Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

18 வயசு – சில சுவாரஸ்யத் தகவல்கள்

புதுமுகங்கள் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய படம் ரேணிகுண்டா. அசால்ட்டாக செய்யும் கொலைகள், அடிதடிகள், நண்பர்களின் சேர் க்கை, பெற்றோர் வளர்ப்பு என்று ஒரு புது களத்தை கையில் எடுத்து கொண்டு புதுமுக இயக்குநர் என்ற எந்த அடை யாளமும் இல்லாமல் முற்றிலும் புதுமுகங்களை வைத்து வெற்றி பெற்றவர் டைரக்டர் பன்னீர்செல்வ ம். இந்த கூட்டணி இப்போது மீண்டும் இணைந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் 18வயசு என்ற படம் வெளியாக இருக்கிறது. படம் பற்றி நாம் கேட்டறிந்த சில தகவல்கள் இதோ…

18 வயசு படம் ஒரு சைக்‌கோ த்ரில்லர் நிறைந்த கதை. படம் பார்ப் பவர்களை அங்கும், இங்கும் நகரவிடாமல் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை த்ரி ல்லிங்காக உருவாக்கி இருக்கிறாராம் டைரக் டர். அதோடு ஒரு மெல்லிய காதல் கதையும் உண்டாம். குழந்தை களை ஒழுங்கா வழி நடத்தணும், சமூ கத்தில் மதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நல்ல விஷயங்கள் இந்த படத்தில் உண்டு.

படத்தின் ஹீரோ ஜானி தோன்றும் கா ட்சிகளுக்கு எல்லாம் நிச்சயம் கைத் தட்டல் உண்டு என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவுக்கு தன்னை மாற்றிக்கொண்டு இருக்கிறார். படத்தில் மிருகத்தின் அசைவுகளையும், மனிதர்களின் இயல்புகளையும் படத்தில் வைத் துள்ளனர். மிருகத்தின் உணர்வு கள் அந்த ஹீரோவுக்குள் வந்து அடித்து நொறுக்கும் காட்சிகளை அற்புதமாக செய்திருக்கிறார் ஜானி. தேனியில் எடுக்கப்பட்ட க்ளைமாக்ஸ் 8 நாட்களாக எடுக்க ப்பட்ட து. அதில் உயிர் கொடுத்து சண்டை காட்சியில் மிரட்டி இருக் கிறார் ஜானி. மாட்டின் உணர்வு மனிதனுக்குள் வந்தால் எப்படி அடித்து நொறுக்குமோ அதைப்போ ல இரண்டு முழங்கால் மற்றும் தலைமூலம் சண்டை போட்டுள்ளா ர் ஜானி. இதனால் தலை நரம்பில் ஜானிக்கு லேசான பாதிப்பு ஏற்ப ட்டதாம். இருந்தும் அந்த வலியையும் பொறுத்து கொண்டு சூட்டி ங்கில் நடித்தாராம். சூட்டிங் முடிந்த பின்னரே மருத்துவமனைக்கு சென்று தக்க சிகிச்சை எடுத்து கொண்டுள்ளார்.

news in dinamalar

Leave a Reply