Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாத விலக்கு சமயத்தில் இருமினாலோ, தும்மினாலோ சிறுநீர் கசியுமே! என்ற அச்சமா?

நாற்பது வயதினைக் கடந்தாலே பெண்களுக்கு மெனோபாஸ் பருவம் தொடங்கிவிடும். உடலில் வலிகள், மன அயற்சி போன்ற வைகளோடு அடிக்கடி சிறு நீர் தொற்று கோளாறுகளும் வாட்டி வதைக்கும்.இருமினாலோ, தும்மினாலோ சிறு நீர் கசியும். இதனால் பொது இடத்திற்கு எங்காவது செல்லவேண்டும் என்றால் கூட கூச்சப்பட்டுக்கொண்டு செல்லமாட்டார்கள். இதற்கு காரணம் உடை நனைந்து விடுமோ என்ற அச்சம்தான்.

மொனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண் களுக்கு இந்த சிறுநீர் தொற்று ஏற்படுவது இயற்கைதான் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கு காரணம் உடலில்நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும் ஒரு காரணமாக இருக்கிறது.

மெனோபாஸ் பெண் உறுப்புகள் வலுவிழந்து காணப்படுவதோடு அதன் சுவர்களில் பாக்டீரியாக்க ள் குடியேறுகின்றன என்கின்றனர் மருத்துவர் கள். இதுவே சிறுநீர் தொற் றின் ஆரம்பமாகிறது. பின் னர் படிப்படியாக அரிப்பு, வலி, சிறு நீர் பிரியும்போது எரிச்சல், சிறு நீர் கலங்கலாக இருத்தல் போன்றவை காணப்படும் என்கின் றனர் பிரபல மகப்பேறு மருத்துத் துறை மருத்துவர்கள்.

சத்தான ஜூஸ்

சிறுநீர் தொற்று ஏற்பட்டவர்கள் தினசரி ஒரு பழரசம் அருந்த வே ண்டும் என்பது மருத்துவர்களின் அறி வுரையாகும். இது 35 சத விகிதம் வரை சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவதை தடு க்கும். பெர்ரீ பழ ஜீஸ் அருந்தினால் சிறு நீர் தொற்று நோயை கட்டுப்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். இதில் உள் ள ஃப்ளே வனாய்டுகள் நோய் தொற் று பாக்டீரியாக்களை கொல்கிறது.

பால் பொருட்கள்

மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்றினை தடுக்க பால் பொருட்கள் நன்மை தருகின் றன. யோகர்டு, சீஸ் போன்றவை வாரத்திற்கு மூன்று முறையாவ து உண்ணவேண்டும். இது 80 சத விகிதம் சிறுநீர் தொற்று ஏற்படுவ தை தடுக்கும். இதில் உள்ள நன்  மை தரும் லாக்டோசில்லி பாக்டீ ரியாக்கள் தீமை தரும் பாக்டீரியாவை எதிர்த்து போரிடுகிறது என்கின்றனர் மருத்துவ ர்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிக ரிக்கும் காய்கறிகள் பழங்களை சாப் பிட வேண்டும். வைட்டமின், தாது சத்துக்கள் நிறைந்த உண வுகளை உட்கொள்வதன் மூலம் சிறுநீர் தொற்று ஏற்படுவதை தவிர் க்கலாம். நல்ல உறக்கமும், ஓய்வும் சிறுநீர் தொற்று ஏற்படா மல் தடுக்கும் என்கின்றனர் மருத் துவர்கள்.

தண்ணீர் அதிகம் அருந்துங்கள்

அதிக அளவு தண்ணீர் அருந் துவது சிறுநீர் தொற்று ஏற்ப டுவதை தடுக்கும் என்கின்றர் மருத்துவர்கள். தினசரி 6 மு தல் 8 டம்ளர் தண்ணீர் அரு ந்துவது அவசியம். மிதமான சுடுநீரை பாட்டிலில் ஊற்றி அடி வயிற்றில் ஒத்தடம் கொடுக்கலாம். இது நோய் தொற்றினால் ஏற்படும் வலி யை தவிர்க்கும்.

காபி குடிக்காதீங்க

மெனோபாஸ் பருவத்தில் சில உணவுகளை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். சிட்ரஸ் பழ ஜூஸ்களை அறவே தவிர்க்க வே ண்டும். அதேபோல் காஃபின் சேர்க்கப்ப ட்ட உணவுகள், சில சாக்லேட்கள், காபி , ஆல்கஹால் போன்றவைகள் மெனோ பாஸ் பருவத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகளாக மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர். அதேபோல் காரமான உணவு களையும் சாப்பிடக்கூடாது என்கின்ற னர் மருத்துவர்கள்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: