Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மீண்டும் சர்ச்சையை கிளப்பும் நித்தியானந்தாவின் "புதிய வீடியோ"

நித்யானந்தா, அண்மையில் வெளியிட்டு உள்ள ஒரு காணொளியில் தெரிவித்து உள்ள கருத்துக் கள், சைவ சித்தாந்த வட்டங் களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதனால், மதுரை ஆதீனத்தின் பாரம்பரி யமும், திருஞான சம்பந்தரின் வரலா றும், சைவ சித்தாந்தமும் தெ ரியுமா என, சைவ அறிஞர்க ள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சைவ ஆதீனங்களில், துறவிகளை உருவாக்கி, அவர்களில் தகுதி உடையவரை ஆதீன கர்த்தராக நியமிப்பதில் பல் வேறு படிநிலைகள் உள்ளன. அவற்றில் சைவ சமயம் பற்றிய போது மான வரலாற்று அறிவு, அந்த சமயத்தின் முக்கிய ஆதார நூல்களில் தோய்ந்த நுட்பமான அறிவு, சைவ சமய சடங்குகள் குறித்த தெளிவு ஆகியவை ஒவ்வொரு படிநிலையிலும் பெறப்படுகின்றன. இம் மூன்று தகுதிகளுமே நித்யானந்தாவுக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் தற்போது சைவ அறிஞர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

“திணிக்கப்பட்ட சித்தாந்தம்’:மதுரை ஆதீ னத்திற்கு வந்த பின், ஆதீன கட்டடத்தின் மாடியில் உள்ள பாஸ்கர சேதுபதி இல்ல த்தின் முன்பு, “தியான சத் சங்கம்’ என்ற நிகழ்ச்சியை நித்யானந்தா தினமும் கா லையில் 7 மணியளவில் நடத்தி வருகி றார். இந்த நிகழ்ச்சியின் பிரதானமானது அவரது சொற்பொழிவு.

கடந்த, மே 11ம் தேதி நடந்த சொற்பொழிவில் அவர் கூறியிருப்பதன் சாராம்சம்:

மதுரை ஆதீனம் சைவ சித்தா ந்த பாரம்பரியத்தை சேர்ந்த தல்ல. சைவ சித்தாந்தம் என்ற தத்துவம், 800 ஆண்டுகளுக் கு முன்பு தான் உருவானது. ஆனால் ஞானசம்பந்தர் கி.பி., ஒன்றாம் நூற்றாண்டில் இரு ந்தவர். இரண்டுக்கும் இடை யில், 1,200 ஆண்டுகள் வித்தி யாசம் உள்ளது.சைவ சித்தாந் தம், தருமையாதீனத்தை நிறுவிய குருஞான சம்பந்தரால் உருவாக்க ப் பட்டது. தருமை, திருவாவடுதுறை போன்ற ஆதீனங்கள் நிறைய சொத்துக்கள் உள்ள மடங்கள். மதுரை ஆதீனத்திற்கு அந்தளவு சொ த்துக்கள் கிடையாது.அதனால் பிற்காலத்தில் தங்கள் செல்வாக் கால், தருமை ஆதீனம், மதுரை ஆதீனத்தின் மீது சைவ சித்தாந்தத் தை திணித்து விட்டது. இவ் வாறு அவர் பேசி உள்ளார்.

தேவாரத்தில உள்ளதா? “யூ ட்யூப்’ இணையதளத்தில் கா ணொளியாக பதிவாகி உள்ள இந்த சொற்பொழிவில், மேலு ம் நித்யானந்தா பேசியதாவது :மதுரை ஆதீனம் வேதாந்த பாரம்பரியத்தை சேர்ந்ததும் அல்ல. சம்பந்தருக்குப் பின், 300 ஆண்டுகள் கழித்துதான் ஆதிசங்கரர் தோன்றுகிறார். அப்படியா னால் மதுரை ஆதீனம் எந்த மரபைச் சேர்ந்தது? நான் ஞான சம்பந் தரின் தேவாரம் முழுக்கப் படித்து விட் டேன். அதில் ஓரிடத்தில் கூட சைவ சித்தாந்தம் என்ற வார்த்தையோ அல்லது சித்தாந்தக் கருத் தோ வரவில்லை.

ஆனால் அதில், “வேதநெறி தழைத்தோ ங்க’ என்ற வார்த்தை மட்டும் வருகிறது. இதில் இருந்து மதுரை ஆதீனம் வேத மரபை சேர்ந்தது என்பது தெளிவாகிவி ட்டது. ஆக, வேதாந்தம், சித்தாந்தம் இர ண்டுமே வேதத்தின் கிளைகள், அதாவ து மதுரை ஆதீனத்தின் கிளைகள். அத னால் ஆதி சங்கரரும் மதுரை ஆதீனத்தி ன் சீடர் தான்.இவ்வாறு நித்யானந்தா கூறி உள்ளார்.

சேக்கிழார் சொன்னது..:சொற்பெழிவில் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை, சைவ சித்தாந்த அறிஞர்கள் முற்றிலும் நிராகரிக்கின்றனர்.

இது குறித்து, சைவ சித்தாந்த பேரறிஞரும், மதுரை காமராஜர் பல் கலை தமிழ் துறை முன்னாள் தலைவருமான, ஆனந்தராஜன் கூறு கையில், “தொல்காப்பியத்தி லேயே சைவ சித்தாந்தக் கூறுகள் உள்ளன. சைவ சித் தாந்தம், தமிழர்களின் செல் வம் என, ஜி.யு.போப், தமது திருவாசக மொழிபெயர்ப்பி ல் கூறி இருக்கிறார். ஞான சம்பந்தரின் காலம் கி.பி., 7ம் நூற்றாண்டு என்பது வரலாற் று அறிஞர்களின் முடிவு,” என்றார்.

மேலும், “”அவரது தேவாரத்தில் சைவ சித்தாந்த கருத்துக்கள் நிறை ய உள்ளன. ஞானசம்பந்தரின் அவதாரம் பற்றி பேச வந்த சேக்கிழார் தமது பெரிய புராணத்தில், “வேதநெறி தழைத்தோங்க’ என்று சொ ல்கிறார்,” என, தெரிவித்தார்.

தப்பான தகவல்:

இதை வலுப்படுத்தும் வகையில், தருமை யாதீன வித்வான், தா. குருசாமி தேசிகர் கூறுகையில்,”நித்யானந்தா சொன்னது தப் பான தகவல். சைவ சித்தாந்தம் என்ற வார் த்தையை, ஞானசம்பந்தருக்கு முன்பிருந்த திருமூலர் பயன்படுத்தியுள்ளார். மணிமே கலையில் சைவ சித்தாந்தத் தத்துவம் பற்றி குறிப்புள்ளது. சைவ சித்தாந்தத்தை தோத்திரம் மூலம் ஒழுங்குப்படுத் தியவர் ஞானசம்பந்தர். சாத்திரம் மூலம் ஒழுங்கு செய்தவர் மெய்கண்டார். இது எதுவும் தெரியாமல் நித்யானந்தா பேசியுள்ளார்,” என்றார்.

news in dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: