட்டேன்.

ஆனால், அவள் அதை ஏற்க மறுத்து, தற்கொலை செய்து கொள்வே ன் என மிரட்டினாள். சொன்னதும் இல்லாமல், வேண்டுமென்றே அரை யாண்டு தேர்வில் தோல்வியடைந்து, அதை சாக்காக வைத்து, தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டாள்.

எனவே, அவளை ஒரு பொது இடத்தில் சந்தித்து, அவளுக்கு அறிவு ரை கூறி, நன்றாக படிக்க சொன்னேன்.

ஆனால் அவள், என்னை இழக்க விரும்பவில்லை என்று கூறி, கதறி அழுதாள். மீண்டும் நான் மறுத்தால், தற்கொலை செய்வேன் என்றா ள்.

நான் பயந்து, அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்க, சரி… என்று சொல்லி விட்டேன். அதன் பின், அவள், என்னை உயிராக காதலித் தாள். அவளின் அன்பில், என் மனம், கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டது. எனக்கும், அவளை இழக்க மனம் இல்லை. பிளஸ் 2வில், 87 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாள்.

டில்லியில், அவள் உறவினர் மூலமாக, அவளின் லட்சிய படிப்பு படி க்க, அங்கு கல்லூரியில் சேர்ந்து விட்டாள். பெற்றோர் வற்புறுத்தலா ல், அவள் இப்படிப்பை முடித்து வேலையில் சேர, ஆறு வருடம் ஆகு ம். அதுவரை என்னை காத்திருக்க சொல்கிறாள். அவளை ஏமாற்றி னால், உடனே செத்து விடுவேன் என்கிறாள்.

இதுவரை, நான் அவளிடம் தவறாக நடந்தது இல்லை அம்மா. நண் பர்களிடம் விவாதித்தேன். சில பேர், “அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்; அதுவரை காத்திரு…’ என்கின்றனர். சில பேர், “இந்த கால பெண்களை நம்பாதே. நீ இங்கு, அவள் அங்கு கல்லூரியில், வேறு யாரையாவது காதலித்து, உன்னை ஏமாற்றி விடுவாள். உன் வாழ்க்கை பாழ்…’ என்கின்றனர்.

வேறு சிலரோ, “உனக்கு வயது, 30 நெருங்கி விட்டது. இன்னும் ஆறு வருடத்தில், அரை கிழவன் ஆகி விடுவாய். ஆனால், அப்பெண்ணோ, இளமையாக இருப்பாள். இது பல விஷயங்களில், உனக்கு பிரச்னை. அந்த பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள், அந்த பெண்ணை கிண் டல் செய்வர். அவள் மிகவும் கவலை கொள்வாள்…’ என்கின்றனர்.

ஒரே குழப்பமாக இருக்கிறது அம்மா. நான் என்ன செய்வது?

எனக்கு அவள் மேல், 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது. அவள் நலன் தான் எனக்கு முக்கியம்.

1. அவளை, ஆறு வருடம் கழித்து திருமணம் செய்யவா?

2. வயது வித்தியாசம் (12) பாதிப்பை ஏற்படுத்துமா?

3. உறவினர்கள், நண்பர்கள் அவளை கிண்டல் செய்வரா?

4. அவளை ஏற்க மறுத்து விடுவதா?

5. இதற்கு வேறு வழி உள்ளதா?

6. இதில் என் நலன் முக்கியமில்லை. அவள் நலனை யோசித்து, நல் ல தீர்வாக சொல்லுங்கள் அம்மா. உங்கள் பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் மகன்.

இப்படிக்கு உங்கள்,
அன்பு மகன்.

அன்புள்ள மகனுக்கு—

உன் கடிதத்தை வாசித்தேன்.

சாலை விபத்தில் காதலியை இழந்த உன்னை, பனிரெண்டு வயது இளையவள், உயிருக்கு உயிராய் காதலிக்கிறாள். அவளுக்காக ஆறு வருடங்கள் காத்திருந்து, அவளை மணந்து கொள்ளலாமா, வேண்டாமா என்ற மனக்குழப்பத்தில் இருக்கிறாய்.

நண்பனின் தங்கையின் தோழியின் காதல் எப்படிப்பட்டது என, முதலில் பார்ப்போம்.

அவளுக்கு உன் மேல் இருப்பது, வெறும் இனக்கவர்ச்சியே. தகப்பன் போல இருக்கும் ஆண்களை, சில பெண்கள் விரும்புவர். அதை, உள வியல் அடிப்படையில், “எலக்ட்ரா காம்ப்ளக்ஸ்’ என்பர்.

உன் நட்பு வட்டத்தையும், நீ, உன் நட்பு வட்டத்திற்கு செய்யும் உதவிக ளையும் பார்த்து, பிரமித்திருக்கிறாள் உன் தோழி.

நீ, ஏற்கனவே காதலில் விழுந்தவன் என்பது, அவளுக்கு உன் மேல் ஒரு இரக்க அலையை கிளப்பி விட்டது. தவிர, நீ மது அருந்தும் பழ க்கம் உள்ளவன் என்பது, “நம்மாள் ஆண்களின் கல்யாண குணத்தை கொண்டிருக்கிறான்…’ என்ற குறுகுறுப்பு ஆர்வத்தை ஏற்படுத்தி இரு க்கிறது.

அவள், அவளது வீட்டிற்கு ஒரே மகளாக இருப்பாள். வீட்டில் ஆண் வாசனை கிடைக்காத பெண், வெளியில் வயதில் மூத்த காதலனை தேடச் செய்வாள். அவள் ஒரு பிடிவாதக்காரி. கேட்டது கிடைக்க வேண்டும் என்பதற்காக, எதையும் செய்ய துணிபவள்.

அவளது தற்கொலை முயற்சி ஒரு, “எமோஷனல் பிளாக்மெயில்’ வகை. இப்போது கூட, அவள் தனக்கு பிடித்த பொருள் ஒன்றை, ” ஆறு வருடம் கழித்து பயன்படுத்திக் கொள்கிறேன்…’ என, முன்பதிவு செய்துவிட்டு, போயிருக்கிறாள்.

டில்லியில் தங்கி, ஆறு வருடம் படிக்க போகிறாள் உன் காதலி. அங் கு தினம் நூறு வித்தியாசமான ஆண்களை சந்திக்கக்கூடும். அந்த ஆண்களுடன் மானசீகமாய் போட்டியிட்டு, காதலன் பதவியை மிக எளிதில் இழப்பாய் மகனே!

உனக்கும், அவளுக்கும் உடல் ரீதியான தொடர்பில்லை என்பது, பெரிய ஆறுதல். ஆறு கேள்விகள் கேட்டிருக்கிறாய்.

கேள்வி ஒன்றுக்கான பதில் இதோ… எங்கள் சொந்தக்காரப்பெண் ஒருத்தி, பனிரெண்டு வயது மூத்த ஆணை பிடிவாதம் செய்து, மண ந்து கொண்டாள். நான்கு குழந்தைகள், வரிசையாக பிறந்தன.

ஆனால், கட்டின கணவனை, ஏதாவது சண்டை வந்தால், “கிழவன்’ என ஏச ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில், விரிசல் அதிகமாகி, இருவரு ம் விவாகரத்து செய்து கொண்டனர். குழந்தைகள் நடுத்தெருவில் நிற்கின்றனர்.

2. மனித வாழ்க்கையில், 12 வருடங்கள் என்பது மிகப்பெரிய இடை வெளியே. வயது வித்தியாசம் ஆண் – பெண் உறவில் மிக நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

3. “போயும், போயும் உனக்கு ஒரு அரைக்கிழவன் தான் கணவனாக கிடைத்தானா?’ என்று உறவினர்கள், நண்பர்கள், கட்டாயம் உன் தோ ழியை கிண்டல் செய்வர்.

4. “அவளை ஏற்க மறுத்து விடுவதா?’ என கேட்டிருக்கிறாய். டில்லி க்கு போயிருக்கும் ஆறு வருடத்தில், முதல் ஆறு மாதங்கள் போனா லே, உன் காதலியின் மனநிலையில், பெரிதாக மாற்றம் ஏற்பட்டு விடும். அவள், உன்னை, “ஏற்க மறுத்து விடலாமா?’ என, யோசிக்க ஆரம்பித்து விடுவாள்; இது சத்தியம் மகனே!

5. இதற்கு வேறுவழி உள்ளதா என வினவி இருக்கிறாய். பெற்றோ ரை விட்டு, உன் வயதுக்கு பொருந்தி வரும் மணப்பெண்ணை பார் த்து, திருமணம் செய்து கொள். திருமண அழைப் பிதழை, உன் விளக் கக் கடிதத்துடன் அவளுக்கு அனுப்பு.

6. தற்கொலை செய்து கொள்வாளோ என பயந்தால், நீயும், உன் தோழியும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். ஆறு வருடக் காத் திருப்பில், என்றைக்கு அவளுக்கு உன்னுடனான காதல் பொருத்தம ற்றது என உணர்கிறாளோ, அன்றைக்கே இருவரும் பேசி, காதலிலி ருந்து பரஸ்பரம் விடுபடுங்கள். ஆறு வருடங்கள் கழிந்த பின்னும், அவள் காதலில் உறுதியாக நின்றாள் எனில், அவளையே மணந்து, வாழ்க்கையின் மிகப் பெரிய ரிஸ்க் எடு மகனே!

டில்லியின் யுவன்களில், உன் தோழியின் வயதுக்கு பொருத்தமான வன் எவனாவது, உன் தோழியின் இதயத்தை திருடி, உன் வாழ்க்கை யில் ஏற்பட இருக்கும் மிகப்பெரிய விபத்தை தவிர்க்க உதவட்டும்!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: