Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மகாபாரதம் வரலாற்று சான்றுகள் பற்றி சி.டி., வெளியீடு!

கலை, கலாசாரம், மருத்துவம், கல்வி, அறிவியல் என, அனைத்து துறைகளிலும் மற்ற நாடுகளு க்கு நாம் தான் வழி காட்டியாக இருந்துள்ளோம். இதை, இளை ய சமுதாயத்தினர் புரிந்து கொள்ள வேண்டும், என, உயர் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் பேசி னார். இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பின் நிறு வனர் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளருமான, டி.கே. வி.ராஜன், மகாபாரத போர் நிகழ்ந்த குரு÷க்ஷத்ரா மற்றும் கிருஷ்ணர், ராதை வாழ்ந்த தாகக் கூறப்படும் பிருந்தாவன் பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, அதை, “பிருந்தாவன் மற்றும் குரு÷க்ஷத்ரா- நினை வலைகள் என்ற தலைப் பில், குறுந்தகடாக தயாரித்துள் ளார். அதன் வெளியீட்டு விழா வில், டி.கே. வி. ராஜன் பேசிய தாவது: மகா பாரதம் என்பது, உண்மையாக நடந்த ஒரு நிகழ்வு என்பதை உறுதிப் படுத்த, பல ஆதா ரங்கள் உள்ளன. அர்ஜுனனுக்கு கிருஷ்ணர், பகவத் கீதையை உபதேசித்த இடமான ஜோதிசர், போரில் வெற்றி கிடைக்க அர்ஜுன ன் வழிபட்ட குரு÷க்ஷத்திர த்தில் அமைந்துள்ள துர்க்கை கோவில், பீஷ்மர் அம்பு படுக்கையில் படு த்திருந்த பான் கங்கா மற்றும் கண்ணன், ராதை சந்தித்த இடமான இம்விதலா உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் நட த்தி, அதில் கிடைத்த உண்மைகளை இந்த குறுந்தகட்டில் பதித்துள் ளேன், என்றார்.

thanks to dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: