மனதை மயக்கும் மென்மையான இசை, கை, காலை அசைத்தபடி எஜமானிகளின் மேல் மென்மையாய் அமர்ந்து யோகா செய்யும் நாய்கள் என களை கட்டியிருந்தது அந்த யோகா பயிற்சி மையம்.
மனிதர்களின் மனதிற்கும் உடலுக்கும் மகிழ்ச்சி தரக்கூடியவை யோகா. இவை இப்பொழுது செல்லப்பிராணிக ளுக்கும் பொழுது போக்காக சிறந்த உட ற்பயிற்சி தரக்கூடியவையாக மாறி வருகிறது.
இந்த ஸ்பெசல் யோகாவிற்குப் பெயர் ‘டோகா’. அமெரிக்கா, ஜப் பானில் பிரபலமாகியிருக்கும் இந்த யோகா தற்போது ஹாங்காங் கில் பெண்களிடையே பேஷனாகி வருகிறது.
நாள் முழுவதும் வீட்டிற்கு காவ லாக இருக்கும் இந்த யோகா நாய் களுக்கு மன உளைச்சலை போக்கு வதாக இருக்கிறது. நாய்களுக்கு பார்க், ஷாப்பிங் மால் என எங்கும் அனுமதி இல்லை. பொழுதுபோக்கு எதுவும் இல் லாமல் நாய்கள் அதிக சிரமத் திற்கும் மன உளைச்சலுக்கு ம் ஆளாகியிருக்கின்றன. இந்த நாய் களுக்கு ஆறுதல் தரும் வகையில் உள்ளது ‘டோகா’.
இந்த நாய்கள் மனிதர்களைப் பார்த்து தியானத்தையும், யோகா வையும் கற்றுக்கொள்கின்றன என்கிறார் டோகா கோச்சூ ஸெ ட் சி ஆகெர்மென். நாய்கள் தங் கள் பின்னங்கால்களை நீட்டி, முன்னங் கால்களை கைகள் போல அந்தரத்தில் டேகா செய் வது காமெடியாக இருக்கிறது. எஜமானியும் சேர்ந்து செய்வ தா ல் வியர்க்க விறுவிறுக்க எஜமானியின் வயிற்றில் அமர் ந்து ஜாலியாக டோகா செய்கின் றன என்கிறார் பயிற்சியாளர்.
இதன் மூலம் நாய்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக் கியமாக உணர்கின்றன என்கின்றனர் பயிற்சியாளர்கள். நம் ஊர் நாய்களுக்கும் இதனை முயற்சி செய்யலாமே !
இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
என்னோட செல்லம், வரிஷ்மாவு(நாய்க்குட்டி)க்கு நான் இந்த யோகாவை சொல்லித்தரலாம் என்று இருக்கிறேன். இந்த அரியத்தகவலை வெளியிட்ட விதை2விருட்சம் இணையதாரருக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்!