Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என் ஆதரவு எப்போதுமே சென்னை அணிக்குத்தான் – த்ரிஷா

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்த்தா நைட் ரைடர் ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று மோதிய ஆட் டத்தை காண திரிஷா வந்திருந்தார். அவர் நேராக கொல்கத்தா அணியை ஆதரிக்கும் பிரமுகர்கள் உட்காரும் இடத்தில் போய் அமர்ந்தார். 

சென்னை அணியின் மஞ்சள் நிற ஆடையையோ, கொல்கத்தா அணி யினரின் நீலநிற ஆடையையே அணி ந்திருக்கவில்லை. வெள்ளை நிறடிரெஸ் உடுத்தி இருந்தார். திரி ஷாவை கொல்கத்தா ஆதரவாளர்கள் உரிமையில் பார்த்த ரசிகர்கள் அவர் மேல் ஆவேசமானார்கள். கை நீட்டிகோபமாக திட் டினார்கள். 

சென்னை அணி தோற்ற போதும் அவர் மீதான கோபம் இன்னும் அதிகமானது. இணையதள ங்களில் கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளனர். 

இதுகுறித்து திரிஷா கூறும்போது, என் ஆதரவு எப்போதுமே சென்னை அணிக்குத்தான். சபீனா கான் என் நெருங்கிய தோழி என்பதால் அவர் அருகில் போய் அமர்ந்தேன். இதனை ரசிகர்கள் சர்ச்சையா க்க வேண்டாம் என்றார்.

news in malaimalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: