Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சின்ன‍த்திரையில் மீண்டும் கலக்க வருகிறார் சொர்ணமால்யா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி பக்கம் சொர்ணமால்யாவைக் காண முடிகிறது. எங்கிருந்து அவரது டிவி வாழ்க்கை பிரகாசமாக ஆரம்பித்ததோ அதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி தொடர் ஒன்றில்தான் தற்போது தலைகா ட்ட ஆரம்பித்திருக்கிறார் சொர்ணமால்யா .

சன் டிவியில் தங்கம், தங்கம் என்று ஒரு டிவி தொடர் ஒளிபரப்பாகிறது. ரொம்ப நாட்களாக ஓடிக் கொண்டுள்ள இந்தத் தொடரை ஆரம்பத்தில் படு சீரியஸாக காட் டி வந்தனர். சீரியஸான முகங்கள், சீரிய ஸான சண்டைகள், சீரியஸான வசனங் கள் என ஓடிக் கொ ண்டிருந்தத் தொடரை திடீரென காமெடியாக்கி விட்டனர். வரு டக் கணக்கில் இழுக்க வேண்டும் என்றால் இதெல்லாம் செய்து தானே ஆக வேண்டும்…

நடிகை காவேரியை வைத்து காமெடித்தனம் செய்து வந்தன நிலை யில் இப்போது தொடரை எப்படிக் கொண்டு செல்வது என்பதில் இயக்குநருக்கே குழப்ப மாகியிருக்கும் போல. இதனால் திடீரென ஒரு புதுக் கேரக்டரை புகுத்தி விட்டார். அந் த புது கேரக்டர்தான் சொர்ணமால்யா. இவ ர் நீண்ட நாட்களாக டிவி பக்கம் காணாம லேயே இருந்து வந்தார். முன்பு சன் டிவியி ல் இளமை புதுமை நிகழ்ச்சியை கலக்கலா க கொடுத்து வந்து லைம்லைட்டுக்குப் போ னவர் சொர்ண மால்யா. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சன் டிவிக் குள் அவர் காலெடுத்து வைத்துள்ளார்.

சொர்ணமால்யாவைக் கூட்டி வந்து நாக கன்னிகை கேரக்டரைக் கொடுத்து நடிக்க வைத்து வருகின்றனர். சொர்ணமால்யாவு ம் தனது ஸ்டைலில் கலக்கி வருகிறார். இது சிறப்புத் தோற்றம் தா னாம். இந்தக் கேர க்டர் முடிவடைந்ததும் மறுபடியும் காவேரியின் அரைவேக்காட்டுக் காமெடியும், பழிவாங்கும் படலங்களும் தொட ரும் என்று தெரிகி றது.

இப்படி எதையாவது செய்துதானே சீரியல்களை லென்த்தா இழுத்து ஓட்ட வேண்டியிருக்கு…

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: