Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கேட்ட கேள்விக்கு பதில் தராமல் பூசி மொழுகி பேசுவதுதான் நல்ல‍ மனிதருக்கு அழகா ?? —– வீடியோ


vs.


***

க‌டந்த ஞாயிறு இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் போலி கௌரவம் என்றொரு தலைப்பில் சூடான விவாதத்திற்கு வழக்க‍ம் போல் வித்திட்டார் கோபிநாத் அவர்கள்.

பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்களிடம் திரு. கோபிநாத் அவர்கள் கேட்ட கேளவிக்கு சரிவர புரிந்து கொண்டு,அதற்கு தகுந்த பதிலை பவர் ஸ்டார் திரு. சீனிவாசன் அவர்கள் கொடுக்க‍த் தவறியது ஏன்?

போலி கௌரவம் எனக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டு, தன்னுடன் 11 பேர் கொண்ட குழுவினை அமைத்து, அதிலே ஒருவர் வந்து சார் கூலிங் கிளாஸ் போட்டிருக்க‍லாமா? என்பன பற்பல கோணங்களில் பவர் ஸ்டார் அவர்கள் தனது போலி கௌரவத்தை முன்னிறுத்தி இருப்ப‍து எந்தவிதத்தில் நியாயம்?

கேட்ட கேள்விக்கு பதில் தராமல் பூசி மொழுகி பேசுவதுதான் நல்ல‍ மனிதருக்கு அழகா ??

என்னைப்பொறுத்த‍ வரை கோபிநாத்மீது எந்த விதமான குற்ற‍மு ம் சுமத்த‍ முடியாது?

சமூக சேவை செய்ய‍ விரும்புகிறவர் ஏன் ஒரு மருத்துவ மனை யை இலவசமாக கட்டி அதில் பல்வேறுநோய்களுக்கு ஆட்பட்ட‍ நோயாளிகளுக்கு இலவசமாக சிறந்த முறையில் மருத்துவம் செய்யலாம் அல்லவா?

சினிமாவில் நடிக்க‍ வேண்டும் என்ற எனக்கு ஆசை அதனால் தான் நான் சினிமாவில் நடிக்கிறேன் என்ற ஒற்றை வரியை தேங்காய் உடைத்த‍து போல் உடைத்திருக்க‍லாம் அல்லவா? அதை விடுத்து, தேவையற்ற‍ பூசு மொழுகல் ஏன்?


– vidhai2virutcham

One Comment

  • RADHA

    this show clearly showed who is dr.srinivasan. he is not even able to understand the question and intention of gopi.that’s all his intelectual level. i doubt his IQ.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: