Friday, February 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (20/05): வலுக்கட்டாயமாக முத்தமிட்டு உன்னை படுகுழியில் வீழ்த்தவும் . . . ??!!.

 

மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு,

எங்கள் வீட்டில், என்னோடு சேர்ந்து, மொத்தம் மூன்று பெண்கள் மட்டும் தான். நடுத்தர குடும்ப த்தைச் சார்ந்தவர்கள். எங்க ள் மூன்று பேரையும், நல்ல முறையில் திருமணம் செய் து வைத்தனர் என் பெற்றோ ர். எனக்கு இரண்டு குழந்தை . ஆண் ஒன்று, பெண் ஒன்று. என் வயது 25. கணவர் வயது 35. எனக்கு திருமணமாகி, ஆறு வருடம் ஆகிறது. என் கணவர், எப்போதும் இழிவா ன சொற்களால், என்னை காயப்படுத்துவார். அதையும், நான் தாங்கிக் கொண்டேன், என் குழந்தைக்காகவும், என் பெற்றோருக்காகவும்.என் வாழ்க்கை யில், நான் நினைத்து கூட பார்க்காத ஒன்று, என் வாழ்வில், நான்கு வருடங்களுக்கு முன், என்னை காதலிப்பதாக, ஒருவர் கூறினார். நான் அதை பொருட்படுத்தாமல், அவருக்கு புத்திமதி கூறி அனுப்பி விட்டேன். அவர் வேறு யாரும் இல்லை, என் தங்கை கணவர். என் னை இரண்டு வருடமாக காதலிப்பதாகக் கூறினார். அவர் வயது, 28 என்னுடன் நெருங்கி பழக ஆசைப்பட்டார். நான் அதை தவிர்த்து வந்தேன். என் கணவர் வீட்டில் இல்லாத நேரம் வருவார். இதனால், அவரை என் வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டேன். இருந் தும், அவர் வருகை தொடர்ந்தது. அவர் என்னிடம் முத்தம் கேட்டு நெருங்கினார். நான் அவரை அறைந்து விட்டு, அழுது கொண்டே இருந்தேன். அவர் சென்று விட்டார். பின்னொரு நாள், அவர், என் சம்மதமின்றி, என்னை கட்டி அணைத்து, முத்தமிட்டார். நான் அன்று, தற்கொலைக்கு முயன்றேன். அவர், என்னை காப்பாற்றி, “இனி உன் வாழ்க்கையில் குறுக்கே வர மாட்டேன்…’ எனக் கூறிச் சென்றார்.

என் தங்கையின் கணவர் என்பதால், என் கணவர் உட்பட யாரிடமும் சொல்லவில்லை.

அவர் என்னைவிட்டு விலகி சென்றார். நானும், அவரிடம் இருந்து விலகினேன். ஆனால், உறவுகள் கேள்வி கேட்க, பேச வேண்டிய நிர் பந்தம். அவர் திருந்தி விட்டார் என எண்ணி, அவரிடம் பேச ஆரம்பி த்தேன்.

அதன்பின் தான், பிரச்னை ஆரம்பமானது. திரும்பவும் அவர், என்னை விரும்புவதாகவும், “என் மேல் உனக்கு ஆசை அதிகம்…’ என்றும் கூறுகிறார்.

தனிமையில், நான் இருக்கும் நேரம் வீட்டிற்கு வந்து, என் சம்மதமி ன்றி எனக்கு முத்தம் இடுகிறார். இது தொடர்ந்து, நான்கு அல்லது ஐந்து முறை நடந்து விட்டது. இப்போது நான், அவரை நேசிக்க ஆரம் பித்து விட்டேன். அவரை, என் கண்கள் தேடுகிறது. என் நெஞ்சமும் தான். என் கணவரின் அருகில், படுக்க உடல் கூசுகிறது. என் தங்கை யின் முகம் பார்க்க மனம் கூசுகிறது. ஆனால், அவரை பார்க்க, என் உடல், மனம் மகிழ்ச்சி அடைகிறது. இது தவறு என, என் மனசாட்சி கூறினாலும், என் மனம் கேட்கவில்லை. இதை பற்றி அவரிடம் கூறி னால். “நாம் இருவரும் இன்னும் எப்படியெல்லாமோ இருக்க வேண் டும் என்று நினைக்கிறேன். நீ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளா தே, ஜாலியாக இருக்கலாம்…’ என்று கூறுகிறார்.

வாரமலர் இதழில், நான் விரும்பி படிக்கும் பகுதி அன்புடன் அந்தரங் கம் மட்டும் தான். ஏனெனில், நாம் வாழ்க்கையில் எப்படி வாழ வே ண்டும், எப்படி வாழக் கூடாது என்று நெறியை சொல்லித் தரும் பகுதி.

எல்லாருக்கும் நான் அறிவுரை கூறி இருக்கிறேன். ஆனால், நான் இன்று இந்த நிலை அடைவேன் என்று எண்ணி பார்த்ததில்லை.

என் தங்கைக்கு, நான் செய்யும் துரோகத்திற்கு மன்னிப்பு கிடையாது . ஆனால், அவர் இதை பற்றி துளி கூட நினைப்பதில்லை.

அவரை மறக்க, நான் என்ன செய்ய வேண்டும்? அவரை திருத்த வே ண்டும், யாருக்கும் தெரியாமல். என் தங்கை வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால், அதுவே எனக்கு பாதகமாக முடிந்து விட்டது. எனக்கு அறி வுரை கூறுங்கள்,

உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன்.

என்றும் அன்புடன் பெயர் வெளியிட விரும்பாத உங்கள் ரசிகை.

அன்பு மகளுக்கு, உன் கடிதம் கிடைத்தது.

உன் வீட்டுக்கு, நீ நடுப்பெண் என்று எண்ணுகிறேன். அக்காள் கண வருக்கு, 40 வயதும்; தங்கை கணவனுக்கு, 28 வயதும் ஆகின்றன. அக்காள் கணவர், உன்னிடம் வாலாட்டுவதில்லை என நம்புகிறேன். தங்கை கணவன், ஒரு கிளையில் பழுத்த மூன்று பழங்களில், இர ண்டாவதையும் சுவைக்க துடியாய் துடிக்கிறான்.

திருமணமான ஏழாவது வருடத்தில், தம்பதிக்கிடையே, “செவன்த் இயர் இட்ச்’ எனப்படும், மனவிரிசல் ஏற்படும். அது, உனக்கு ஏற்பட்டி ருக்கிறது. கணவனின் இழிசொற்களுக்கு மருந்தாய் தெரிகிறது, தங் கை கணவனின் காதல் பேச்சு. மைத்துனி, கொழுந்தியாள் உறவு முறை உள்ள பெண்களை, ஆண்கள் பெண்டாள நினைப்பது, எல்லா மதத் திருமணங்களிலும் யதார்த்தமாய் இருக்கிறது.

“தங்கையை கட்டிக் கொண்டோம்; அவளுடன் தாம்பத்தியம் பண் ணிவிட்டோம். தங்கையின் சாயலில் உள்ள அல்லது தங்கையை விட வடிவாய் உள்ள, அக்காளையும் கைப்பற்றினால் என்ன?’ என்ற ஆணாதிக்க எண்ணம், உன் தங்கை கணவனுக்கு.

உன் கணவர், காலையில் சென்றால், இரவு வீடு திரும்பக் கூடிய வேலையில் இருக்கிறார் என நம்புகிறேன். நீயோ, வேலைக்கு செல் லாத இல்லத்தரசி. உன் தங்கை கணவன் பொறுப்பான வேலையில் இல்லை அல்லது சுயதொழில் செய்பவன் என யூகிக்கிறேன்.

அதனால், அவனுக்கு உன்னை, சுற்றி சுற்றி வர நேரமிருக்கிறது. வலுக்கட்டாயமாக முத்தமிட்டு, முத்தமிட்டு உன்னை படுகுழியில் வீழ்த்தவும் முடிகிறது.

உன் தங்கை கணவன், திருமணமான பெண்களை வலைவிரித்து பிடிக்கும் ஒரு வேடன். உனக்கு தெரியாமல், இன்னும் பல திருமண மான பெண்களுடன் தொடர்பு வைத்து, அவர்களின் குடும்பங்க ளையும் பாழாக்கி வருகிறான் என நினைக்கிறேன்.

நீ இந்த கள்ள உறவைத் தொடரவிட்டால், என்னென்ன விபரீதங்கள் விளையும் என, நான் பட்டியல் போடவா? முத்தத்தில் திருப்தி கொ ள்ளாது, உங்களிருவர் உறவு, படுக்கையறை வரை நீளும். உன் தங் கை கணவன் வழியாக, நீ கர்ப்பம் தரிக்கக் கூடும். அந்த குழந்தை பிறந்தவுடன், மாறுபாடான சாயல் காரணமாக, குடும்ப அங்கத்தினரி டையே சந்தேகம் பூக்கலாம். தொடர்ந்து உங்கள் கள்ள உறவை, உன் தங்கையோ, உன் கணவரோ கண்கூடாய் பார்த்துவிடக் கூடும்.
விளைவு, இரு ஜோடிகளுக்கிடையே விவாகரத்து அல்லது கள்ள காதல் ஜோடி தற்கொலை அல்லது கொலை அரங்கேறும். உன் குழ ந்தைகளும், உன் தங்கை குழந்தைகளும் நடுத்தெருவில் நிற்கும்.

உன் பிரச்னைக்கான தீர்வை பார்ப்போம் மகளே…

முதலில், குலதெய்வம் கோவிலுக்கு சென்று, தெய்வத்திடம் பாவ மன்னிப்பு கேள். அடுத்து, கணவன் இல்லாத நேரத்தில், வீட்டிற்கு வரும் தங்கை கணவனை, “இனி உனக்கும், எனக்கும் எவ்வித தவ றான தொடர்பும் கிடையாது…’ என, அறிவித்து விலக்கு.

அவன் எளிதில் விலக உடன்பட மாட்டான். தங்கை கணவனிடம், “உன் மனைவியிடமோ அல்லது என் கணவனிடமோ விஷயத்தை போட்டுடைத்து, பிரச்னையை தீர்க்க முயல்வேன்…’ எனக்கூறு. மன க்கட்டுப் பாட்டை அதிகரிக்க, வாரம் ஒரு நாள், மவுனவிரதமோ, உண்ணாவிரதமோ இருந்து பார்.

உன் ஐந்து வயது மகனுக்கும், மூன்று வயது மகளுக்கும் முத்தங்கள் கொடுத்து, முத்தங்கள் பெறு. கணவனிடம் நெருங்கி, தாம்பத்திய எண்ணிக்கைகளை கூட்டு. வீட்டில் தனியாக இருக்காதே. ஏதாவது, ஒரு பணியில் ஈடுபடு. கணவன் வீட்டு மூத்த அங்கத்தினர்கள், யாரா வது இருந்தால், கூட்டி வந்து வீட்டோடு வைத்துக் கொள்.

ஒரே ஊரில், பக்கத்து பக்கத்து தெருவில் உங்களிருவர் வீடு இருந் தால், உன் வீட்டை வெகு தூரத்துக்கு மாற்று. உலகில், 300 கோடி ஆண் – பெண் ஜோடி இருக்கக் கூடும். யாருமே, “மேட் பார் ஈச் அதர்’ ஜோடி கிடையாது.

கணவனின் சிறு குறைகளை எல்லாம், பூதக்கண்ணாடி வைத்து பார் த்து, தாம்பத்தியத்தில் அதிருப்தியுறாதே. தாம்பத்தியத்தில், நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்ற ஞானோதயம் உனக்கு தேவை.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடு. அக்காள் குடும்பத்தை, வீட்டுக்கு வரவழைத்து, விருந்து கொடு. மெகா சீரியல்கள் பார்த்து, மனம் நொந்து போகாதே. கணவன், குழந்தைகளுடன் குட்டி பிக் னிக் போய் வா.

தனிமையில் இருக்கும், ஆண் – பெண் மனம், சாத்தான் விளையாடு மிடம். ஆன்மிகம், குழந்தை வளர்ப்பு, சுயதொழில், குடும்ப நலன் இவற்றை, தன்னந்தனியாக நிற்கும் மனதுடன் கோர்த்து விடு. மன தை தீமைகள் அண்டாது மகளே!

உன் குடும்பமும், உன் சகோதரிகள் குடும்பமும், அமோகமாய் வாழ, இறைவனை பிரார்த்திக்கிறேன். உனக்கும், உன் தங்கை கணவனுக் கும் இருக்கும் சபல மயக்க, தயக்க குழப்பங்கள், நிரந்தரமாய் அகல ட்டும். குறைகளை நீக்கி, நிறைகளோடு வாழ்வோமாக!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Leave a Reply

%d bloggers like this: