நீங்கள் முதுமையில் இளமையானவரா? உங்களை பொடியன் என்று ஏளனம் செய்கிறார்களா? அப்படி என்றால் உங்களுக்காகத் தான் இந்த பதிவு! உங்களது வயதிற்கேற்ற மரியா தையை பிறர் தர முத்தான பத்து வித்து க்கள்
1. உங்கள் உருவத்திற்கு ஏற்ற ஆடை அணிவதை விட உங்கள் வயதிற்கேற்ற ஆடையை அணியுங்கள்.
2. உங்கள் தலைமுடியை பெண்ணாக இருந்தால், வாரி அழுத்தமாக பின்னாமல், சற்று தளர்ந்தவாறு பின்னுங்கள், ஆணாக இருந்தால் தலைமுடி வாருதலில், வயதானர்கள் பாணியை கடைபிடியுங்கள்.
3. உங்களைப் பார்க்கும் யாராக இருந்தாலும், அவருக்கு முதலில் அறிமுகமாவது உங்களது கண்க ள்தான், ஆகவே சற்று வயது முதி ர்ந்தவர்கள் அணியும் மூக்கு கண் ணாடியை அணியுங்கள்.
4. நீங்கள் நடக்கும்போது, வேகத் தைக் கூட்டாமல், சற்று நிதானமா க நடந்து பாருங்கள்.
5. தங்களது பேச்சில் அன்பும் அதே நேரத்தில் உங்களது வயதிற்கே உரிய அதிகாரமும் தொனிக்க பேசுங்கள்.
6. உங்களுடன் பழகும் மனிதர்கள், தங்களை விட வயதில் இளையவர் களாக இருக்கும் பட்சத்தில், அவர்க ளை தம்பி, தங்கச்சி என்ற அடை மொழியுடன் அழையுங்கள்.
7. நீங்கள் பேசும்போது, 100 வார்த் தைகள் பேசும் இடங்களில் அழுத்த மான 10 வார்த்தைகளைப் பேசி அம ருங்கள்.
8. உங்களை யாராவதுபாப்பா என்று அழைத்தால், உடனே நீங்கள் அவரை வாங்க தம்பி போங்க தம்பி மூச்சுக்கு முந்நூறு தடவை அழையுங்கள்.
9. உங்களை விட வயதில் சிறியவர்கள் உங்களுடம் எந்த விஷயத்திற்காவது போட்டிப்போட்டால், நீங்க ள் அவர்களுடன் சரிநிகர் சமமாக நின்று சண்டையி டாமல், அவர்களுக்கு நீங் கள் விட்டுக்கொடுங்கள்.
10. நீங்கள் ஒரு விழாவுக்குச் செல்வதாக இருந்தால், அங்கு விழா முடியும்வரை எப்போதும் அங்கு உங்களைவிட தோற்றத்தில் இளமையானவர்களுடனேயே இருங்கள்
=> விதை2விருட்சம்