Wednesday, June 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சேலம் பற்றிய சில அரியத் தகவல்கள்

* வர்த்தக நகரமாகவும், வேளாண் நகரமாகவும் சிறந்து விளங்கும் ஊர் சேலம். சேலத்தைச் சுற்றி கஞ்ச மலை, கொல்லிமலை, பெருமாள் மலை, சேர்வராயன் மலை என ஏகப்ப ட்ட மலைகள் இருக்கின்றன. ‘சைலம்’ என்றால் மலை. சைலம் என்பதே சேல மானதாகச் சொல்வதுண்டு.
 
* சேலம் மக்கள் கடும் உழைப்பாளிகள். கிணறு தோண்டுவது, கட்டடம் கட்டு வது, சுரங்கவேலை, ரோடு போடுவது போன்ற கடினமான வேலைகளில் ஈடு படும் தொழிலாளர்கள் அதிகம்.
 
* கைத்தறி நெசவுக்குப் பெயர் போன ஊர் என்பதால் வீடுகளிலேயே தறிபோட்டு நெய்வார்கள். வெள்ளி ப் பட்டறை, செயற்கை ஆபரணக் கல் தொழிற்சாலைகளில் பெண் கள் வேலைக்குப் போய் சம்பாதிப்பார்கள்.
 
* சினிமா பிரியர்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி நடித்த படங்கள் இன்றைக்கும் வசூலை வாரி இறைக் கும். இரவுக் காட்சி பார்த்து விட்டு, பக்கத்து ஊர்களுக்குச் செல்பவர்க ளுக்காகவே ஸ்பெஷல் பஸ்கள் இய க்கப்படும். ரசிகர் மன்றங்கள் அதிக ம்.
 
* சேலம் பஸ் ஸ்டான்ட் இரவு நேரத்திலும் விளக்கொளி மின்ன பர பரப்பாக இருக்கும். மல்லி, கனகாம்பரம், கதம்பம், பழங்கள், இனி ப்பு, காரம், சூடான இட்லி, பரோ ட்டா என நடுநிசி ஒரு மணிக்குக் கூட வியாபாரம் ஜரூராக நடக்கு ம்.
 
* உணவு விஷயத்தில் படு ரசனை யானவர்கள். அசைவ உணவு அத களப்படும். காடை, கவுதாரி, உடு ம்பு, முயல் என வறுத்தும், பொரி த்தும் தரும் சாலையோர உண வுக் கடைகள் மிக அதிகம்.
 
* முன்பெல்லாம் கிராமப்புறங்களில் ஒரு நாள் திருமணங்கள் நடக் கும். முதல் நாள் இரவு பெண் வீட்டார் புறப்பட்டு, மறுநாள் காலை மணமகன் வீட்டுக்கு வருவார்கள். தாலி கட்டியதும், மாலையும் கழுத்துமாக நட த்தியே ஊர்கோலம் செய்வித்து விடு வார்கள்.
 
சாதம், கத்திரிக்காய் குழம்பு, அப்பளம், வடை, உருளைக் கிழங்குக் கறி, மோர், வெல்ல பாயசம் என விருந்து சிம்பிளாக முடிந்து விடும். ஆனால் இரண்டு நாளைக்கு மைக், லவுட் ஸ்பீக்கர் கட்டி, சினிமா பாடல் கள், ஒலிச் சித்திரங்களை ஒளிபரப்பி என்டர்டெயின் செய்வார்கள்.
 
* தற்போது சத்திரம் எடுத்து, ஃப்ளெக்ஸ் பேனர் கட்டி, இசைக் கச் சேரி, டபுள் வீடியோ, என அசத்து கிறார்கள்.
 
* தள்ளுவண்டி மற்றும் கயிற்றுக் கட்டில் கடைகளைக் காணலாம். பெரிய எவர்சில்வர் தவலைக ளில் ஜில்லென்ற கம்பங்கூழ் விற் பார்கள். சுவையான, சத்தான இந் தக் கூழுக்குத் தொட்டுக் கொள்ள தரப்படும் மாங்காய் பத்தை, வெங்காயம், சுட்ட மிளகாய், மோர் மிளகாய், சுண்டை வற்றல் போன்றவை அமிர்தமாக இருக்கும்.
 
* தெய்வபக்தி மிக்கவர்கள். முருகன் கோயில்களில் பங்குனி உத்தி ரமும், அம்மன் கோயில்களில் ஆடிப் பூரமும் விசேஷம். தீ மிதி, அலகுக் குத்தல் போன்றவற்றை பெரிய VIP-கள் கூட செய்வார் கள். குறிப்பாக சேலம் கோட்டை மாரியம் மனுக்கு நடக்கும் பூச் சொரிதலும், வண்டி வேடிக்கையும் மிகப் பிரம் மாண்டமாக நடக்கும். பெரும் தன வந்தர்கள் கூட கடையை மூடிவிட்டு, சாமி கும்பிட வந்து விடுவார்கள்.
 
* சேலம் டவுன் பகுதியில் உள்ள ராஜ கணபதியும் மிகுந்த சக்தி வாய்ந்த பிள் ளையாராக அருள் பாலிக்கிறார். தினமும் அவருக்குப் பூசை வைத்த பின்பே, வியாபாரிகள் தொழி லைத் தொடங்குவார் கள். இரவுப் பணிக்குச் செல்லும் லாரி, பஸ் டிரைவர்களும் தரிசித்துச் செல்லும் வண்ணம், பிள்ளையாரை கம்பிகளின் ஊடே காண முடியும்.
 

* பாவாடை தாவணியில் பெண் களைப் பார்ப்பது அரிது. எங்கும் நைட்டிகளும் சுரிதார்களும் வந் துவிட்டன. என்றாலும் ரவிக்கை அணியாத, பின் கொசுவப் புடை வை கட்டிய, பாம்படம் அணிந்த பச்சை குத்திய வயதானப் பெண் களைக் காண முடியும்.

* முன்பெல்லாம் பெண் குழந்தை கள் பிறந்தாலே சலித்துக் கொள்வார்கள். வெறுப்பு காட்டி வளர்ப் பார்கள். ஆனால், இன்று விழிப்புண ர்வு ஏற்பட்டிருப்பதால், பெண் சிசுக்கொலை மிக மிகக் குறைந்து ள்ளது.
 
* போக்குவரத்துப் பிரச்னை இல்லா த ஊர். ‘பளபள’ என்று சுத்தமா கவும், லேட்டஸ்ட் சினிமா பாட்டு சி.டி. ஓட சத்தமாகவும் இயங்கும் தனியார் பேருந்துகள் ‘நான் முந்தி… நீ முந்தி …!” என போட்டிப் போட்டு பயணிக ளைக் கவர்வார்கள். பஸ்களின் உள் அலங்கார ங்கள் டாப்பாக இருக்கும்.
 
* கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இன் றைக்கும் மதிப்பு உண்டு. குடும்பப் பிரச்னை என்றால், அபராதம் கட்டச் செய்து அறுத்துக் கட்டி விடுவார்கள் . அதன்பின் அந்த ஆணும் இன்னொரு கல்யாணம் செய் யலாம். பெண்ணும் மறுமணம் செய்து கொள்ளலாம்.
 
* நேர்மையான குணமும், உண்மையா ன அன்பும் கொண்டவர்கள். பணம் இரு ந்தாலும் வெளிகாட்டிக் கொள்ள மாட் டார்கள். கோய முத்தூர்காரர்கள் போல வே கொஞ்சம் ராகம் போட்டு, செஞ்சா ப்லீங்க; வந்தாப்லீங்க; அக்குறும்பா போச்சாம்லீங்க!” என்று பேசுவார்கள்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: