தமிழில் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் அறி முகமான அசின், கஜினி திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்புத் திறனோடு நடித் ததாலும், இந்தியில் கஜினி ரீமேக்கிலும், ரெடி, ஹவுஸ்புல் ஆகிய மூன்று படங்க ளும் அசினுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளன. இத்திரைப்படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரி இறைத்தது
எனவே இந்தியில் தனக்கு மவுசு குறை யாததை அடுத்து போப்பச்சன் படத்தில் அசின் நடித்து வருகிறார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதுபற்றிய அனுபவங்களை அசினிடம் கேட்ட போது,
இந்தியில் நான் நடித்த மூன்று படங்களும் வெற்றிகரமாக ஓடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க விரு ம்புகிறேன். ஆனால் நல்ல கதைகளும், நல்ல மனிதர்களும் கிடைப்பது அரிதாக உள்ளது. நல்ல கதைகள் மூலம் ரசிகர்க ளை திருப்திபடுத்த முடியும். என்னை நான் பிரபலப்படுத்திக் கொள்வது இல் லை. அமைதியாக இருக்கவே விரும்புகி றேன். என் குடும்பத்தினர் ரொம்ப உதவி யாக இருக்கிறார்கள். எனக்கு முழு சுதந்தி ரமும் அளித்துள்ளனர். எனக்கு கணவராக வருபவர் புத்திசாலியாக இருக்க வேண் டும். படித்தவரா கவும் இருக்க வேண்டும்.