Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"மீட்ட‍ருக்கு மேல் சேவைசெய்யும் "அபூர்வ ஆட்டோக்காரர்" – இந்த தகவலைப் படிக்க ஐந்து நிமிடங்கள் ஒதுக்குவீர்களா ???

அபூர்வ ஆட்டோக்காரர் மீட்டருக்கு மேல் வாழ்த்து!

*’மீ*ட்டருக்கு மேல் எக்ஸ்ட்ரா ஏதாவது போட்டு வாங்க முடியுமா?’ 
என்று பரபரக்கும் ஆட்டோக் காரர்க ளுக்கு மத்தியில்… முதியோர், ஊன முற்றோர், பார்வையற்றோர் உள்ளிட் டோருக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி சேவை செய்து கொண்டிருக்கிறார் 27 வயது இளைஞரான பஞ்ச துரை! மதுரை மாவட்டம் உசி லம்பட்டி ஏரியாவில் அவரை சந்தித்தோம். வெகுளித்தன மாகவே பேசினார். ”பக்கத்து ல இருக்கிற புத்தூரு தான் என க்கு சொந்த ஊரு. சின்ன வயசுலருந்தே நம்மால முடி ஞ்ச வரைக்கும் அடுத்தவங்க ளுக்கு உதவியா இருக்கணும் னு நெனப்பேன். அந்த நென ப்புத்தான் இப்ப என்னை இங்க கொண்டாந்து நிறுத்தியிருக்கு.
ஆரம்பத்துல முறுக்கு யாவாரம்தான் பாத்தேன். அது கையைக் கடிச்சிருச்சு. அதுக்கப்புறம் என் பொண்டாட்டியோட நகைகளை அடமானம் வெச்சு அப்புடி இப்புடி புரட்டி இந்த ‘ஷேர் ஆட்டோ’வை வாங்குனேன்.‘ எந்தத் தொழில் செஞ்சாலும் அதால நாலு பேருக்கு நன் மை இருக்க ணும்’னு எங்க அம்மா அடிக்கடி சொல்லும். அந்த சொல்படி தான் , இய லாதவங்களுக்கு மட்டும் கட ந்த ஏழு வருஷமா இலவச ஆட்டோ சேவையை செஞ்சுக் கிட்டு இருக்கேன். இது ஒண்ணும் பெரிய சாதனை இல்லைங்க… ஏதோ என்னால முடிஞ்சது…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அங்கு வந்த டிராஃபிக் போலீஸ்காரர் ஒருவர், ”ஏய்… இங் கெல்லாம் நிப்பாட்டக் கூடாது. வண்டிய எட்ரா…” என்று அனல் வீச் சாக வார்த்தைகளைக் கொட்டி விட்டுச் சென்றார். வண்டியை இன்னொரு இடத்துக்கு நகர்த்திச் சென்று நிறுத்திய பஞ்சதுரை, ”நான் படிச்சது ஆறாப்புதாங்க. ஆனாலும், என் வாயிலருந்து இதுவரை ஒரு கெட்ட வார்த் தை கூட வந்ததில்லை… படிச்ச போலீஸ்காரர் எம்புட்டு மரி யாதையா(!) பேசிட்டுப் போறா ரு பாத்தீங்களா..? என்னைப் பற் றி தெரிஞ்ச பல போலீஸ்கா ரங்க எந்த இடத்துல பாத்தா லும், ‘வாப்பா துரை… கூல் டிரி ங்க்ஸ் சாப்பு டுறீயா?’ன்னு கேக் குறாங்க. அவங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஆளு. இது மட்டுமா..? நான் இலவச சேவை செய்ற தால ஆட்டோ ஸ்டாண் டுல எனக்கு டமில்லைன்னுட்டாங்க. அதுவும் நல்லதுதான். சும்மா ஒரே இடத்துல நின்னுக்கிட்டு வெட்டி அரட்டை பேசிக்கிட்டு இருக்க துக்கு நம்மபாட்டுக்கு சுத்திக்கிட்டே இருந்தோம்னா ஏதோ, முடியா த நாலு பேருக்கு உதவலாம் பாருங் க…” என்று நிறுத்தினார்.
இவரது ஆட்டோவில் சல்லிக்காசு செலவில்லாமல் தினமும் சவா ரி செய்யும் முதியவர்களான கமால் பாட்ஷா, சுப்பிரமணிய ன், மாயாண்டி ஆகியோர் நம்மி டம், ”நாங்க எல்லாருமே இந்தப் பொழப்புக்காக தினமும் உசில ம்பட்டிக்கு வந்து போறவ ங்க. ஒதவி ஒத்தாசைன்னா சொந்தப் புள்ளைககூட உத வாதுக. ஆனா இந்தத் தம்பி, எங்களை காலை யிலயும் சாயந் தரமும் கூட்டிட் டுப் போயி கூட் டியாந்து விடுது. ‘ஒரு அஞ்சு ரூபாயாச்சும் வங்கிக்கப்பா..ன்னா கேக்க மாட்டேங் குது. மொத்தத்துல, தம்பியோட ஆட்டோ தான் இப்ப எங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மாதிரி!” என்றனர்.”இவர் இப்படி இருந்தால் வீட் டுச் செலவை எப்படி சமாளிக்கிறீர் கள்?” என்று பஞ்சதுரையின் மனைவியை சந்தித்துக் கேட் டோம். அதற்கு, ”வாட கைக்கு ஆட்டோ ஓட்டுனா ஓன ருக்கு வாடகைப் பணம் குடுப்போம்ல… அந்தக் காசு மக்களுக்கு பயன்படுதுன்னு நெனச்சுக்க வேண்டியது தா ன்!” – கணவரைக் காட்டிலும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர் வோடு பேசினார் அவரது மனைவி ஜோதி லட்சுமி! அவரை பெரு மையோடு ஏறிட்ட பஞ்ச துரை, ”நாலு பெரியவங்கள இலவசமா ஆட்டோ வுல கூட்டிட்டுப் போயி இறக்கி விடுறப்ப, ‘நீ மகராசனா இருப்பே…’ன்னு வாழ்த்து றாங்களே… அதுக்கு முன்னாடி பணங்கா செல்லாம் தூசுங்க…” என்றார். பெயரில் தான் பஞ்சமெல்லாம்… மனசால் கோடீஸ்வரர்!
முகநூலில் நண்பர்களால் பகிரப்பட்ட‍ தகவல்
விதை2விருட்சம் கருத்து

“இவர் பஞ்ச துரை இல்லீங்க பஞ்ச் துரை”

2 Comments

  • anthonyraj

    பஞ்சதுரைக்கு என் பணிவான வணக்கம் ,தருமம் தலை காக்கும்,செய்த தருமம் என்றும் வீண் போகாது.தொடரட்டும் உங்கள் சேவை ,நன்றி வணக்கம்.அந்தோணிராஜ்,பெங்களூர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: