* மனிதனாகப் பிறந்தவனுக்கு வாழ்வில் உண்டாகும் பாக்கியங்க ளிலேயே மேலான பாக்கியம் பிறருக் குச் சேவை செய்வதே. சே வை என்றால் என்னவென்று தெரியாமல், அவரவரும் தமது குடும்பத்திற்காக மட்டுமே சே வை செய்கிறோம். அதோடு, நமக்கு சம் பந்தம் இல்லாத பிறருக்கும் முடிந்த சே வைகளைச் செய்ய வேண் டும்.
* சமைப்பதற்காக பானையில் அரிசி போடும் போது, பகவானை நினைத்துக் கொண்டு ஏழைகளுக் கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில் போட்டு விட வேண்டும். இதை மொத்தமாக ஒரு நாளில் சேகரித்து, சமைத்து அந்தந்த பகுதி கோ வில்களில் ஏழைகளுக்கு அன்னமிட வேண்டும்.
* தினமும் ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி புல்லோ அல்லது அகத்திக்கீரையோ கொடுக்க வேண்டும்.
* பொதுமக்களுக்காக கிணறு , குளம் வெட்டுவது, அன்ன தானம் செய்வது, ஆத்ம ஷே மத்திற்காக கோவில் கட்டு வது, பூஜைக்காக நந்த வனம் அமைப்பது போன்றவையும் தர்மங்களே.
* யாகம், யக்ஞம், தர்ப்பணம், திவசம் முதலிய இந்த உலகம் மட்டு மின்றி மற்ற உலகங்களில் இருப்பவர்களுக்கும் நம் சேவையை செய்ய வேண்டியது நம் தர்மமாகும்.
thanks to subbaraman gopalakrishnan on facebook