ஒவ்வொரு பெண்ணிற்கு ஒவ் வொரு வடிவ முகம். சிலருக்கு நீள முகம். சிலருக்கு உருண் டை முகம், சிலருக்கு இதய வடிவ முகம். ஒவ்வொருவரும் தங்களின் முக அமைப்பிற்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் போட வே ண்டும். அப்பொழுதுதான் அது பாந்தமாய் பொருந்தி வரும். எந் த முகத்திற்கு எந்த வகையான தலை அலங்காரம் ஏற்றது என் று ஆலோசனை கூறுகின்றனர் பிரபல ஹேர் ஸ்டைலி ஸ்டுகள்.
முட்டை வடிவ முகம்
முட்டை வடிவமான முகம் கொண்ட பெண்கள் தங்கள் கூந்தலை குட்டையாக வெட்டினால் அழ கான, அமைப்பான முக அழகு கிடை க்காது. ஓரளவு நீளமாக, அலையடிப்பது போன்ற ஸ்டெப் களுடன் கூடிய`வால்யூம் லேய ர்ஸ்’ கட்டிங் செய்யவேண்டும்.
இந்த வகை ஹேர் கட் உங்கள் முகத்தின் இருபுறமும் கத்தை யாக விழுந்து, ஒடுங்கிய முகத் தை அகலமாக, அழகாக தோன் றச் செய்யும். இந்த கூந்தல் அலங்கார முறையை சாப்ட்வேர் துறை யில் பணிபுரியும் மங்கையர் விரும்புகின்றனர். ஓவல் முக அமைப்பு கொண்டவர்களுக்காக 25 க்கும் மேற்பட்ட ஹேர் ஸ்டைல் முறை கள் சர்வதேச அளவில் பின்பற்றப்படுகிறது.
நீளமான முகம்
நீளமான முகத்தைக் கொண்டவர்கள் குட்டை யாக முடி வெட்டலாம். நீளமாக முடி இருந்தா ல் அதை சுருட்டி அலை அலையாய் சின்னதாக் கலாம். இதனால் முகம் சின்னதாக தெரியும்.
இதயவடிவ முகம்
இதய வடிவ முகம் அரிதாக இருக்கும். இவர் கள் சைடில் கட் செய்து விடலாம். லேயர் லேய ராக கட் செய்தால் முகத்திற்கு அம்சமாக இருக் கும். முகமும் வடிவமாய் இருக்கும்.
சதுர வடிவ முகம்
சதுர முகமும் நீள கூந்தலும் கொண்டவர்கள் தங்கள் முகத்திற்கு ஏற்ப ப்ளாட் கட்டிங் செய்து கொள்ளலாம். சைடில் கொஞ்சம் வெட்டி விட்டால் அம்சமா க இருக்கும். முக வடிவம் சற்று மாறுதலா கும்.
உருண்டை முகம்
பெரும்பாலானவர்களுக்கு உருண்டை வடி வ முகம் இருக்கும். இவர் களுக்கு நீளமாக, ஸ்ட்ரெயிட் கூந்தல் அலங்காரம் அழகாய் பொருந்தும். நடு முதுகு வரை வெட்டி கொ ஞ்சம் சுருட்டி விட்டாலும் பொரு த்தம்தான்.
ரிசப்சன், பார்ட்டி போன்ற இடங்களுக்குச் செல்லும் போது உங்கள் முக அமைப்பிற்கு ஏற்ப அசத்தலாய் ஹேர் ஸ்டைல் செய்து போ ங்களேன். அனைவரின் கண்களும் உங்கள் மீதுதான் இருக்கும்.
இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.