சாதிக்கு தீவைத்து, சாதிக்க நீ பிறந்தாய் மனிதா!
ஔவையாரின் பாடல்களில் ஒன்றான நல் வழி என்ற தலைப்பில் அமைந்துள்ள கடவுள் வாழ்த்து பாடலில் உள்ள சில முக்கிய வரி கள்
. . . . சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி . . . .
என்ற ஔவையின் பாடலை மாணவர்கள் கற்று, சாதி, அதனால் உண்டாகும் தீண்டாமை, பின் விளைவு கள் களையும் வண்ணம் அரசாங்கம் பாடப்புத்தகத்தில் அச்சிட்ட்டு அதை மாணவர்களுக்கு கற்பிப்பது மிகுந்த பாராட்டுக்குரிய செயலே!
ஆனால் , ஒருபுறம் சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஓவையின் பாடலை சொல்லிக் கொடுத்துக் கொண்டே பள்ளி யில் மாணவர்களை சேர்க்கும் போது நீ எந்த சாதியை சார்ந்தவன் என்பதை கூறும் சாதிச்சான்று எங்கே! அதை சமர் ப்பித்தால்தான் உனக்கு இந்த பள்ளியில் இடம் என்று சொல்லும் விசித்திரம் வே றெங்கும் காணாத இந்தியாவில் மட்டு மே காணும் விசித்திர விநோத செய்தி இது!
24 மே 2012 தேதியிட்ட புதிய தலைமுறை சமூக விழிப்புணர்வு வார இதழில் சாதிக்குத் தேவையா தனி ச்சான்றிதழ் ? (பிறப்புச் சான்றிதழிலே யே சாதியைக் குறிப்பிட்டும் விடலா மே? என்ற தலைப்பில் திரு. ட்ராவிட் என்பவர் எழுதியிருந்தார் இதனை சென் னை மடிப்பாக்கத்தில் வழக்கறிஞர் திரு. ஜி.எம்.ஷங்கர் அவர்கள் மிகுந்த ஆவே சத்துடன் மறுத்துள்ளார். மேலும் இவ ரது இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதிச் சான்றிதழ் பெறவுமில்லை. அதில் வரும் சலுகைகளையும் இவர் ஏற்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கீழே இவரது எண்ணங்களை வரிகளாக கொண்டு எழுதப்பட்ட மறுப்புரையும், விளக்கவுரையினை யும் உங்கள் பார் வைக்கு வைக்கின்றோம்.
முதலில் புதிய தலைமுறை பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை யும் அதனை தொடர்ந்து வழக்கறிஞர் திரு. ஷங்கர் அவர்களது மறு ப்புக் கட்டுரையும் வெளியிட்டிருக்கிறோம். இதனை படித்து, விருப்போ, அல்லது மறுப்போ தெரிவிக்க விரும்பினால், கட்டுரை யின் கடைசி பக்கத்தில் அவரது பெயரும் முகவரி, கை பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கொடுத்திருக்கிறோ ம். அவரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கி றோம்.