Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாளை நாடுதழுவிய பாரத் பந்த்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 31&ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என்று பா.ஜ. தலை மையிலான தேசிய ஜன நாயக கூட்ட ணி அறிவித்தது. 
 
அதேபோல இடதுசாரி கட்சிகளும் 31 ம் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத் துள்ளன. அதன்படி, நாடு முழுவ தும் நாளை பந்த் போராட் டம் நடக்கிறது. பந்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்க ளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
 
பந்த் போராட்டத்தின்போது அசம்பா விதம் ஏதும் நடக்காமல் தடுப்பதற்கா க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அரசு அலு வலகங்கள், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முன்பு போலீ சார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
 
5 மாநில தேர்தல் மற்றும் நா டாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொ டரால் சில மாதங்களாக பெட் ரோல் விலை உயர்த்தப்படவில்லை

.பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த நிலையில், 
பெட்ரோல் விலையை இது வரை இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி கடந்த 23ம் அறிவிப்பு வெளி யானது.
 
இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பின. பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகி ன்றனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல் லாம் இங்கு பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 18 முறை பெட்ரோல் விலை உய ர்த்தப்பட்டுள்ளது.
 
–  govindaraj

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: