Thursday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திரை விமர்சனம்: வழக்கு எண் : 18/9

வழக்கு எண் மூளையைத் தீட்டி உழைப்பை விதைத்து எடுக்கப் பட்ட படம். மிக எளிமை யான கதை. வறுமையில் உழலும் குடும்ப த்திலிருந்து ஒரு சிறுவன் குடும்பத்தின் வறு மையைப்போக்க படிப் பைப் பாதியில் விட்டுவிட்டு வெளி மாநிலம் சென்று முறு க்குக் கம்பெனியில் வேலை க்குச் சேர்ந்து அப்பா அம்மா வின் வறுமையையும் கட னையும் அடைக்கப் படாதபாடுபடுகிறான். (குழந்தைத் தொழிலா ளர்களின் கொத்தடிமைத்தனங்களை இவ்விடத்தில் சித்தரித்திருக் கிறார். இங்கு எதை ஒழிப்போம் என்று சொல்கிறார்களோ அதை ஒரு போதும் ஒழிக்கவே மாட்டார்கள். அதைத்தான் இயக்குநர் இங் கு காட்சிகளின் வழியே அதன் தீராத வலியை நமக்கு எடுத்துக் காட்டி யிருக்கிறார்.)

அம்மாவும் அப்பாவும் இறந்துபோன செய்தியைக்கூட மறைத்த அந்த முதலாளியைப் போட் டு துவைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்னை வருகிறா ன். பசித்து சாலையில் விழுந் து கிடக்கும் அவனுக்கு ஒரு பாலியல்தொழிலாளி உணவு வேலை எல்லாம் வாங்கித் தரு கிறார். ரோசி என்ற பெண் பிழைக்கும் வழி யற்று உடலை விற்றுப் பிழைப்பு நடத்துகிறா ள். கையேந்தி பவனில் உணவு வாங்கிக் கொ டுத்தவள் அங்கேயே அந்த முதலாளியிடம் தன் உட லின் நெளிவு சுழிவுகளை அவனுக்குக் காட்டி அந்த வேலையை அவனுக்கு வாங்கி த்தந்துவிட்டுப் பிழைப்பு நடத்தப்போகிறாள்.

பின்பு ஒரு நாள் வேசியாக இருப்பவள் கையில் காசில்லாமல் இரு க்கையில் அவன் நன்றிக் கடனுக் காக அவளைத் தேடிப்போய் அக் கா என்று சொல்லி இனிமே குடிக் காதீங்க அக்கா என்று சொல்லி பணத்தைக் கொடுத்து விட்டு வருகிறான். அவளை ஒரு நாள் தேடி ப்போகும்போது அவள் வேசித்தொழிலை விட்டு விட்டு பூ விற்றுப் பிழைத்ததாகவும் அப்போது அவளைத் தேடிவந்த வாடிக்கையாளர்கள் அவளைத் திரும்ப தொழிலுக்கு அழைத்ததால் அவள் அங்கிருந்து எங்கோ மறைந்துபோகிறாள். இப்படி ரோசியின் கிளைக் கதை நம்மை இச் சமூகத்தின் அவலத்தை நினைக்க வைக்கிறது. எத்தனை ரோசிகள் இந்தச் சமூகத்தில் இருக்கின்றார்கள். இதற்கெ ல்லாம் யார் பொறு ப்பு என்று தெரியவில்லை. நாம் பொறுப்பற்ற நாதியற்ற பிழைக்க வழியற்ற சமூகத்தில்தான் வசிக்கின்றோம்.

கையேந்திபவனில் கடுமையாக வேலை செய்து வாழ்வை நகர்த்து கிறபோதுதான் ஜோதி அந்த வழியே போ கிறாள். ஜோதியாய் நடித்திருக்கும் பெண்ணின் தேர்வு மிகக்கச்சிதம். அவன் நினைத்துப் பார்க்கும் காட்சிகளில் குடு ம்பம் நடத்தும் ஜோதியின் காட்சிகள் மிக அழகு. விஜய்மில்டன் காமிராவில் தான் படமெடுத்தரா என்பது தெரியவே இல்லை. அதுதான் ஓர் ஒளிப்பதிவாளரி ன் மிகச் சிறந்த ஒளிப்பதிவு என்று சொல் வேன். அவனுடன் வேலைக்குச் சேரும் இன்னொரு சிறுவன். இருவருக் குள்ளும் கையேந்திபவனிலும் அந்த வழியாய் வந்துபோகும் ஜோதியின் அழ கிலும் காட்சிகள் நகர்கி ன்றன.

ஜோதியைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கும் ஜோதிக்கும் எதார்த்தமாகவே எதாவது பிரச்னை வருகிறது. ஆனால் ஜோதியு ம் அவளின் அம்மாவும் அவனைக் கடுமையாகத் திட்டிக்கொண்டே போகிறார்கள். ஜோதியி ன் புகைப்படம் அவனின் கைப்பைக்கு வருகிற திரைக்கதை யுத்தி நன்று. அந்தப் புகைப்படத்தைப் பார்த்து பார்த்து அவளின் மீதான தீவிரக் காதலை வளர்த்து கனவினில் அவளுடன் வாழ்ந்து குழந்தை கூட பெற்றுக் கொள் கிறான். இப் பையனின் தேர்வு இந்தப் படத்தின் இன்னொரு வெற்றி என்று கூறவேண்டும். வேறொரு பையன் தேர்ந்தெடுக்கப்பட்டு கடைசியில் இந்தப் பையன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கேள்விப் பட்டேன். இந்தப் பையன் மிகச் சரியான தேர்வு என்று நண்பர் அரவி ந்திடம் சொன்னபோது அவர் சொன்னார். அப் படியில்லை. பாலாஜியினால் யாரையும் அக்கதா பாத் திரமாக மாற்றிவிட முடியு ம். அவருக்கு அப்படியொரு ஆற்றல் உண்டென்று சொ ன்னார்.

என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். குண் டாக இருக்கும் என்னைக் கூட மெலிய வைத்து ஒரு கிராமத்திலிருந்து நகரத்திற் கு ஓடி வந்த பையனாக மாற்றிவிடுவார். அதில் அவர் கைதேர்ந்தவரென்பதை அரவிந்தின் பேச்சிலிருந்து தெரிந்து கொ ண்டேன். எனக்கும் ஒரு பாடம் இது. ஒரு கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஓர் ஆளை ஓர் இயக்குநர் கதைக்கேற்ற கதாபாத்திரமாக மாற்ற உடல்மொழியி லிருந்து பேச்சு மொழிவரைக் கற்றுத்தந்து அந்த ஆளை கதையின் பாத்திரமாக மாற்றும் அரிய பணியை அவரேதான் செய்ய வேண்டு மென்பதைத் தெரிந்துகொண்டேன்.

ஜோதியிடம் அவன் காதலைச் சொல்லவே இல்லை. காதலைச் சொல்ல மருகுகிறான். கடை சி வரை அவனால் சொல்ல முடியாத காதலை அவனுட ன் வேலை செய்த அந்தப் பையன் ஆசிட் ஊற்றி வீட்டி ல் இருக்கும் ஜோதியிடம் சொல்கிறான். அப்போது தான் நாயகனின் உண்மை யான காதல் அவளுக்குப் புரி கிறது. வீட்டைவிட்டுக் கிளம் புகிறாள். நீதிமன்றத்தில் போலீஸ்காரனின் பொய்யான நம்பிக்கை யில் காதலியின் முகம் சீராகுமென்ற நல்லெண்ணத்தில் இன்னொ ருவன் செய்த குற்றத்தை தான் செய்ததாக ஒப்புக் கொண்டு பத்து வருட சிறைதண்டனை பெற்று வேனில் ஏற்றப்பட்டு உட்கார்ந்திரு ந்த வேளையில் அங்கு வருகிற காதலி அவனைப் பார்க்கத் துடி க்கிறாள். அந்த இடத்தில் நான் குமுறி குமுறி அழுதே ன். கண்களைத் துடைத்துக் கொண்டேன். அங்கேயே வழ க்கு எண் 18/9 திரைப்படம் முடிந்துவிடுகிறது.

ஆசிட்டில் எரிந்த அவள் முக த்தைத் தந்த அந்த போலீஸ் காரனின் சுயநலத்திற்கு தண் டனையாய் ஜோதி அவன் மீது ஆசிட் ஊற்றி பழி தீர்க்கிறாள். தமிழ் திரைப்படமென்றால் கதை முடிந்துவிட வேண்டும். அதைத்தான் பாலாஜியும் செய்திருக்கிறார். அவள் கைதாகி உண்மையான குற் றவாளியைக் கண்டுபிடிக்கும் பணியைப் போலீஸ் துவங்கி நிர பராதியான நாயகன் விடுதலையாகி அவளை சிறைச்சாலையில் சந்திக்கிறான்.

ஜோதியின் ஒரு பக்கம் எரிந் ததைக் கண்டவன் தீயில் விழுந்த புழு வாய்த் துடித்து அவளுக்காகக் காத்திருப்ப தாகக்கூறி விடை பெற முடி யாமல் விடைபெற்றபோது அவள் அவனையே போய் மறையும் வரை பார்த்து அவ ன் மீதான் ஆழ்ந்த காதலைப் பார்வைகளின் ஏக்கத்தில் வெளிப்படு த்துகிறாள். நாமும் இந்தக் காட்சியில் கடும் பனியில் ஆடையற்று நடுங்கும் உடலைப்போல நடுநடுங்கிப் போ கிறோம்.

கிராமத்து நாயகன் நாயகி – நகரத்து நாயகன் நாயகி கதைக்குள் பின்னப்பட்ட கதை. நகரத்தில் வசதிமிக்க அடுக்குமாடியில் குடி யிருக்கும் இளம்நாயகன் அதே குடியிருப்பில் வசிக்கும் இளம் நாயகியை மயக்கிப் புணரும் சந் தர்ப்பத்தை உருவாக்க முயல்கிறா ன். அது ஒரு கட்டத்தில் அவளுக்குத் தெரியவர அவனைவிட்டு விலகுகி றாள். அவனால் அதைத் தாங்கிக் கொ ள்ள முடியாமல் அவள் மீது ஆசிட் ஊற்ற அவள் வீட்டுக் கதவி ன் அழைப்புமணியை அழுத்துகிறா ன். ஆனால் அப்போது கதவைத் திற ப்பவள் கிராமத்து நாயகி ஜோதியா கப் போக ஜோதியின் முகம் விதி யால் ஒரு பக்கம் எரிந்துபோகிறது.

பழி பாவம் எப்பவும் ஏழையைத்தான் வந்து சேரும் என்பதுபோல் ஜோதியின் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்த கிராமத்து நாய கன் மீது வந்து சேர்கிறது. அப்பாவியான நாயகன் காதலிக்காக சிறை செல்கிறான். உண்மை தெரிந்த கதாநாயகி அடுத்தவனை அழித்து அழித்து ரெளடித்தனங்கள் செய்து வழமையான தமிழ் திரைப்பட போலீஸ் அதி காரியை இந்தப் படத் தி லு ம் பழி தீர்க்கி றாள்.

ஜோதி வேலைக்கார பெ ண்ணாக வாழ்ந்திருக்கி றாள். உண்மைக் காத லை அறிகிற வேளையி ல் அவனுக்காக ஏங்கும் உணர்ச்சிகளை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பு திறனுள்ள ஜோதியை தமிழ் சினிமா கண்டுகொள்ளுமா என்று தெரியாது. இந்தப் படம் இவ்வளவு பெரிய தமிழ் சினிமா உலகில் எவ்வித அந்தஸ்தில்லாமல் கதையை வெகுவாக நம்பி எடுக்கப்ப ட்டு மிகுந்த துணிபுடன் திரைப்படமாக்கப்பட்டு வெளியாகி இருப் பது ஒரு தமிழ் சினிமாவின் பார்வையாளனாய் நான் ரொம்பப் பெருமைப் படுகிறேன்.

ரஜினி அஜீத் விக்ரம் தனுஷ் இவர்களின் படங்களில் மேம்ப டும் தொழிற்புரட்சிகள் இந்தப் படத்தில் அளவாகவே பயன் படுத்தப்பட் டிருக்கின்றன. டிஜிட்டல் காமிராவில் இந்தப் படம் முழுக்க எடுக்க ப்பட்டு இந்த மாதிரியான கதைக்குப் பொருந்திப்போவது நம்மை இன்னும் அதிக அழகியல் ஏதுமின்றி ரசிக்க வைக்கிறது. மிக நெரு க்கமாக நம்மை பிம்பங்கள் ஓடும் திரைக்குள் இழுத் துபோய் உணர வைக்கிறது. விஜய் மில்டன் தமிழ் சினிமாவின் எத்தனையோ காமிராமேன்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய காமிராமேன் என்பதில் எந்த ஐயப்பாடு மில்லையெனக்கு.

ஜோதியின் முகம் சமூகத்தின் குரூ ரத்தை என் முன் காட்டிக் கொண்ட இருக்கிறது படம் பார்த்திவிட்ட பின்பும். இன்னும் நான் ஒரு பக்கம் சிதைந்த ஜோதியின் முகத்தை மற க்க முடியாமல் பரித விக்கின்றேன். இதுபோன்று எத்தனை ஜோதியின் முகங்கள் இச்ச மூகத்தில் இருக்கு மோ என்று நினைக்க நினைக்க உடலெல்லாம பதறுகிறது. மனசு முழுக்க வலிக்கிறது. நாமெல்லாம் எதுவும் செய்யமுடியாத நிராயுத பாணிகளாய்த்தான் கேடுகெட்ட இச் சமூக த்தின் கையைக் கட்டி நிற்கின்றோம்.

உண்மையில் வெட்கக்கேடுதான். அராஜகத்தையும் அதிகாரங்க ளையும் அக்கிரமத் தையும் வேடிக்கை ப் பார்த்துக் கொண் டுதான் இருக்கின் றோம். என்று நம் சமூகம் முழுமை யாக விழிப்படைய மோ அன்றுதான் நம க்கான வாழ்வும் உரிமைகளையும் பெறுவோம். அதுவ ரை அரசாங்கத்தின் அடிமைகளாக அவன் தரும் பிச்சை களைப் பெற்று பிச்சைக்கார வாழ்வைத்தான் நடத்த வேண்டு ம். பட த்தில் வரும் ஜோதியைப் போல் ஒவ்வொருவரும் அயோக்கியர்களின் சமூகத் துரோகிகளின் ஏமாற்றுக்காரர்களின் மூஞ்சியில் ஆசிட் வீசும் காலம்தான் நம க்கு உண்மையான புரட்சி தோன் றும் காலம்.

பாலாஜி சார் உங்களை உங் களின் பொறுமையை உங்க ளின் திரைப்படமாக்கும் திற மையை உங்கள் ஒப்பிட முடி யாத துணிவை உங்களின் எளிமையை உங்களின் அட க்கத்தை எந்தச் சொற்களை எழுதி பாராட்ட முடியுமென்று தெரியவில்லை. உங்களால் தமிழ் திரையுலகம் உலக அரங்கில் மே டையேறும் நாள் வெகு தொ லைவில் இல்லை. வாழ்த்துகள் உங்களுக்கு.

வழக்கு எண் : 18/9 – தமிழில் திரைப்படங்களும் அவ்வப்போது வரு கின்றன என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.

– iyyappa madhavan

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: