அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ள செய்தி, நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியா கிறது. மதிப்பெண் பட்டியல்கள் 30ம் தேதி வினியோகிக்கப்படும் என்று . பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிந்தன. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 5557 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ மாணவிகள் எழுதினர். நாளை (22 ம் தேதி) காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.