Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஜய லட்சுமி, சில்க் ஸ்மிதாவாக மாறியது எப்படி? – வீடியோ

கனவுக்கன்னி, கவர்ச்சிக்கன்னி, காந்த கண்ணழகி, செக்ஸ் பாம் என்றல்லாம் ரசிகர்களால் அன் புடன் அழைக்க‍ப்பட்ட‍ மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா ஆவார். இவரது இயற்பெயர் விஜயலஷ்மி ஆகும். 1979-ல், சில்க் ஸ்மிதாவை நடிகர் வினு சக்கரவர்த்தி, தனது வண்டிச் சக் கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயக் கடை யில் பணிபுரியும் பெண் கதாபா த்திரத்தில் நடிக்க‍ வாய்ப்புகொடுத்தார். இதுவே இவரது முதல் பட மாகும். முதல் திரை ப்படத்தில் நடித்த‍ கதா பாத்திரத்தின் பெயரான சிலுக்கு என்ற‌ அந்த பெயரே இவருக்கு சினிமாவில் நிலை த்துவிட்டது. இவர் 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற் றும் ஹிந்தி ஆகிய மொழித் திரைப் படங்கள் உட்பட சுமார் 450ற்கும் மேற் பட்ட திரைப்படங் களில் நடித்து, தனது காந்த ஈர்ப்பு கொ ண்ட கண்களாலும், தனது இளமை மா றா உடல் அழகாலும் தனது முதல் திரைப் படத்திலேயே ரசிகர்களை கிற ங் கடித்தார்.

இவரது கவர்ச்சியான தோற்றத்திற்கும் மூன்று முகம் திரைப்படத்தி ல் நடித்த‍ துணிச்சலான‌ கதாபாத்திரத்தி னாலும்  தமிழ் தவிர தெலு ங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழித்திரைப் பட ங்களிலும் புகழ்பெற்றவருக்கு கவர்ச்சி நடனம் மட்டுமே இட ம்பெற்ற அமரன் போன்ற படங் கள் பெரிய அளவில் வெற்றி யை ஈட்டின. 1980 களில் இவ ரது நடனம் இடம்பெறவில்லை யென்றால், அத்தமிழ் திரைப்பட ங்கள் தோல்வியை தழுவும்  என்று சொல்லும் அளவிற்கு உயர்ந் தார்.

இவர் அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக் குதம்மா போன்ற திரைப்படங்க ளில் இவர் ஏற்று நடித்த சில நல்ல கதாபத்திரங்களின் மூல ம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி அனைத்து விதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என ஆணித்தரமாக நிரூபித்தார். ஆ னாலும் இவரை பத்திரிகைகளு ம் சில சினிமாவும் கவர்ச்சி நடிகையாகவே அடையாளபடுத்தி வந்த ன•

லயனம்(1989) என்கிற திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த கதா பாத்திரம் இவருக்கு மற் றுமொரு வித்தியாசமான பரிணாமத்தி னை உலகிற்கு எடுத்து காட்டியது. இந்தப்படம் பல மொழிகளில் மொழி பெயர்க்கபட்டது குறி ப்பிடத்தக்கது. இவரது மற்றொரு நல்ல படமா ன பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை மிக பெரிய வெற்றியை பெற்றது. கமல ஹாசன், ஸ்ரீதேவியுடன் இணைந்து இவர் நடித்த இந்த படம் ஹிந்தியிலும் சத்மா என்கிற பெயரில் மீண்டும் பட மாக்கப்பட் டது.

1996இல், ஸ்மிதா சென்னையில் உள்ள‍ தனது சொந்த அடுக்கு மாடி குடியிருப்பிலேயே தூக்கில் பிணமாக தொங்கினார். இவர் தற் கொலை செய்து கொண்டதாக பேசப்பட்ட‍து.  இச்சம்பவத் திற்கு இவர் ஒரு திரைப்படதை தயாரிக் க‍வும் முயற்சித்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட கடனாலும், காதல் தோல்வியி னால் ஏற்பட்ட குடிப் பழக்கத் தினாலும் இவர் மன இறுக்கத்திற்கு ஆளானதாக நம் பப்படுகிறது. ஆனாலும் இவரது மரணத்தி னை சுற்றி பல சர்ச்சைகளும் மர்மங்க ளும் இன்றளவும் நீடித்து வருகின்றன•

சில்க் ஸ்மிதா தான் உயிருடன் இருக்கும் போது, திரைப்படங்களில் தன்னை நடனம் ஆட வைத்த‍ அதன் தயா ரிப்பாளர்களை பல கோடி லாபம் பார்க்க‍ வைத்தார்.

இவரது மறைவுக்குப் பிறகு இவரது வாழ்க்கையை இந்தியில் தி டர்ட்டி  பிக்ஸர்ஸ் என்ற பெயரில் வெளியானது. இத்திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரத் தை நடிகை வித்யா பாலன் நடித்தி ருந்தார். இத்திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்ற‍தோடு, வித்யா பாலனுக்கு தேசிய விருதும் கிடை த்த‍து. இத்திரைப்படத்தின் படப்பிடி ப்பு நடக்கும்போதே இந்த திரைப் படம் வெளியிட தடை விதிக்க‍ கோரி சில்க் ஸ்மிதாவின் குடும்பத்தார் நீதிமன்றம் சென்றனர். ஆனா ல் இவர்களது வழக்கு தள்ளுபடி செய்ய‍ப்பட்ட‍து என்பது குறிப்பிட த்தக்க‍து.

இந்தியில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்து பெறு வெற்றி பெற்ற‍தால், மே லும் பல இந்திய மொழிகளில் தயாரிக்க‍ தி டர்ட்டி பிக்ஸர்ஸ்  தயாரிப்பாளர் முடி வெடுத்து ள்ளார். தமிழில் இப்படத்தில் சில் க் கதாபாத்திரத்தில் நடிக்க‍ அனுஷ்கா, நிகித்தா, ரிச்சா போன்ற நடிகைகள் நடி ப்பதாக பேசப்பட்ட‍து. ஆனால் தற்போது இந்த வாய்ப்பினை நயன் தாரா கைப்பற்றி யுள்ளார். ஏற்கெனவே பில்லா -1 திரைப் படத்தில் தனது கவர்ச்சியை காட்டி சொக் க‍ வைத்த‍ இவர் இந்த திரைப்படத்தில் மீண்டும் ஒரு கவர்ச்சி புயலாய் வலம் வந்து ரசிகர்களை கிறங்க டிப்பார் என்ற ரசிக ர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

செய்தி – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: