Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணிணி பராமரிப்பு!

1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பது தான். இதற்கு சி கிளீனர் போன்ற இல வச புரோகிராம்கள் நமக்கு உதவு கின் றன.

2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணை ய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள் ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க் கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.

3. கம்ப்யூட்டரில் உள்ள ஹா ர்ட் டிஸ்க்கினை டிபிராக் (De frag) செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோ கிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன் ஸ்டால் செய்வதனைப் பொறு த்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்வது நல்ல து.

4. சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன் படுத் தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்து வார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற் றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளனவா என்று பார்க்கவும்.

5.இன்னொரு வழியும் உள்ளது. Start மெனு சென்று அங்கு கிடை க்கும் ரன் பாக்ஸ் (Start>Run) செல்லுங்கள். %temp% என டை ப் செய்து ஓகே கிளிக் செய்தி டுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத் தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப் பட முடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.

6. விண்டோஸ் தரும் ஆட்/ரிமூவ் புரோ கிராம் மூலம் புரோ கிராம்களை அன் இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோ கிராம் சார்ந்த பைல்களை முழுமை யாக நீக்குவதில்லை. எனவே இதற்கெ ன உள்ள சில புரோகிராம்களை டவுண் லோட் செய்து பயன்படுத்தவும். [You must be registered and logged in to see this link.] uninstaller_free_download .html என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.

7.நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டே ட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோ கிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்க லாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகி ராம்களை தினந்தோறும் இயக்கவும்.

8. கம்ப்யூட்டரை கிளீன் செய்வ தைப் போல அதில் உள்ள டேட் டா வினப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள் ள வேண்டும். எனவே தினந் தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திரு த்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொ ள்வது நல்லது.

தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவா க்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.

9. ரிஜிஸ்ட்ரியை கிளீன் செய்திடுங்கள் என்று சில கட்டுரைகளில் படிக்கலாம். கம்ப்யூட்டர்களுக்குப் புதியவரா நீங்கள்? அப்படியானா ல் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: