Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னைக்கு வரவும் மாட்டேன், தமிழ் படங்களில் நடிக்கவும் மாட் டேன் என்றுகூறி, பயந்து ஓடிய‌ நடிகை

பேச்சுவாக்கில் எதையாவது கூறிவிட்டு பின்னர் அது பிரச்னையான வுடன் உடனே மன்னிப்பு கேட்பது ஒரு சில நடிகர், நடிகையர் இடையே வாடி க்கையாகிவிட்டது. அந்த வகையில் புதிதாக சர்ச் சையில் சிக்கி இருப்பவர் நடிகை தன்யா. இவர் 7ம் அறிவு மற்றும் காதலில் சொதப்புவது எப்படி போ ன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய ட்விட்டர் வலை தளத்தில் தெரிவித்த கருத்து தமிழக மக்கள் இடையே பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, தமிழகம் தண்ணீருக்காக முதலில் கர்நாடக அரசிடம் பிச் சை கேட்டது, அதைக்கொடுத்தோம். அடு த்தது மின்சாரத்திற்காகவும் கர்நாடகத்தி டம் தமிழ்நாடு பிச்சை எடுத்தது, அதை  யும் கொடுத் தோம். அதுமட்டும் இன்றி நடந்த முடிந்த ஐ.பி.எல்., போட்டியிலும் கூட இந்த நிலை தமிழகத்திற்கு தொடர் ந்தது. பெங்களூரு அணி தோற்றதால் தான் சென்னை அணியே இறுதி போட்டி யில் நுழைய முடிந்தது என்று கூறியுள் ளார். தன்யாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இவரின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரி வித்துள்ளனர்.

இதனிடையே உடனடியாக தன்னுடைய கருத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார் தன்யா. மேலும் இனிமேல் நான் சென்னை பக்கமே வர மாட்டேன் என்றும், இனி எந்தவொரு தமிழ் படத்திலும் நடிக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டு தன்னுடைய சொ ந்த ஊரான பெங்களூரு க்கு சென்றுவிட்டார்.

news in dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: