நயன்தாரா பட வாய்ப்பு பாவனாவுக்கு போனது. சுதீப் நடிக்கும் கன்னட படம் ‘பச்சன்’. இப்படத்தில் நயன் தாரா ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண் டிருந்தார்.இதையடுத்து படவேலைகளை முடுக் கி விட்டார் இயக்குனர் சஷாங்க். இந்நிலையில் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் நயன்தாராவுக்கு பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து படத்திலிருந்து வெளியேறி னார். திடீரென்று நயன் தாரா வெளியே றியதால் ஷூட்டிங் தொடங்குவதில் குழப் பம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ஹீ ரோயினாக பாவனா தேர்வு செய்யப்ப ட்டார். பருல் மற்றும் தீபா சன்னிதி என மேலும் 2 ஹீரோ யின்கள் தேர்வு செய்யப் பட்டனர்.
இதுபற்றி இயக்குனர் கூறும்போது, தமிழில் அஜீத் படத்திற்கு நயன் தாரா தனது கால்ஷீட் கொடுத்திருப்பதால் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதனால்தான் அவர் படத்திலிருந்து வெளியேறினார். தற்போது பாவனா ஒப்பந்தம் செய்யப்ப ட்டிருக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத் திரம் என்பதால் ஹீரோயின் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தினோம்.
இவரைத்தவிர வேறு ஹீரோயினை இந் த வேடத்துக்கு பொருத் திப்பார்க்க முடிய வில்லை. பாவனா எங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்வார். ஏற்கனவே விஷ்ணு வர்த்தனா என்ற படத்தில் சுதீப், பாவனா இணைந்து நடித்திருக்கின்றனர். வெற்றி ஜோடி மீண்டும் இணைவது பிளஸ். இரு வருக்கும் கெமிஸ்ட்ரி நன்கு ஒத்துப்போ கும் என்றார்.