Thursday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாசகர் கேள்வியும், விதை2விருட்சம் இணையத்தின் விளக்க‍மும் வழிகாட்ட‍லும்

உங்கள் துணைவரை (வியை ) பிடிக்க‍வில்லையா? அவ ரை (ளை) விவாகரத்து செய் ய‍ . . .! (to Read this Article click that line) என்ற தலைப் பில் வெ ளியான இடுகையை படித்த‍ பவநிஷ் என்கிற நண் பர் கருத்தின் வாயிலாக கீழே அவருடைய ஒவ்வொரு கே ள்வியை கேட்டுள்ளார். அதற் கு விதை2விருட்சம் அளித்த‍ விளக்க‍மும் வழிகாட்ட‍லும் 

பவநீஷ்

வணக்கம் அன்பு தோழரே,என் பெயர் பவநீஷ் ..இந்த தலைப்பை நான் மறுக்கிறேன்,பாவப்பட்ட பெண்கள் கிமு வில் தான் ,படுபாவி பெண்கள்தான் இன்று அதிக ம்.காதல் திருமணமோ, பெற் றோர் பார்த்து வாய்த்த திரும ணமோ ,பெரும்பாலான மண முறிவுக்கு காரணம் மாமனா ரோ ,அல்லது மாமியாரோதான் என்பது என் அனுபவ கருத்து.

என்னுடைய திருமணம் மேற் கூறிய திருமணத்துக்கு அப்பா ற்பட்டது.சுமார் மூன்றரை வரு ட திருமண வாழ்வில் நானும்,என் மனைவியும் தொடர்ந்து வாழ்ந் ததோ ஆறு மாத காலம் கூட இருக் காது. தம்பதிகளுக்குள் ஏற்படும் சின்ன சின்ன ஊடல்கள் கூட,என் மாமியாரின் அழைப் பில்லா தலையீட்டால் ,எங்களுக்குள் சில்லென்ற கூடல்களை தவிர்த்து, தனிமையையும் தவிப்பையுமே மட்டுமே கொடுத்துக் கொண்டிரு க்கிறது.என் மாமியாரின் தலையீட்டை நானும் என் மனைவியும் தவிர்க்க முய ன்றும், என் மனைவியை மூளை சலவை செய்து ,எங்களுக்குள் நடக்கும் அன் றாட விஷயங் களை கேட்டு அறிந்துக் கொண்டு,பிரிவுக்கு பிள்ளையார் சுழி போட முய ல்கிறார்.இது குறித்து சட்ட ஆலோசனை கிடைத்தால், என் போன்ற எத்தனையோ கணவர் களுக்கு உதவியாய் இருக்கும்.

விதை2விருட்சம்

உங்கள் மனைவி, உங்கள் மீது ஏதேனும் வழக்கு நீதிமன்றத்தில் தொடுத்துள்ளாரா? அல்ல‍து நீங்கள் அவர்மீது

ரெஸ்டிடியூட் ஆஃப் கான்ஜுகல் ரைட்ஸ் தொடுத்துள்ளீரா? என்ற விவரம் எதுவும் தெரிவி க்காத நிலையில் இதுபற்றி ஆலோசனைகள் ஏதும் கூற இயலாது.

வ‌ழக்கு ஏதேனும் நிலுவையில் இருந்தால், அந்த வழக்கு எந்த மாதிரியான வழக்கு, என்பதை தா ங்கள் தெளிவுபடுத்தினால்தான் அதுபற்றிய தகுந்த ஆலோசனைக ளை தங்களுக்கு வழங்க முடி யும்.

என்றென்றும் தங்களது நட்பினை விரும்பும் விதை2விருட்சம்

பவநீஷ்

தங்களின் விரைவான மற்றும் கனிவான பரிசீலனைக்கு மிக்க நன்றி.பரஸ்பரம் எங்களுக்குள் அன் பும்,பாசமும் இருந்தாலும்,தன் தாயின் தூண்டுதலின்பேரில் ஒரு முறை காவல் நிலையத்தில் பொய் புகர் கொடுக்கப்பட்டது. பின் மீண்டு ம் சில நாட்கள் இனைந்து வாழ்ந் தோம்.மீண்டும் பிரிவு.

நான் குடும்ப நல நீதி மன்றத்தில் முறையிட நினைக்கிறேன்..என் மாமியாரை விட்டு விலகி,தனி குடும்பம் செல்ல, என் மனைவி யை வற்புறுத்துகிறேன். ஆனால், என் மனைவி என்னுடன் வந்தால் , தான் தற்கொலை செய்துக் கொ ள்வதாக மிரட்டுகிறார் என் மாமியார் .வளர்த்த தாயை மதிப்பதா, வந்த கணவனை மதிப்பதா என தவிக்கிறாள் என் மனைவி . இந்த குழப்பத்தில் ,நானும் அவ ளும் உடலாலும் ,மனதாலும் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறோம்.

விதை2விருட்சம்

உங்களது பிரச்சனையை சுமூகமான முறையில் நீதிமன்றம் மூல மாகவே தீர்த்துக்கொள்ள‍ முடியு ம்.அது எப்ப‍டி சாத்தியம் என்று தாங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் மனைவி உங்களோடு சேர்ந்து வாழ விரும்புவதாக தாங்கள் சொன்ன‍ தை வைத்துத்தான் அப்ப‍டி சொன் னேன்.

குடும்ப நல நீதிமன்றத்தில், ரெஸ்ட் டிடியூட் ஆஃப் கான்ஜிகல் ரை ட்ஸ் (Restitution of Conjugal Rights) என்ற சட்ட‍ப்பிரிவு உள்ள‍து. உங்கள் மனைவியை உங்களோடு சேர்த்து வைக்க‍ நீதிமன்றத்தில் முறையிட்டு, அதற்கான காரணத்தை அதாவது உங்கள் மனைவி யின் தாயாரால் தான் உங்கள் மனைவி உங்களுடன் சேர்ந்து வாழ மறுப்ப‍தை தகுந்த ஆதாரத்தோடு எடுத் துரைத்து, தகுதிவாய்ந்த வழக்க றிஞரை வைத்து வழக்காடுங்கள். (குடும்ப நீதிமன்றத்தை பொறுத்த‍ வரை வழக்க‍றிஞர்களை விட உங் களுக்குத்தான் அதிக மாக பேச வோ, அல்ல‍து வாதிடவோ வாய்ப் புகள் அதிகம்.

குடும்ப நல நீதிமன்ற நீதிபதி அவர்கள் குடும்ப கலந்தாய்வாளர் (ஃபேமிலி கவுன்சிலர்)-ரிடம் செல்ல‍ உத்த‍ரவிடுவார். அதன்படி நீங்களும் உங்கள் மனைவியும் அந்த கலந்தாய்வுக்கு செல்லுங் கள். அங்கே கலந்தாய்வாளர் தகுந்த விசாரணையுடன், தகுந்த ஆலோசனைகளை உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் வழங் குவார்.

மேலும் உங்கள் மனைவியிடம், அவரது தாயார், தற்கொலை செய்து கொள்வதாக எமோஷனல் பிளாக் மெயில் செய்வதையும், அது ஏன் செய்கிறார் என்பதையும், விள க்கி அதாவது உங்கள் மனைவியின் தாயாருக்கு தனது மகளின் வாழ்க் கையைவிட தனது வரட்டு கௌரவ ம்தான் முக்கியம் என்ற உள் நோக்க‍த்தை, உங்கள் மனைவிக்கு புரிய வைப்பார். இந்த கவுன்சிலிங் 1 முறை இருமுறை மட்டுமல்ல‍ பேமி லி கவுன்சிலர் எத்த‍னை முறை உங் களை வரச்சொல்கிறாரோ அத்த‍ னை முறையும் தாங்களும் தங்க ளது மனைவியும் அவர் முன் ஆஜராகி தகுந்த ஆலோசனை பெற் று வரும்பட்சத்தில், உங்களது மனைவிக்கு மனமாற்ற‍ம் ஏற்பட்டு, தெளிந்த சிந்தனையோடு உங்களுடன் வாழ வரு வார் என்ப தில் எள்ள‍வும் சந்தேகமில்லை.

மேலும் உங்கள் மனைவி யை அவ்வ‍ப்போது தனி யாக சந்தித்து, அவரி டம் உள்ள‍ நல்ல‍ குணங்களை யும், நல்ல‍செயல்களை அடிக்க‍டி சொல்லி மனதா ர பாராட்டுங்கள். உங்கள் மனைவியிடம் காதல் மொழி பேசு ங்கள். இசமயத்தில் உங்கள் மனை வி உங்கள் மீது கோபம் கொண் டாலும், அதை நீங்கள் பொறுட்படு த்தாமல், சற்று பொறுமையு டன், தெளிவுடனும் சிந்தித்து, செயல்படுங்கள். இது உங்கள் மனைவி உங்களுடன் வாழ அவரது விருப்ப‍த்தை தூ

ண் டுவதாக அமையும்

இல்ல‍ற வாழ்வை நல்ல‍றமாக வாழ்ந்திட‌ விதை2விருட்

சம் வாழ் த்துகிறது.

என்றென்றும் தங்களது நட்பினை விரும்பும்
விதை2விருட்சம் குழுவினர்.

பவநீஷ்

தங்களின் கனிவான அறிவுரைக்கு ஆயிரம் நன்றிகள்.என்னுள் நம் பிக்கை வி

தைகளை விதைத்த உம் அன்புக்கு என்றும் கடமைப்பட் டிருக்கிறேன் .

விதை2விருட்சம்

தாங்கள் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுட னும் வாழ்ந்திட விதை 2விருட்சம் இணையத்தின் வாழ்த்துக்க‌ள்

2 Comments

 • mathi

  நான் கல்யாணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. முன்பிருந்தே எனக்கு கணவர் நடந்து கொள்வது பிடிக்கவில்லை.நானும் முயற்சி செய்து சொல்லி சொல்லி பார்த்தேன் அவர் திருந்தவே மாட்டேன்கிராறு நான் மனதளவில் பாதிக்கப்பட்டு விட்டேன்.எனக்கு உதவிக்கு யாருமே இல்லை பின்பு நான் ஒரு பெண் என்பாதலேயே வெளி அனுபவம் இல்லாமல் பயந்து கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் மகளை எடுத்து ஓடி விடலாமான்னு தோணுது எனக்கு விவாகரத்து பெறுவது எப்படி என்றும் எவ்ளோ காலம் ஆகும் என்றும். செலவு எவ்ளோ ஆகும் என்றும் தெரியபடுத்தவும்.
  பாதிப்பின் காரணங்கள் :
  1.என் கணவர் என்மீது பலவகையில் என் உறவினரிடம் என்னைப்பற்றி தப்பு தப்பாக பேசுகிறார்
  2.நிறைய பேரிடம் பணம் வாங்கி அதனை உரிய இடத்தில் செலுத்தாமல் செலவு செய்துவிடுகிறார். பின்பு அதை சொல்வதுகூட இல்லை பாதிக்கப்பட்டவர் வந்து சொல்லும் போதுதான் தெரிகிறது. அதனை நான் தட்டி கேட்டால் என்னை என் உறவுகளிடம் நான் மரியாதை இல்லாமல் பேசுவதாக ஒவ்வொரு முறையும் பொய் சொல்கிறார்.
  3.யாரவது வந்து என்னை ஏன் இப்டி பேசுகிறாய் என்று கேட்டால் நான் நடந்தவற்றை சொன்னேன். அதற்க்கு என் கணவர் இவர்களால் தான் என் குடும்பத்தில் பிரச்னை வருது என்று அவர்களை சத்தம் போட்டு விடுகிறார். இதனால் யாருமே கேட்க வருவதில்லை
  4.நானே ஏன் குடும்ப விஷயத்தை ஏன் வெளியில் சொல்கிறிர்கள் என்று கேட்டால் இனி இப்டி நடக்காது என்று சொல்லி மறுபடியும் குடும்ப விஷயத்தை வெளியில் சொல்வது.
  5.பின்பு என்மேல் சந்தேகபடுகிறார். இதனை என் அம்மாவிடம் சொல்லி என் அம்மாவையே எனக்கு எதிராக மாற்றிவிட்டார்
  6.யாரும் எனக்கு உதவுவதற்கு தயங்குகிறார்கள். நான் சொன்னது சில. எனக்கு நீங்கள் நல்லதொரு ஆலோசனை வழங்குவீர் என்று எதிர்பார்கிறேன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: