Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்; அதற்கான தேர்தல் நடைமுறைகள் என்ன?

இந்தியாவின் 14-வது ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடக்கிறது. இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இந் திய முப்படைகளின் தலைமைத் தளபதி இவரே. சரி ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்; அதற்கான தேர்தல் நடைமுறைகள் என்ன?

வாக்காளர் கல்லூரி: முதல்வர்கள் மற்று ம் பிரதமரைப் போல, ஜனாதிபதி மக்க ளால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவ தில்லை. மாறாக, மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட சட்ட சபை எம்.எல்.ஏ.,க்கள் மற் றும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி. ,க்கள் அடங்கிய “வாக்காளர் கல்லூரி’ மூலம், ஒற்றை மாற்று ஓட்டு முறையில் (single transferable vote) ஜனாதிபதி தேர் வு செய்யப்படுகிறார். ஜனாதிபதி தேர்தலையும், தேர்தல் ஆணை யமே நடத்துகிறது.

இந்தியாவில் மொத்தம் (லோக்சபா 543 + ராஜ்யசபா 233) 776 எம்.பி.,க்களும், 4,120 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். எம்.எல்.ஏ.,க் களில் 28 மாநிலங்கள் மற் றும் டில்லி, புதுச்சேரி யூனிய ன் பிரதேச எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இத்தேர்தலுக்கு கணக்கில் கொள்ளப்படுகிற து. இத்தேர்தல், டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகம் மற்றும் அந்தந்த மாநில சட்ட சபை வளாகம் ஆகிய இடங்க ளில் நடை பெறும்.
 
ஜனாதிபதி ஆவதற்கான தகுதி
 
* இந்தியக் குடிமகனாக, 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
* ஊதியம் பெறும் மத்திய, மாநில அரசு பணி வகிப்பவராக இருக்கக் கூடாது.
* லோக்சபா எம்.பி., ஆவதற்கான தகுதி யைப் பெற்றிருக்க வேண் டும்.
* துணை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் கள், மத்திய, மாநில அமைச்சர்கள் இத் தேர்தலில் போட்டியிடலாம். அவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக் கப்பட்டால், முந்தைய பதவியை ராஜி னாமா செய்ய வேண்டும்.
* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.

* டெபாசிட் கட்டணம் 15 ஆயிரம் ரூபாய்.

ஜனாதிபதியின் அதிகாரம்
 
* லோக்சபா தேர்தலில் பெரு ம்பான்மை பெற்ற கட்சியை, ஆட்சிய மைக்க (பிரதமராக பதவியேற்க) அழைப்பது,
* பிரதமரின் ஆலோசனைப் படி, மத்திய அமைச்சர்க ளை நியமிப்பது, பார்லிமென்ட் கூட்டத்தொடரைக் கூட்டுவ து, அதில் உரையாற்றுவது இவரது பணிகள்.
* பார்லிமென்ட்டில் நிறை வேற்றப்படும் அனைத்து ம சோதாக்களும், ஜனாதிபதி யின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாகும்.
* பிரதமரின் அறிவுரைப்படி, மாநில கவர்னர்கள், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் தலைமை நீதிபதிகள், மத்திய அரசின் தலைமை வழக்க றிஞர், தலைமைத் தேர்தல் ஆ ணையர், வெளிநாட்டு தூதர்கள் ஆகி யவற்றை நியமித்தல்.
* அரசியல் சட்டப் பிரிவு 352ன் படி நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய , லோக்சபாவை கலைக்க, பிரிவு 356 ன் படி மாநில அரசைக் கலைக்க ஜனா திபதிக்கு அதிகாரம் உள்ளது.
* சுப்ரீம் கோர்ட்டின் தண்டனைக் காலத்தை குறைப்பதற்கும்; மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவும் இவருக்கு அதி காரம் உள்ளது.
 
மொத்த ஓட்டு எவ்வளவு:
 

ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த ஓட்டு மதிப்பு = (எம்.எல்.ஏ.,க்கள் + எம்.பி.,க்களின் ஓட்டு) மொத்த ஓட்டுகள் = 10,98,882 (5,49,474 + 5,49,408). இதில் “மெஜாரிட்டி’ பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுகிறார்.

எம்.எல்.ஏ., ஓட்டுகள்:

விதி 52 (2)ன் படி, “1971 சென்செஸ்’ மக்கள்தொகைதான், ஜனாதிபதி தேர்தலில் கணக்கில் கொள்ள ப்படுகிறது. ஒரு எம்.எல்.ஏ.,வு க்கு எத் தனை ஓட்டு என்பது கீழ்க்கண்டவாறு கணக்கிடப்ப டுகிறது. (உதாரணமாக) தமிழக த்தின் மக்கள் தொகை 4,11,99,168 பேர். எம்.எல்.ஏ.,க்க ளின் எண்ணிக்கை 234. இதன் படி 4,11,99,168/ (234*1000)= 176. ஒரு எம்.எல்.ஏ., வுக்கு 176 ஓட்டு. அதன்படி தமிழக எம். எல்.ஏ., க்களின் மொத்த ஓட்டு மதிப்பு (234 * 176) 41,184. இதன்படி அனைத்து மாநிலங்களையும் சேர்த்து எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதி ப்பு 5,49,474.
 
எம்.பி., ஓட்டுகள்
 
அனைத்து மாநில எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு / மொத்த எம்.பி., க்களின் எண்ணிக்கை; இதன் படி 5,49,474/776 = 708. இதன் மூலம் ஒரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு 708. இதன் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த எம்.பி.,க்களின் ஓட்டுமதிப்பு (776*708) 5,49, 408
– பாலமுருகன்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: