Saturday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (27/05) – "என் தப்பை நீ கண்டுகொள்ளாதே, உன் தப்பை நான் கண்டு கொள்ள மாட்டேன்…'

 

அன்புள்ள சகோதரிக்கு —

எனக்கு வயது, 50. அரசாங்க அதிகாரியாக பணியாற்றுகிறேன். என் மனைவி வயது, 48 அர” பணியி ல் இருக்கிறாள். எங்களுக்கு, இர ண்டு பெண்கள்; இருவருக்கும் திருமணமாகிவிட்டது. என்னு டைய மனைவி போல் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்.

சற்று குள்ளமாக, சாதாரணமாக இருந்தாலும், எனக்கு அடுத்த பிறவியிலேயும், அவளே மனை வியாக அமைய வேண்டும். அமைதியானவள். யாரிடமும் (உறவினர் உட்பட) அதிகமாக பேச மாட்டாள். கணவன் சொல் வதே மந்திரம். கணவனுக்கு உப சரணை செய்வதில், ஈடு இணை யே இல்லை. அப்படி இருந்தும், ஒரு பிரச்னை. பஸ்சில் செல்லும் போது, யாராவது இடித் தாலோ, உரசினாலோ அதை தடுக்காமல், நான் அதை பார்க்கிறேனோ என பார்ப்பாள். தன்னை மறுபடியும், மறுபடியும் பார்க்கும் ஆண்களை, இவளும் சுற்று சூழல் மறந்து, வித்தியாசமாக பார்ப்பாள்.

யாராவது வேலையாட்கள் சிரித்து பேசி, புகழ்ந்து பேசி, எடுபிடி வேலை செய்தால், அவர்களிடம் ஈர்ப்பு உண்டாகி, அவர்களை நினைத்து, என்னோடு கட்டிலில் படுத்து, சுய இன்பம் கொள்வாள்.

கோவிலுக்கு சென்றால், இளம் அர்ச்சகர்களின் திறந்த மார்புகளை நோட்டம் இடுவாள். கடவுளை பார்ப்பது கூட இல்லை. இந்த ஈர்ப்பு, அன்று இரவே தெரியும்.

உறவினர்கள், மற்றும் என் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால், அவர்க ளை மறைமுகமாக பார்த்து, பார்த்து ரசிப்பாள். கடற்கரைக்கு சென் றால், அங்கு கடலில் குளித்துவிட்டு வரும், ஜட்டி அணிந்த ஆண்களி ன், மர்ம இடங்களை பார்த்து ரசிப்பாள்.

ஆண்கள் சாலை ஓரம் நின்று சிறுநீர் கழிப்பதை மிகவும் ஆர்வ த்தோடு பார்ப்பாள்.

மேல் குறிப்பிட்ட செயல்களை தவிர, வேறு ஆண்களிடம், தவறான உறவு என்ற நிலைக்கெல்லாம் அவள் சென்றதில்லை.

என்னதான் என்னை நன்றாக அவள் கவனித்தாலும், அவ்வப்போது இந்த விஷயங்கள், என் நினைவுக்கு வந்து, அவள் மீது வெறுப்பை உண்டாக்கி விடுகிறது. மனதளவில் நான் புழுங்குகிறேன். யாரிட மும் சொல்ல முடியவில்லை. வெட்கமாக இருக்கிறது.

ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வாள் என்று கேட்டால், தவ றாக போக மாட்டாள் என உறுதியாக சொல்வேன்.

இதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை. அவளே அதை ஒப்புக் கொள்ளும் போது, அதை நான் சந்தேகபுத்திக்காரன் என்று எப்படி சொல்வது?

சகோதரி தயவு செய்து பதில் தரவும்.

— இப்படிக்கு உங்கள் சகோதரன்.
அன்புள்ள சகோதரருக்கு, உங்கள் கடிதத்தை வாசித்தேன்.

உங்களது மனைவியின் நல்ல குணங் களையும், கெட்ட குணங்க ளையும் பட்டியல் இட்டிருந்தீர். உங்களின் மனைவி, இரட்டை ஆளு மை உள்ள பெண்ணாக தெரிகிறார். கற்பனையில், ஆண்களுடன் உறவு கொள்ளும் நிம்போமேனியாக் பெண்ணாகவும், நிஜத்தில் கணவனுக்கு பணிவிடை செய்யும் பத்தினி பெண்ணாகவும் நட மாடுகிறார்.

உங்கள் மனைவியின் செய்கைகளுக்கான காரணக்காரியங்களை ஆராய்வோம்.

விடலைப்பருவத்தில், தன் பெற்றோர் தாம்பத்தியம் பண்ணுவதை, ஒளிந்திருந்து பார்த்திருப்பார் உங்கள் மனைவி. தவிர, பிளஸ் 2 படிக்கும் போதோ, கல்லூரி படிக்கும் போதோ தோழிகள் யாராவது, உங்கள் மனைவிக்கு சுயஇன்பம் காணும் பழக்கத்தை சொல்லிக் கொடுத்திருக்கக் கூடும்.

உங்களது மனைவிக்கு, கற்பனைசக்தி மிக அதிகம். தினம், தான் ரசிக்கும் ஆண்களை, கற்பனையில் உறவு கொண்டு, விசித்திர சுகம் காணுகிறார்.

தவறான பழக்கங்கள் உள்ள பெண்கள், திருமணத்திற்கு பின், கண வனுக்கு பயந்து, அப்பழக்கங்களை கைவிட்டு விடுவர். உங்கள் மனைவியின் கெட்டப் பழக்கங்களோ, திருமணத்திற்கு பின் கூடியு ள்ளன. காரணம், உங்களிடம் ஏதாவது பலவீனங்கள் இருந்திருக்கக் கூடும். அதை உங்களது மனைவி கண்டு பிடித்திருப்பார். “என் தப் பை நீ கண்டுகொள்ளாதே, உன் தப்பை நான் கண்டு கொள்ள மாட் டேன்…’ என, வாய்வழி ஒப்பந்தம் போட்டுக் கொண்டீர்களோ என்னவோ? தவிர, நீங்கள் மனைவியின் தீய செய்கைகளை அனிச் சையாக ரசிக்கிறீர்களோ, என சந்தேகப்படுகிறேன்.

ஆண்மைக் குறைவு உங்களுக்கு இருந்து, தாம்பத்திய சுகம் போ தாமல் வெறுத்துப் போய், உங்களின் மனைவி சுயஇன்பம் பக்கம் தாவினாரோ?

நன்றாக இருந்த மனைவியை, “அவனை பார்க்கிறாளோ, இவனை பார்க்கிறாளோ…’ என சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு துன்புறுத்தியி ருப்பீர்கள். உங்களை வெறுப்பேற்ற, உங்கள் மனைவி ஆடும் நாட கமோ இது?

சரி, இனி தீர்வை சிந்திப்போம்.

உங்களிருவருக்கும் திருமணமாகி, 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இரு மகள்களை பெற்று வளர்த்து, கட்டிக் கொடுத்து விட்டீர்கள். மூத்த மகள் வழி பேத்தி (அ) பேரன் கூட உங்களுக்கு இருக்கக் கூடு ம். உங்கள் மனைவி வயது 48. மெனோபாஸ் பீரியடை கடந்திரு ப்பார். இனியும் அவர் சுய இன்பத்தில் ஈடுபட்டால், பெண்ணுறுப்பில் ஏதாவது நோய்க்கிறுமி தொற்று ஏற்படக் கூடும்.

போதும். இதோடு உங்களிருவரின் தவறுகளை நிறுத்திக் கொள்ளு ங்கள்.

இருவரும் மனம் விட்டுப் பேசுங்கள். அவர் செய்யும் தவறுகளுக்கு மவுன சாட்சியாய் இருந்து இருந்து, அவர் மேல் வெறுப்பு மண்டி விட்டதை கூறுங்கள். ஆணோ, பெண்ணோ, இளமையின் உச்சத்தில் ஏதேனும் தப்பு செய்தால், ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும், இறைவ னுக்கு பயந்தோ, மனசாட்சிக்கு பயந்தோ, முதுமைக்கு பயந்தோ, தப்பு செய்வதை நிறுத்தி விடுவர். நீங்களும் நிறுத்தி விடுங்களேன்.

மனைவியின் செய்கைகளை, ஒரு தங்க மெடல் போல் பாவித்து, நெஞ்சில் குத்திக் கொண்டு திரிகிறீர்கள், அதையும் நிறுத்துங்கள்.

இருவரும் காசி, ராமேஸ்வரம் சென்று, கெட்டவைகளை விட்டு வாருங்கள். நிம்மதியான வாழ்வு அமையட்டும்.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

One Comment

Leave a Reply