Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரெஸ்டோர் பாலிசி என்ற புதிய வகை பாலிசி

வியாதிகளும் விபத்துகளும் எப்படி  அதிகமாகிவிட்டனவோ… அதே போல் தான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் நாளுக்கு நாள் புதுப்புது பாலிசிகள் வந்துகொண்டே இருக்கின்றன. புதிதாக எப்படி ப்பட்ட பாலிசிகள் வந்திருக்கின்றன என்ப தைப் பார்ப்பதற்கு முன்பு, இப்போது இருக்கும் நடைமுறையைப் பார்த்து விடுவோம்.

உதாரணத்துக்கு மூன்று லட்ச ரூபா ய்க்கு ஒரு ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி எடுக்கிறீர்கள். திடீரெனக் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு ச் சிகிச்சைக்கான தேவை ஏற்பட்டு, உங்களின் பாலிசி தொகை முழுவ தும் செலவாகிவிடுகிறது. அடுத்த சில மாதங்களில் இன் னொரு குடு ம்ப உறுப்பினருக்கு ஏதாவது சிகிச்சை தேவைப்பட்டால், காப்பீட்டு நிறுவனத்தை நாட முடியாது. வேறு வழி இல்லாமல், நம் கைக் காசைத்தான் செலவு செய்ய வேண்டி இருக்கும். இல்லை என் றால், ‘சூப்பர் டாப் அப்’ என்று வேறு வகையான பாலிசிகள் எடுக்க லாம். ஆனால், அவற்றின் பிரீமி யம் அதிகமாக இருக்கும். இந்தப் பிர ச்னையைச் சமாளிக்கத்தான் காப்பீட்டு நிறுவனங்கள் ரெஸ் டோர் பாலிசி என்ற புதிய வகை பாலிசிகளை அறிமுகப்படுத்தி இருக்கின் றன.

மூன்று லட்ச ரூபாய்க்கு ஹெல்த் பாலிசி எடுக்கிறோம். மூன்று லட்ச ரூபாயும் சிகிச்சைக்காகச் செல வாகிவிட்டது. குடும்பத்தில் இன் னொரு நபருக்கும் சிகிச்சை எடுத்து க்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்தச் சமயத்தில் ரெஸ்டோர் பாலிசி எடுத்திருந்தால், இன்னொரு மூன்று லட்ச ரூபாய் க்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். இனிமேல் ஹெல்த் பாலி சி எடுப்பவர்கள் இந்த வகையான பாலி சிகள் எடுப்பதைப் பற்றியும் யோசிக் கலாம்.

சாதாரணமாக இரண்டு பெரியவர்க ளுக்கு (36 முதல் 45 வயதுக்குள்) மூன்று லட்ச ரூபாய்க்கு, சாதாரண மருத்துவக் காப்பீடு பாலிசிகளை எடுத்தால், சுமார் 5,000 ரூபாய் பிரீ மியம் செலுத்த வேண்டி இருக்கும் (இந்தத் தொகை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்). அதுவே நீங்கள் ரெஸ்டோர் பாலிசி எடுத்தா ல், சுமார் 2,000 ரூபாய் அதிகமாகச் செலுத்தினால் போதும்.

கூடுதலாக இன்னும் ஒரு மூன்று லட்ச ரூபாய்க்குச் சிகிச்சை எடுத் துக்கொள்ள முடியும். இதுவே இரண்டு பெரியவர்களுக்கு (36 முதல் 45 வயதுக்குள்) மொத்தமாக ஆறு லட்ச ரூபாய்க்குச் சாதாரண மருத் துவக் காப்பீட்டு பாலிசிகளை எடுத்தால், அதிகப்படியாக 9,000-க்கு ம் மேல் பிரீமியமாகச் செலுத் த வேண்டி இருக்கும். இதைப் பார்க் கும்போது சூப்பர் டாப் அப்பாலிசி எடுத்தாலே போது ம் என்று நினைக்கலாம். சூப் பர் டாப் அப் பாலிசி பிரீமியம் விலை குறைவுதான். ஆனால், அடிப்படையாக ஒரு பாலிசி எடுத்த பிறகுதான் சூப்பர் டாப் அப் பாலிசி எடுக்க முடியும். இந்த இரண்டையும் சேர்த்தால், பாலிசி பிரீமியம் குறைந்தது 1000 ரூபாய்க்கு மேல்  அதிகமாக இரு க்கும். ஆனால், ரெஸ்டோர் பாலிசி குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கொடுக்கிறது.

புதிதாக பாலிசி எடுக்க நினைப்பவர்கள், இதைப் பரிசீலனை செய்ய லாம்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: