Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாதனைச் சிறுமி “விசாலினி”

நெல்லை மண்ணின் மகள் விசாலினி

வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000)

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பது ம் இவள் பொழுது போக் கென்றாலும், இவள் படைத்துள்ளது  இமால ய சாதனை.

இவளுடைய IQ லெவல் 225. (கின்னஸ் சாதனை யாளரான கிம்-யுங்- யோ ங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என் பதைவிட, இது இன்னும் அதிகம்)

கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப் பிரி வில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப் பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற் றுள்ள்னர்.

இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக் குழந்தையின் தாய் திருமதி. சேது ராக மாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின் படி, அந்தக் குழந்தையு டன் இடைவிடாது அளவளாவியதின் பல ன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலி னியின் பேசும் திறனை பெருகச் செய்தது. இன்று உலகமே விசாலினியின் திறனை க்க ண்டு வியந்துகொண்டிருக்கிறது.

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு. கல் யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படை த்துள்ள சாதனைகள் இதோ:

MCP (Microsoft Certified Professional)

CCNA (Cisco Certified Network Associate),

CCNA Security(Cisco Certified Network
Associate Security),

OCJP (Oracle Certified Java
Professional).

CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான். மங்களூரிலு ள்ள NITயும், திருவில்லி புத்தூரி லுள்ள பொறியியல் கல்லூரி ஒன் றும் விசாலினியை தங்கள் கல் லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறி வாளியை, கல்லூரி வாழ்க்கைக் கு அனுப்பி வைக்கத் திட்டமிட வில்லை

உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன் னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆத ங்கம்.

ஆம் நம் மத்திய, மாநில அரசுக ளின் பார்வை இந்த உலக சாத னையாளர் மீது இன்னும் பட வில்லை.பதிவுலகில் குவி யும் பாராட்டுக் களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்ச த்திற்குக் கொண்டு செல்லட்டு ம்.

விசாலினியின் இ-மெயில் ஐ.டி:visalini2000@gmail.com. இதற்கு நம்மாலான ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி இச்சுட்டிப்பெண் ணை ஊக்கபடுத்தி வாழ்த்துவோம் நாம், மகிழட்டும் இவளை ஈன் றெடுத்த தாயும் , தந்தையும் !!

– இராஜேஷ் செல்வகுமார்

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: