Sunday, March 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கற்பழிப்பு என்றால் என்ன? அதற்குண்டான தண்டனை என்ன‍?

இந்திய தண்டனைச் சட்டத்தில் கற்பழிப்பு என்பதை பிரிவுகள்375, 376 ஆகியவை வரையறை செய்கின்றன. மற்றும் தண்ட னையை தெரிவிக்கின்றன,

தற்போது அந்தப் பிரிவுகளில் தற்போது சில திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒரு ஆணின் உடலில் ஒரு பகு தி அல்லது ஒரு பொருள் முழு மையாகவோ அல்லது லேசாக வோ ஒரு பெண்ணின் உடலில் எந்த வடிவத்தில் நுழைய முற்பட் டாலும் இனி அந்த நிகழ்வு கற்பழிப்பாக வே கருதப்படும். ஆணுறு ப்பை வைத்துத்தான் முயற்சிக்க வேண் டிய அவசிய மில்லை.

உடலுறவிற்கு சம்மதம் கொடுக் கும் வயதினையும் சற்று உயர்த் தியிருக்கிறார்கள். தற்போதைய திருத்தத்தின்படி ஒருவனின் மனைவியே ஆனாலும் அவளது சம்மதத்துடன் உடலறவு கொள் ளும் பட்சத்தில் அவளது 18 வய்துக்கு கீழே இருந்தால் அது கற் பழிப்பாக கருதப்படும். ஏற்கனவே 15வய்துக்கு மேற்பட்ட மனைவி யின் சம்மதத்துடன் கொள்ளும் உடலுறவு கற்பழிப்பாக கருதப் பட மாட்டாது. இப்போது அதில் திரு த்தம் கொண்டு வரப் பட்டுள் ளது. இப்போது உடலுறவு என்பது எந்த ஒரு பாலியல் நடவடிக் கையும் குறிக்கும்.

இது தொடர்பான குற்றங்களை சரியாக விசாரிக்காத காவலர்களு க்கு தண்டனை அளிக்கவும் இந்தச் சட்டத் திருத்தத்தில் இடம் கொடுக்கப் பட்டுள்ளது

பிரிவு 376 C (1) குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் இருந்து இரு பால் குழந்தைகளையும் பாதுகாக்கி றது.

 

நான் படிக்கும் காலத்தில் எனது பேரா சியர் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வருகிறது. இது அவரது காலத்தில் நடந் தும் இருக்கலாம். அல்லது அவரது பேரா சிரியர் அவருக்கு சொன்னதாகக் கூட இரு க்கலாம்.

ஒரு கற்பழிப்பு . அதில் புண்ர்ச்சி நடந்து முடியும் போது மற்றவர் கள் பார்த்து விடுகிறார்கள். பார்த்தவர்களில் காவல் துறை ஆய்வா ளரும் அடக்கம். அவர்கள் குற்றவாளியைத் துறத்துகிறார்கள். குற் றவாளி அருகில் உள்ள ஆற்றில் விழுந்து தப்பிக்க முயற்சி செய் கிறார். ஆனால் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்டோர் அவ ரைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்கு உட் படு த்தி நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.

ஆனால் குற்றவாளி அதாவது கு ற்றம் சாட்டப் பட்டவர் விடுதலை யாகிவிடுகிறார்.

காரணம் இதுதான்.

வழக்குப் பதிவு செய்யும்போது குற்றம் நடைபெற்ற இடத்திலே யே நேரிடையாக பார்த்து கைது செய்ததாக வழக்குப் பதிவு செய் திருக் கிறார்கள்,

மருத்துவ பரிசோதனையின் போது அவரது ஆண்குறியில் விந்து இருப்பதான அறிகுறி இல்லை. ஆற்றில் விழுந்து நீந்தும் போது கழு வப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் பாதிக்கப் பட் டவரின் உடலில் விந்து இரு ந்திருக்கிறது. இது போன்ற நிலை அதுவும் அந்த இடத்தி லேயே கைது செய்யப்பட்டி ருப்பின் நிகழ வாய்ப்பில்லை என்றும். இது உள்நோக்கத் தோடு பதிவு செய்யப்பட்ட வழக்கு என்றும் கூறி விடுத லை செய்யப் பட்டுவிட்டா ராம்.

ஆற்றில் குதித்த நிகழ்வு பதிவு செய்யப் படவில்லை. பிற் சேர்க் கையாகச் சொல்லும்போது உள் நோக்கத்தோடு பதிவுசெய்யப்ப ட்ட வழக்கு என்ற வாதம் மேலும் வலுப் பெற்று விட்டதாம்.

வழக்குகளில் நிகழ்வுகள்ன் வரி சைக்கும், நடந்ததை அப்படியே தெரிவிக்க பதிவு செய்ய வேண்டி யதின் அவசியத்தையும் எங்களுக்கு புரிய வைக்க எங்கள் பேராசி யர் சொன்ன நிகழ்வு இது.

மேலும் விவரங்களுக்கு
http://mynation.net/rapelaw.htm

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

Leave a Reply

%d bloggers like this: