Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்ய உறவிற்கு உற்சாகமூட்டும் படுக்கையறை உள் அலங்காரங்கள்

படுக்கை அறை என்பது மனதிற்கு நிம்மதியும், உடலின் சோர்வையு ம் போக்கும் இடமாகும். அந்த இடத்தை அழகாக வைத்திருந்தால் தான் ஒரு உற்சாகம் பிறக்கும், உறவிற்கான மூடு வரும். சின்ன சின்ன அலங்காரங்கள் செய்வ தோடு எந்த வித இடைஞ் சல்களும் இல்லாமல் வைத்துக் கொள்வது தாம்பத்ய உறவிற்கான நமது உற்சாகத்தை அதிகரி க்கும்.

நல்ல பூட்டா போடுங்க

பெட்ரூமோ, பாத்ரூமோ இரண்டிற்குமே தாழ்பாள் சரியில்லை என்றால் மனதிற்கு நிம்மதி இருக்காது. நம்முடைய அந்தரங்கமான விசயங்கள் யார் கண்ணிலும் பட்டுவிடுமோ என்ற பயமும் பதற்றமும் இருந்து கொண்டே இருக்கும் எனவே சரியில்லா லாக் இருந்தால் உடனடியாக சரி செய்யுங்கள். அப்பொழுது தான் பதற்றமின்றி செயலில் இறங்கமுடியும்.

ஜன்னலுக்கு திரைகள்

படுக்கை அறை ஜன்னல்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வே ண்டும் சரியாக பூட்டுகிறதா? இடைவெளி எதுவும் இருக்கிறதா? வெ ளியில் இருந்து பார்த்தால் அறையில் உள்ளவைகள் தெ ரிகிறதா? என்பதை சரிபார்த் துக் கொள்ளவேண்டும்.

படுக்கை அறை ஜன்னல் வழி யாக நேரடியாக வெயில் தாக் கினால் இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரிக்கும். என வே வெயில் உள்ளே நுழை யாத அளவிற்கு திரைச்சீலைகளை போடுங்கள். மாலை நேரத்தில் லேசாக தண்ணீரில் நனைத்தும் போடலாம். அறைக்குள் குளுமை யா ன காற்று நுழையும். அப்புறமென்ன ஏசி கூட தேவையில்லை. அறைக்குள் இயற்கையான கா ற்று வீச உற்சாக மூடுக்கு மாறு வீர் கள்.

பூச்சிகளை ஒழியுங்கள்

படுக்கை அறையின் முக்கிய எதிரிகள் கரப்பான் பூச்சி, கொசு தான். இரண்டும் இருந்தால் எரி ச்சல்தான் வரும். எனவே பூச்சி கள் நுழை யாதவாறு அறை யை சுத்தமாக வைக்கவேண்டும். அப்பொழுதுதான் எந்த நேரத்தில் என்ன பூச்சி கடிக்குமோ என்ற பயமின்றி இருக்கலாம். அறையில் பூச்சி தொந்தரவுகளை தவிர்க்க நறுமணம் கமழும் பூச்சி விரட்டிக ளை மாட்டி வைக்கலாம்.

படுக்கை விரிப்புகள்

படுக்கை, தலையணைகளை எப் பொழுதுமே சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். பார்ப்பதற்கு அழுக்காக இருந்தால் உற்சாகமெல் லாம் வடிந்து விடும். எனவே வாரம் ஒருமுறையாவது படுக்கை விரிப்பு, தலையணை உறை ஆகியவைக ளை துவைத்து உபயோகிக்க வேண் டும். உங்கள் படுக்கையை இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது எடு த்து வெயிலில் காயவைத்து பின்னர் உபயோகிக்கலாம். இதனால் அலர்ஜி ஏற்படுத்தும் பூச்சிகள் இருந் தாலும் இறந்து விடும். ஏதாவது துர்நாற்றம் வீசினாலும் மூடு ஏற்படாது. எனவே மாலை நேரத்திலே யே இதெல்லாம் செக் செய்து ரூம் ப்ரெஸ் னரை உபயோகித்து அறை யை தயார் செய்யலாம்.

மிதமான வெளிச்சம்

படுக்கை அறையில் மனதிற்கும் உடலுக்கும் உறுத்தாத வெளிச் சம் இருக்கவேண்டும். அப்பொழு துதான் மங்கலான அந்த விளக்கு ஒளியில் காதல் விளையாட்டு விளையாட உடலும், மனமும் தயாராகும். நம்முடைய படுக்கை அறையில் உள்ள பொருட்களை வாரம் ஒரு முறை இடம் மாற்றி வைக்கலாம். இதனால் புதிதாக இருப்பதுபோலவோ அல்லது புதி ய இடத்திற்கு சுற்றுலா சென்றிருப்பது போல காதல் உணர்வுகள் தோன்றும்.

ரொமான்ஸ் திரைப்படங்கள்

படுக்கை அறையில் டிவி இருந்தால் மனதிற்கு பிடித்த ரொமான்ஸ் திரைப் படங்கள் பார்க்கலாம். இருவர் மட்டு ம் தனித்திருக்கும் அந்த நேரத்தில் மனதிற்கு பிடித்த திரைப் படங்களை பார்ப்பதனால் தாம்பத்ய உறவிற்கான மூடு அதிகரிக்கும். காதலிக்கும் தரு ணங்களில் அல்லது திருமணமான புதிதில் வாங்கிக் கொடுத்த பரிசுப் பொருட்கள் அலாரம் போன்றவைகளை படுக்கை அறையில் அழகா க அலங்கரிப்பது தாம்பத்ய உறவிற்கான உற்சாகத்தை அதிகரிக்கும்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: